søndag 17. juni 2018

மறக்குமோ நெஞ்சம்.... (17-06-2006 - 17-06-2018)


மறக்குமோ நெஞ்சம்....
ஆனதம்மா ஆண்டு பனிரெண்டு
மறையவில்லை காட்சி எம் விழியிரண்டு
கோரத் தாண்டவத்தின் பிடியில் நின்று
பாதுகாத்ததம்மா உன் கரம் அன்று.
இன வெறியர்களின் அழித்தொழிப்பு
எம்மவர் கொண்ட பரிதவிப்பு
துப்பாக்கிச் சன்னங்களின்
சலசலப்பு
இவற்றை மறக்குமோ எம் நினைப்பு.
எம்மவர் வாழ்வாதாரத்தை
எரித்தான்
அதைக் கடல் நீரோடு கரைத்தான்
அக்கினியால் எம்மை அழித்தான்
சொல்லொண்ணா துயரத்தைக் கொடுத்தான்.
கொலை வெறிப் படையினை மறித்தாய்
வீசிய குண்டின் வீரியம் குறைத்தாய்
சீறிய சன்னங்களை காலில் மிதித்தாய்
உன் பிள்ளைகள் முழுவதையும் நீ காத்தாய்.
ஊர் கூடி முழுவதும் ஓலமிட்டோம்
எம் கண்ணீர் வெள்ளத்தால் உன் பாதம் தொட்டோம்
அகலட்டும் இன்நிலை என
அபாயமிட்டோம்
உன் அன்பின் கருணையை அன்று கண்டோம்.
சில நூறு துப்பாக்கிகள் எம்மை நோக்கியது
பல நூறு தோட்டாக்கள் எம்மைத் தாக்கியது
அத்தனை வாதைகளும் பனி போலாகியது
வெற்றி அன்னையின் அருட்கரம் எம்மைத் தாங்கியது.
வாதை உன் கூடாரத்தை அண்டவில்லை
பல இரவைக் கழித்தோம் இங்கு வீடு சென்று விடவில்லை
அட்டூழியத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை
கொடிய காட்சிகளை நெஞ்சம் மறக்கவில்லை..
இவற்றை மறக்குமோ எம் நெஞ்சு?

Emart Croos

fredag 25. mai 2018

உடக்கு பாஸ் மண்டபம்...

உடக்கு பாஸ் மண்டபம்...

திருப்பாடுகளின் காட்சிக் கூடமிது
தத்ரூபமாய் அரங்கேறும் இடமிது
நம் முன்னோரின் கலை வடிவமிது
எமது பாரம்பரிய கலைப் பொக்கிஷமிது.                                      எழுபத்தைந்து அடி நீளமானது
அகலமோ அறுபத்தியொன்று அடியானது
முருகைக் கற்களால் உயர்ந்தது

சுண்ணாம்புக் களியும் அதனுடன் சேர்ந்தது.
நூற்றுக்கணக்கில் படிக்கட்டுக்களானது
உயர் வில் வடிவில் சுவர் உண்டானது
திருப்பங்களையும் தளங்களையும் கொண்டது
அன்றைய பெறுமதியோ பதினைந்தாயிரமானது.
கட்டி முடித்து நூறாண்டு கடந்தது

இருந்தும் இது உறுதியாய் நிற்குது
பல தலைமுறைகள் கூடக் கடந்தது
நம் கண்களுக்கு இன்றும் வியப்பானது.
பரந்த பரண்கள் ஏற்பாடானது
கீழே சுரங்க அறைகளும் உண்டானது
உயர்ந்த கூரை முகடுகள் தோன்றுது
பல பொறியியலாளர்களையும் இது கவருது.
வன் செயல் நாட்டில் உண்டானது

நம்மவர் வாழ்விடம் ரெண்டானது
பாஸ் மண்டபம் அகதி முகாமானது
லட்சம் ரூபா பொருட்களும் களவானது.
மண்டபத்தின் நிலையோ உருக்குலைந்தது
பல கலைப் பொருட்களும் பழுதடைந்தது
ஆண்டுகள் பல விரைவாய் கடந்தது
பல கலைஞர்களின் உயிரும் பிரிந்தது.
ஊரின் அமைவும் விசாலமானது
சனத் தொகையின் அளவும் அதிகமானது
பாஸ் மண்டபத்தின் பயன்பாடு குறைந்தது
இன்று வௌவ்வால்களின் உறைவிடமானது.
நடக்குமோ பாஸ் என்ற கேள்வி எழுந்தது
எம்மவர் இதயத்தை அது ஆழ குத்தியது
இளைஞர் படையணி விளித்தெழுந்தது
பெரியோரின் துணையும் அதனுடன் இணைந்தது.
காலத்தின் தேவைக்கேற்ப அரங்கு அமைந்தது
அதைப் பார்த்தவர் கண்கள் அகல விரிந்தது
இவன் பேசாலையான் என வியக்குது
நம்மவர் கலைப் பயணம் இன்றும் தொடருது.

torsdag 17. mai 2018

ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா !

ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! 

ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! நினைவால் என் நெஞ்சம் பிளக்கு தம்மா ! என் அண்ணனின் கல்லறை வெடிக்குதம்மா ! உள்ளக் குமுறலில் மனம் துடிக்கு தம்மா !
நந்திக் கடலில் என் அம்மாவின்
சதையைக் கழுவிக் கரைக்கையில்
ஒட்டிய ரத்தம் இன்றும் மணக்குதே!
பட்டினிக் கடலில் மூழ்கியே மடிந்த என் தம்பியின் வயிற்றுக் குடல் நெஞ்சத்தில் கனக்குதே !சேற்றுத் தண்ணீர்
செங்குருதி கொப்பளிக்க,
மேனிப் புண்களில் சகதி வறண்டு
சாக்கடை வாசம் தெளிக்க,
கிரவல் தண்ணீரில்
நாவை நனைத்ததை
நினைத்திட வலிக்குதே !
பகையே அறியா பருவக் குருத்துக்கள் உலோகக் கோல்களால்
உரசிச் சரிந்ததை நினைத்தால்
நெஞ்சம் பிளக்குதே !
வெண்ணுடலின் புண்ணுடல் ஆற்றிட,
பச்சிலை பறித்ததை
உள்ளம் நினைக்குதே!
வடலிக் கருக்கில் குடலைப் பிழந்து
அழுகிய துண்டை வீசினோம்.
தமிழின் அம்மனப் படுக்கை
நிலையைக் கண்டு
அனுதாப அலைகளை வீசினோம் !
விடத்தல் முள்ளால் உடம்பில் புதைந்த தோட்டாக்கள் அளந்தோம்!
மொட்டக் கத்தியால் முள்ளந் தண்டுகள் வெட்டிப் பிளந்தோம்!
பீரிட்ட குருதியை பீரங்கி தடம் தந்த மண்ணள்ளித் தடுத்தோம்!
வேர் விட்ட விழுதுகள்
தூரோடு குடை சாய
வாய் பொத்தி அழுதோம்!
கருவுக்குள் சிசுவுக்குச்
சமாதிகள் - வெந்தோம்!
எம் குறும்புகள் உடல் மீது
எறும்பூறக் கண்டோம்!
வன்னி நிலங்களை
வயிற்றால் உழுது,
குருதிப் புலங்களைக் கட்டி அழுது,
உரமாய் புதைத்த
தமிழ்த்தாயின் புதல்வரை ,
மரமாய் வியந்து மரியாதை செய்கிறோம் .
வலியை சுமந்தும் கருவைப் பிசைந்தும் உடலைச் சிதைத்திட்ட போதிலும் ,
எம் கனவைச் சுமந்து மணலில் புதைந்த உறவின் நினைவில் கூடுவோம் !
மே 18 எம் உணர்வலைகளை முகாரியாக்கி மனிதம் தொலைத்தோர் செவிப்பறைகளில் பெருவெடிப்பை உதிர்க்கட்டும் !
#
கவிதையின் காதலன், பேசாலை .

