உடக்கு பாஸ் காண வாரீர்
கவிதையழைப்பு
மன்னாருக்கும்,தலைமன்னாருக்கும்
இடையில் உண்டி போல ஓருராம்
இழுவைப்படகும்,இரும்புவலையும் கரைவலையும்,கண்ணாடியிலைப்படகும்
இங்கே இல்லையென்பது இல்லையாம்.
பற்றிமாவும்,சென்மேறிஸ்ஸும்
எம் ஊர்ப்பிள்ளைகள் பேர்சொல்லும்
கல்விக்கூடங்களாம்,அதுவேயெங்கள்
மூத்தோரும் கல்விபயின்ற கற்கூடங்களாம்.
எவ்விடம் சென்றும் வெற்றியீட்டும் விக்டரீஸ்
கழகம் உருப்பெற்றெழுந்ததும் இவ்வூராம். வந்தோரை வாழவைத்ததும் இவ்வூராம்.
அவர்கள் நயவஞ்சகர்களாக மாறினாலும்,
அரவணைத்ததும் எம்மூராம்.
புகழழியாப்புலவர்கள் பலரும் கவிப்புகழ் பாடியே
எம்மூர் பாதுகாவலியாம் வெற்றியன்னையின்
நல்லாசீர் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்ததும் எம்மூரே அதுவே எங்கள் பேசாலையாம்.
சிலுவையில் இரட்ணியம் கொண்டு நூற்றைம்பது வருட பாரம்பரியம் கண்டு
இற்றைவரைக்கும் அழியாப்புகழ் கொண்டு
உடக்கு பாஸ் ஆறாம்,ஏழாம் திகதிகளில் காண்பிக்கப்பட இருப்பதும் எம்மூராம் அதுவும் எங்கள் பேசாலையாம்.
யாத்தவர் ஹிலரி குரூஸ்
தொகுப்பு பேசாலைதாஸ்

Ingen kommentarer:
Legg inn en kommentar