søndag 16. april 2017

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!


உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரபு கலைவடிவம். இது பொம்மலாட்ட வைகையை சார்ந்ததாக இருப்பினும் இது பொம்மலாட்டம் அல்ல. மரத்தினாலும் வைக்கோல் உடம்பினாலும் உருவாக்கப்பட்ட உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் திருப்பாடுகளின் காட்சி ஆகும். மனிதர்களின் நடிப்பை வைத்து திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்படும் போது, அங்கு தெய்வீகம், அற்றுப்போய் இயேசுநாதாராக நடித்த அந்த நபரின் நடிப்பு பேசப்படுவதால் அங்கு தெய்வீகம் என்பது இல்லாது போகின்றது. ஆனால் பேசாலை மக்களினால் காட்டப்படும் திருப்பாடுகள். பேசாலை மக்களினால், பய பக்தியாய் ஆரதிக்கும் கர்த்தருடைய உடக்கு இங்கே நடிக்கும் போது, உண்மையில் நாம் வணங்கும் கார்த்தராகி இயேசு நம் கண் முன்னால் பாடுகள் அனுபவிப்பது போன்ற ஒரு பிரமையை மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுகின்றது. இதுவே பேசாலை உடக்கு பாஸின் மகாத்மியமாகும். உலகிலேயே வேறெங்கும் இல்லாத இந்த உன்னத கலை வடிவத்தினை, கடந்த இரு நூறுவருடங்களாக பேசாலை மக்கள் பாதுகாத்து பேணி வருவதையிட்டு பேசாலைதாஸ் என்ற ஒரு நபராக நான் பெருமை அடைகின்றேன். எமது மரபு சார்ந்த உடக்கு கலை வடிவம் பற்றி பேசாலைதாஸ் ஆகிய நான் என் பேசாலை உறவுகளுடன் பேசுகின்றேன்!                                                            கடந்த புனித வாரத்திற்கு முந்திய வாரத்தில் கான்பிக்கப்பட்ட உடக்கு பாஸ் பல சிறப்புகளை கொண்டிருந்தா லும், பல குறைபாடுகள் காட்சி முழுவதும் தொடர்கின்றது. உடக்கு பாஸின் உச்ச கட்டம் கடவுள் மரிக்கும் காட்சி. கடவுளே மரணிக்கி ன்றார் என்றால் அந்த காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே சற்று கற்பனை பண்ணிப்பாருங்கள்! மகா பயங்கரமாக இருக்கும். மத்தேயூ எழுதிய சுவிசேசத்தின் படி, பூகம்பம் உண்டா கியது. வானம் இருளாகியது. சூரியன் பிரகாசம் குன்றி ஒளி இழ ந்தான். கல்லறைகள் திறக்கப்பட்டு ஆவிகள் அலறின. ஆலய திரைச் சீலை கிழிந்தன. பறைவைகள் சோகம் காத்தான. நிலவு அழுதது அந்தோ! படைப்பின் கர்த்தர் பிதாவே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்று உரக்க கூவி தலை சாய்க்கி ன்றார். ஆனால் நடந்து முடிந்த காட்சியில் திடீரென கறுப்பு கலர் காண்பிக்கப்படுகின்றது. அதற்கு முன்னரே கர்த்தரின் ஆவி எங்கேயோ பறந்து போய்விட்டது. காரனத்தை ஆராய்ந்தால் நூல் அறுந்துவிட்டதாம். நூல் அறுந்து போனதுக்கும், அரசியல் காரனமா கின்றது! முன்பு சலோஸ்தியான் பீரிஸ் அவர்கள் மிக அவதானமாக, நூல் வேலைகளை செய்வார் அது அவரின் வாழ் நாள் வேலையாக இருக்கும்! அந்த வேலையை அவரின் வாரிசுகள் யாராவது செய்திரு ந்தால் நூல் அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போயி ருக்கும். அந்த நூல் வேலையை கூட தமிழ் தேசியவாத உணர்ச்சி தான் இழுக்கவேண்டுமா? என்னே மடமைத்தனம்!