ஒத்தை நாவல் மரம்
ஒத்தை நாவல் மரம்.....
Emat Croos

பேசாலையின் தெற்குப் புறம்
செல்லும் வீதியின் வலப் புறம்
உயர்ந்து நிற்கும் தனிமரம்
குறிப்புக் காட்டும் ஒத்தை நாவல் மரம்.முளைத்து நிற்கும் நாம் பார்க்குமிடம்
இருந்தும் பெற்றதில்லை அவை சிறப்பிடம்
ஒத்தை நாவல் போல் தனியிடம்.
காய் கனி தந்திருந்தது பின்னைய நாளில்
மறுப்புச் சொல்வதற்கில்லை இவ்விரு நாளில்
முதிர்ச்சியால் பலன் ஓய்ந்தது இன்றைய நாளில்.
களைப்பாறும் அதன் நிழல் வாட்டம்
எடுத்த விறகை ஒன்று கூட்டும்
தலையில் சுமந்து வரும் மயிலாட்டம்.
கூடை மீனைத் தோளில் தாங்கி
தண்ணித்தாளை நின்று வீடு நோக்கி
வழியில் ஓய்வெடுப்பார் இதில் தங்கி.
ஊரில் இருந்து பார்க்கையிலே
இதன் இருப்பிடமோ அடர்ந்த காட்டினிலே
நம் கண்களுக்குத் தெரியும் தூரத்திலே.
ஊரும் பெருத்தது நாலா திக்குமாய்
குடிமனை காணிகள் அமைந்தது நெருக்கமாய்
ஒத்தை நாவலும் தெரியுது பக்கமாய்.
அதனுள் அழகிய கூடமைத்து
புனித அந்தோனியார் சுரூபம் வைத்து
வேண்டுதல் செய்தோம் அவர் செயல் நினைத்து.
வீழ்த்தியது அதை உடைத்துத் தள்ளி
பின் வாங்கவில்லை அதன் நிலையை எண்ணி
உருவாகியது அவ்விடம் புதிய பள்ளி.
பேய் பிசாசு அலையுதென்பார் சிறியார்
பில்லி சூனியம் நடக்குதென்பார் அறியார்
யாவையும் அடக்க வருகிறார் புனித அந்தோனியார்.

நம்ம காட்டில் உண்டு பல நாவல் மரம்
அதிகம் பூத்திருந்தது முன்னைய நாளில்
விறகெடுக்கும் பெண்கள் கூட்டம்
காவு தண்டி கூடை தூக்கி
முன்னைய ஆண்டு காலத்திலே
காலங்கள் கடந்தது வேகமாய்
ஒத்தை நாவல் குடைந்தெடுத்து
காலத்தின் சூது கவ்வி
முனிப்பாய்ச்சல் உண்டென்பார் பெரியார்

torsdag 10. mai 2018

காதல் புயல் கொண்டு தாக்கினால் ?

காதல் பிரிவில் ஒருமையாய் அலைந்த நாட்களில், சிந்தனை அலைகள் தாக்கி ஏற்படுத்திய வடுக்கள் கொண்டு வெறுப்பு வேதம் எழுதிய போது ...........
என்னைக் காதல் புயல் கொண்டு தாக்கினால்
வேரோடு சாயும்
மரமாவேன் என்றாயோ ? 
கடல் கடந்த காதல் யுகத்தை
கரையில் வீசி என்ன பயன் ?
வெட்டிய பனையில்
கள்ளைத் தோண்டும்
கன்னி உனக்கு
அனுபவப் புதிர்களில்
விடை தருகிறேன்.
உன் அழைப்பில் உருகிய நாட்கள்
கடந்தது பெண்ணே !
காவியத் தூதுகளின் கடதாசிகளைக்
கருக்கிக் குளிர் காய்ந்தாயே !
நான் தழல்களால் வேள்வி செய்து வாழ்கிறேன் என்செய்வாய்?
என் கட்டிளம் தேகத்தை
காதல் பசியால் வாடச் செய்தாயே !
என் உணவுக் கால்வாய்கள்
துறவு பூண்டு ஆகாரத்தை நிராகரிக்கும்,
என் செய்வாய் ?
கவிதைகள் புனைந்த பொழுதெல்லாம் வலிக்கும் வார்த்தைகளால்
என் வாக்கியங்களை உடைத்தாயே ! இலக்கணம் அருந்தி
திடகாத்திரத் தமிழ் வைத்துள்ளேன்
என் செய்வாய் ?
காத்திருக்கச் செய்து
வேதனைக் காற்றால்
என் முகத்தில் விசிறி அடித்தாயே !
துரோகத் தடிகளால் அடிபட்டு
மெருகேறி நிற்கிறேன்
என்செய்வாய் ?
ஊரார் வாயில் உலையிட்ட கரும்பாக்கி என்னை சக்கை பிளிந்தாயே!
புகழ் மழையை தித்திக்கும் சாறாக்கி நாவினிக்கச் செய்து விட்டேன் என்செய்வாய் ?
தலைவன் என்று சொல்லி
சிலையாக்கி சந்தியில் நிறுத்தினாயே!
நினைவுப் பொக்கிசமாய்
பாதுகாப்பு அரண் அமைத்து
நிலைக்கிறேன்
என் செய்வாய் ?
மான் விழிப்பார்வையால் மயக்கி
பாமரன் காதலை
மானபங்கம் செய்தாயே !
மின்னல் கீற்றிடம் பயிற்சி பெற்று பார்வைகளைப்
பிரித்து எதிர்கொள்கிறேன்
என் செய்வாய்?
பறவை எச்சமாய் என்னைக்
காணும் இடங்களில் எல்லாம்
கறை கொண்டு எறிந்தாயே !
அழுக்கேறிய உடையணிந்து
வலம் வருகிறேன்
என்செய்வாய்?
என்னைக் காதல் புயல் கொண்டு தாக்கினால்
வேரோடு சாயும் மரமாவேன்
என நினைத்தாயோ ?
# கவிதையின் காதலன்.

