torsdag 29. mars 2018

வேதனை வேதம்

வேதனை வேதம்
கசையடிகள் வாங்கிய
சதைப் பிண்டம் ஒன்றின்
வேதனை வேதம் இது 
பாருலகம் பார்த்திருக்க
பாய்கிற உதிரத்தில்
துளிர் விடும் சிந்தனை.
கசையின் முட்களில் துடிக்கும்
இரத்தம் தோய்ந்த
சதைத் துண்டுகளைப் பாரீர்!
மறையும் மனித நேயத்தை
உறையும் குருதியாய் காண்பீர்!
முள்முடி தலையை பிளந்து
தேவனின் விழியை
துழைக்கும் வேகம் பாரீர்!
வார்த்தைக் கணைகளால் உடைத்த 
கண்ணீர் ஊற்றைக் காண்பீர் !
விழும் அடிகளில்
ஓய்வை நோக்கிய
பரமனைப் பாரீர்!
சோதனைத் தொடர்களில்
நிம்மதி கேட்பதை உணர்வீர்!
மரிக்கும் நிலையில்
புளித்த காடியை புசிப்பதை பாரீர் !
அடுக்கும் கடன்களில்
நோய் பிணி வதைப்பதைக் காண்பீர்!
கண்ணீர், கடவுளின் காயத்தில்
கலப்பதைப் பாரீர் !
கலப்பட முகங்களால்
கலங்க வைத்த தருணங்கள் காண்பீர் !
கிழிந்த தோல்கள் நடுவே
வெண் சதை பாரீர்!
கொடிய களவின் நடுவே
உளறிய பொய்கள் காண்பீர் !
அன்பரின் பிளந்த கால்களில்
பாறைகள் மோதுவது பாரீர் !
வெடிக்கும் வறுமையில்
துடிக்கு வயிறுகள் காண்பீர் !
சிலுவை சொல்லும் வேதம் ஏற்பீர் !
வாழ்க்கை தத்துவ ஞானம் பார்ப்பீர்!
# கவிதையின் காதலன்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...