                                திருப்பாடுகளின் காட்சியின் முக்கிய இயக்குணர் கலாபூசணம் மிராண்டா ஆசிரியர் அவர்கள், அவருக்கு பின்னர் இதனை நெறிப்படுத்தும் பக்குவம் அடுத்த இளம் தலைமுறைக்கு கொடுக்கப்படவேண்டும். மேலை நாடுகளின் நவீன நாடகங்களை இயக்கி வெற்றி பெற்றவன் என்ற எனது சிறுமதியை வைத்து சொல்கின்றேன். திருப்பாடுகளின் நெறியாள்கை நிறைய குறைபாடு களைக் கொண்டுள்ளது.                                                              முதலில் ஒலி அமைப்புக்கு வருவோம், நமது உடக்குகளுக்கு வாய் பேசாது எனவே குறைந்த பட்சம் மாதா இயேசு இவர்கள் வசனம் பேசும் போது அந்த உரையாடல் அங்கிருந்து வரவேண்டும். அடுத்ததாக வசனங்கள் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை கொண்டு வசனம் அமைக்கப்பட்டிருந்தது. உரையாடலின் வசனத்திற்கு ஏற்ப உடக்குகளினால் அசைந்து காண்பிக்க முடியாது எனவே வசன உரையாடைலை தெளிவாகவும். உள் ஆழக் குரலாக இருந்திருக்கவேண்டும். வானொலியில் பணியாற்றியவர்களுக்கு நான் சொல்வது புரியும்                                                                          இயேசு வசனம் பேசும் போது அவரின் வசனம் கருக்குள்ள பட்டயம் போல இதயத்தை ஆழ ஊடுருவும் அது அங்கு இல்லை. பூங்காவனத்தில் வந்த தொய்வு, சிலுவையில் தொங்கும் வரை இயேசுவுக்கு இருந்ததா? குதிரை ஒரு பரிட்சார்த்த‌ முயற்ச்சி முதலில் அதனை பாராட்டுவோம் ஆனால் உண்மையான குதிரையின் பொழிவு அதில் இல்லை. குதிரை நிற்கின்றது ஆனால் டொக்கு டொக்கு சத்தம் மட்டும் நிற்கவில்லை! நாலுபேர் குதிரை யை தூக்கிக் கொண்டு அலைவது அப்படியே வெளியே பார்வை யாளர்களுக்கு தெரிகின்றது. ஒளிவடிவம் காட்சிக்கு ஏற்ற விதத்தில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேயில்லை. அடுத்ததாக காட்சிகளை தொடர்பு சாதனத்துக்கு அனுப்பும் போது பக்கத்தில் இருப்பவர்களின் அநாவசிய குரல்கள் கலந்து வெளிப்பட்டது காட்சி க்கு குந்தகம் விளைவித்தது. இப்படி  இலகுவில் திருத்த கூடிய குறை பாடுகள் அதிகம். உடக்குகள் இன்னும் பூரணமான வடிவத்திற்கு வரவில்லை, இரும்பு கம்பிகளினால் கைகள் இயக்கப்படுவது, திமிர்வாதக்காரகள் போல உடக்குகள் இன்னமும் இருக்கின்றது. குறிப்பாக கள்ளவர்கள் உடக்கு, வெருளிகள் போல, நகைப்புக்கு உள்ளாகி இருந்தது. மரணித்த காட்சி மகா மட்டமாக இருந்தது. 
                                                           இன்னும் நாம் இரு நூறு வருடத்திற்கு பின் தள்ளியே இருக்கின்றோம். எந்தவித முன்னேற்றம் இல்லை. கை, கால், தலை, வாய் கண் இவைகள் இயங்கக்கூடிய  உருவங்கள் டென்மார்க் நாட்டில் செய்கின்றார்கள் ஒரு உடலுக்கு 35 ஆயிரம் மட்டில் முடிகின்றது. நாம் நமக்கு வேண்டிய ஒப்பனைகளை செய்ய வேண்டியதுதான் மிச்சம். இனிவ்ரும் காலங்களில் திட்டமிட்டு செயல்படுவோம் வெற்றியும் காண்போம். பாடுபட்டு உழைக்க எம் ஊரவர்கள் முன்வரும் போது, சிறப்பாக காட்டி, எமது பாரம்பரிய உடக்கு பாஸை நவீனப்படுத்துவோம். மற்றப்படி பிரமாண்டமான மேடை, எம் ஊரவர்களை கட்டாயம் பாராட்டவேண்டும். தயவு செய்து ஆலையத்திலும். கடவுளிடமும். கலைவடிவத்திலும் அரசி யலை புகுத்தவேண்டாம். திறமைகளுக்கு முன் உரிமை கொடுத்து, இளம் தலைமுறைகளுக்கு வழிவிட்டு, எமது உடக்கு பாஸ் கலை வடிவத்தை மெருகூட்டுவோம் நன்றி  
 அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

கடவுளின்_கனவு

Roy Croos Amburose   # கடவுளின்_கனவு கடவுள் படைக்கும் முன்னும் படைப்பின் பின்னும் கண்ட கனவு பலிக்கின்றது அவ்வாறு...