tirsdag 8. mai 2018

இப்படிக்கு இவர்கள்......!


இப்படிக்கு இவர்கள்......!

தொட்டதும் உடையும்
அப்பள மனது !
ஏகாதிபத்தியம் அவ்வப்போது சுரண்டினாலும்
நொறுங்காமல் நெகிலும் ஜீவன்கள் !
வியர்வை ஊற்றால்
மலையைப் பெயர்த்து
மடியில் போடும் மனோதிடம்!
அழுக்குகள் தான்
இவர்கள் பூசும்
அலங்காரத் திரவியம் !
முடியாது என்ற உச்சரிப்பை
அகராதியில் தேடும்
அகிம்சை வாதிகள் இவர்கள்!
ஏன் ? எதற்கு ? எப்படி? என்ற
பகுத்தறிவு வார்த்தைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் !
மாக்ஸியத்தை மார்போடு பூசினாலும் முதலாளித்துவத்தால்
மாதம் தோறும் சுடப்படுபவர்கள்!
தேனீரே பல வேளை
வயிற்றுப் புண்களுக்கு
மருந்திட்டுச் செல்லும்!
புது உடைகளால்
நிராகரிக்கப்பட்ட பரம்பரை இவர்கள்! ஆனாலும் வாங்குதிறனில்
இவர்களின் வல்லமையோ
விண்ணைப் பிழக்கும்!
தனக்கான எதிர்காலத்தை
குடும்பச் சூழ்நிலையால்
செதுக்கத் தவறியவர்கள்!
வானொலிப் பெட்டிக்குள்
வசந்தக் காற்றைத் தேடுபவர்கள்!
வயிற்றுப் பசியென்றால்
வலுவாற்றலை புசிப்பவர்கள்!
காலநிலைகளுக்கு கட்டுப்படாத காளையர்கள் இவர்கள் !
கலங்காது உழைக்கும்
திறனாளர் இவர்கள் !
இப்படிக்கு இவர்கள் தொழிலாளர்கள்...!
# கவிதையின் காதலன்
.

tirsdag 1. mai 2018

#வைகாசி_01

ழ,ல,ள கரங்கள் இணைந்து
தொழிலாளி ஆனானே !
சிகரங்களும் அண்ணார்ந்து பார்க்க வானாளாவி நின்றானே !
தகரங்களிலும் தங்கத்தை
அழகுற வார்ப்பானே !
முக்காலத்திலும் ஓய்வின்றி
உழைத்து ஓடாய் ஆனானே !
திரைகடலோடியும் தேனான
திரவியங்கள் சேர்ப்பானே !
திறனற்ற நிலத்தையும் உழுது
பலன் கண்டு களிப்பானே !
ஆடிப்போன வீதியிலும் வாகனத்தை
ஆடாது செலுத்திடுவானே !
வாழ்வில் தீராத துன்பங்கள்
கண்டாலும் துவளாது துடிப்பாயிப்பானே !

