கடவுள் படைக்கும் முன்னும் படைப்பின் பின்னும் கண்ட கனவு பலிக்கின்றது அவ்வாறு படைப்பேன் இவ்வாறு படைப்பேன் என்றே படைத்தார் அவ்வாறு உலகைப் படைத்தார் இவ்வாறு மனிதனைப் படைத்தார் அவனே மாறிக்கொண்டான் உலகத்தையும் மாற்றிக் கொண்டான் மாறிய மனிதன் மார்க்கத்தைக் கண்டான் மனதிலே ஏக்கத்தைக் கண்டான் மன நோயையும் கண்டான் மருந்தும் தந்தான் பலனில்லையே உடல் நோய்களையும் கடனாக வட்டி போட்டு வாங்கிக் கொண்டான் தேடியது பல நாடியது சில ……… தெரு வீதிகளில் அலங்கோலமாய் நாற்றமானது கணக்கில் இல்லை பல்கிப் பெருகச் சொன்னான் அழுகிச் சாகச் சொல்லவில்லையே கொடுத்து உதவச் சொன்னான் தடுத்து சேர்க்கச் சொல்லவில்லை கடவுள் நினைத்ததை மனிதன் மாற்றினான் கடவுள் மறைத்ததை நினைவுகளில் முதலாக்கினான் நினைத்ததையும் முடித்தான் நினையாததையும் முடித்தான் குழப்பத்தில் தானே வீழ்ந்தான் இறுதியில் கடவுளின் சிந்தை துளிர்கின்றது தன்னால் படைக்கப்பட்டவன் தன் பிள்ளையாய் நடக்க வேண்டும் என்ற கொள்கை சுடர் விடுகின்றது அவன் கண்ட கனவாக……
Ingen kommentarer:
Legg inn en kommentar