mandag 30. april 2018

சம்பேதுறு பட்டணமும் மூவிராச பட்டணமும்

ில் இ்ற்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்னா் இந்த இடம் ஒரு கத்தோலிக்க பட்டணமாக, கத்தோலிக்க திருச்சபையின் முகவாியாகத் திகழ்ந்துள்ளது. இந்த ஆலயத்தைத் தாிசிக்க வேண்டும் என்ற எனது பல்லாண்டுக் கனவு இப்போது நனவாகியதில் மகிழ்ச்சி! உச்சி வெயில் வேளையில் முள்பற்றைக் காட்டைக் கடந்து தோட்டவெளி பங்கு மக்கள் சிலாின் உதவியோடு இந்த இடத்தைச் சென்றடைந்தோம். இந்த ஆலயத்தைச் சுற்றி மக்கள் பனை மற்றும் தென்னந்தோட்டங்களை உருவாக்கியுள்ளாா்கள். காலப்போக்கில் இந்த இடம்கூட திருச்சபைக்கு கிடைக்காத நிலை ஏற்படலாம்.
இந்த ஆலயமும் இடமும் மன்னாா் மறைமாவட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமானது. ஆழமான, விாிவான ஆராட்சிக்குாியது. இதே காலப்பகுதியில் எழுச்சிபெற்றிருந்த இன்னுமொரு இடம் எருக்கிலம்பிட்டி கிராமத்தின் இன்னுமொரு பகுதியில் உள்ள
கிழக்குவாடி என்ற இடத்தில் அமைந்துள்ள சந்தொம்மையாா் பட்டினம்! இதுவும் கத்தோலிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். ஆனால் இந்த இடத்திற்குக்கூட இன்று போக முடியாதபடி இது கிராம மக்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.Roitan Suresh Miranda As I know, this is the original place of Most of the Pesalai people. Once, it was a coastal city connected with Thutukudi in India. During the cholera disease period, most of this city people died by this disease. The hospital was in Kaataspathiri ( now called Siruthopu). The people who were cured in this hospital, did not return back to Sampethuru and settled next to Moovirasar Pattinam (East part of Pesalai). The original name of eastern part of Pesalai was “Moovirasar Pattinam”(Three kings city)
That time the main road was on construction. Since Main road (Peer Saalai) was established, the new settlemtn was named peer saalai thitam ( main street settlement). Later, during the British period, the name Peer Salai Thittam was changed as Pesalai and wrote in Railway station and post office and now is called Pesalai
That time, the original Mannar Talaimannar road was called “Peradi Padu road”. Now that road is no more. But you can see the big trees (Peruku Maram) in one line, two kilometer inside the jungle from Pesalai to Mannar in land side of present A 14 main road. Part of the road is called “St. Lourds street” in Pesalai and” Saanthipuram street” in Mannar. During Portuguese period, the churches were established close to that road, such as Siruthopu church, Karisal Church, Thotaveli Church, Vedha chatchigal Church, Konayan Kudiyurup church etc. Most of this villages period died during the cholera disease period.
My grandma told this history when I was child. She told that her family displaced from Sampethuru Village to Peer Saalai thitam ( Pesalai) and they had lot of land in Samperhuru. Since they lost most of their family members in Smapethru village, they did not go back and neighbor village people encouraged their land.
While I travel from Pesalai to Mannar during my child period, I could see lot of catholic cemetery structure at sea side between Karisal and Oolaithuduvai, which my grandparent’s cemetery. During the conflict time, those structures were destroyed by unknown people. 
Persalai Thittam ( Pesalai) was with St. Fatima Church. After the Sampethuru city people settlement, the church was called victories church (may be because of victory from the cholera disease but not sure). Now the church have both name Victory’s church and Fatima Church
Up to now During the church feast in Victories Church, Pesalai, they sing with two original village names as mentioned below.

“Mannar Moovirasar pattiman inum mahimai nirai persalai thittamum”

søndag 29. april 2018

"றானா றையன்னா..." (மன்னார் மாவட்ட அம்பா)

"றானா றையன்னா..." (மன்னார் மாவட்ட அம்பா) 

-------------------------------
கரைவலைத் தொழில் செய்யும்போது பாடப்படும் அம்பா பாடல்களில் ஒன்று.
கலைஞர் திரு.ஜெகநாதன் குரூஸ், தோழர் உதயன் மற்றும், கலாபூஷணம் சூசை அம்புரோஸ் குலாஸ்.fredag 27. april 2018

நாராய் நாராய் செங்கால் நாராய்,,,, பேசாலைதாஸ்

இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே முத்தமிழ் விழா போட்டி நடை பெறும் . இயல் இசை நாடகம் என்று இந்த போட்டிகள் நடக்கும். எனது மகாவித்தியாலயம் இயல், இசை, நாடகம் எல்லாவற்றிலும் வெற்றிகளை குவிக்கும். அந்த வெற்றிகளைக்குவிக்க அரும்பாடுவார் எங்கள் அறிவுத்தந்தை துரம் மாஸ்டர் அவர்கள். பேச்சு போட்டிகளுக்கு மிரியம், வினி, செல்வா, நான் அதிகமாக கலந்து கொள்வதுண்டு. இசைப்போட்டிக்கு வேலுச்சாமி அதிகமாக கலந்து கொள்வார். இனியது கேட்பின் என்ற அவ்வையாஅரின் பாடலும், நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற செய்யுளையும் துரம் மாஸ்டர் பண்ணிசைத்து பாடுவது இன்னமும் என் நினைவுச்சுழில் வந்து போகின்றதே! இனி செய்யுளை வாசியுங்கள். நான் பொழிப்பு சொல்லவேண்டிய அவசியம் இல்லை

‘’நாராய் நாராய் செங்கால் நாராய்
 பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே’’

வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து தன்னுடைய நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் எடுத்துக் கூறியதை, நகர சோதனைக்காக அவ்வழியே சென்ற பாண்டிய அரசன் கேட்டு, இவர் மீது இரக்கம் கொண்டுதான் அணிந்திருந்த சால்வையை அவர் மீது போர்த்திச்  சென்றான்.. மறு நாள் காவலாளிகளை அழைத்து, புலவரைத் தேடிக் கண்டு பிடித்து, அவரை வருத்தாது கொண்டுவரும்படி ஆணையிட்டான்.. அவைக்குவந்த புலவரை அரசன் வெகுமதி அளித்துக் கௌரவித்தான்  அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 19. april 2018

நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி)

நம்ம ஊரு இலுப்பையடி...
(இலுப்பை மரத்து அடி)

நம்ம ஊரு இலுப்பையடி
சொல்லும் பல சேதியடி
கடந்து வந்த பாதையடிஅதை திரும்பிப் பார்த்தால்நியாயமடி!வரவேற்பு அன்னை சுருபமடி
எம்மை அழைப்பாள் கையை விரித்தபடி
வருவோர் போவோர் நின்றபடி
அதை வணங்கிச் செல்வார்
முறைப்படி!
பாட்டி கதைகள் சொல்லும்படி
முன்னர் இலுப்பை மரமொன்று நின்றதடி
அதன் காரணம் கருதிக் கொண்டபடி
பின்னர் இலுப்பையடியென பெயர் பெற்றதடி!
வரலாற்றுக் குறிப்பில் உள்ளபடி
நம்மவர் ஒன்று சேர்ந்த படி
உயர் மக்கள் வரவை ஏற்ற படி
மகிழ்ந்து செல்வார் அழைத்த படி!
ஈர்பத்து வருடங்களின் முன்னமடி
இவ்விடம் காவல் இடப்பட்டு இருந்ததடி
ஊரின் கண் நாம் வாழ்ந்த படி
நம்மவர் பட்ட துன்பமோ கோடியடி!
வெற்றி அன்னை வரும் பாதையடி
தடைபட்டு போனது பல வருடமடி
அன்னையின் பாதம் பட்டதடி
இவ்விடம் புத்துயிர் மீண்டும் பெற்றதடி!
பழைய சந்தைக் கட்டிடம் உடைந்ததடி
மின் தரும் நிலையமும் தகர்ந்ததடி
பல கடைகள் பாழ் அடைந்ததடி
இருந்த இலுப்பை மரமும் வீழ்ந்ததடி!
இன்றைய நிலையில் உள்ளபடி
பல வர்த்தக நிலையங்கள் இயங்குதடி
புதிய நூல் நிலையமும் அமையுதடி
மீண்டும் பரபரப்பு இவ்விடம் ஆகுதடி!
எத்தேசமும் வாழு ஊர் கடந்தபடி
எத்தனை நாள் கழி நீ இஷ்டப்படி
ஊர் திரும்பும் வேளை சிரித்தபடி
உன்னை வரவேற்கும் நம்ம ஊரு இலுப்பையடி!
சொர்க்கமே என்றாலும்
நம்ம ஊரப் போல வருமா?
18/4/2018

ஊரைச்சுத்தி ஓடிப்பாரு


 


மறக்குமோ நெஞ்சம்.... (17-06-2006 - 17-06-2018)

மறக்குமோ நெஞ்சம்.... ஆனதம்மா ஆண்டு பனிரெண்டு மறையவில்லை காட்சி எம் விழியிரண்டு கோரத் தாண்டவத்தின் பிடியில் நின்று பாதுகாத்ததம்மா உன் க...