onsdag 29. mars 2017

சமரச‌ம் உலாவும் இடமே!

சமரச‌ம் உலாவும் இடமே!
மரணம்! மனித வாழ்வில் மிக வும் உண்மையான ஒன்று. ஆனால், எவராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று! இறந்தவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இற ந்தவர் நல்ல நிலையை அடை ந்தார் என்பதுதான்.  “மரணத்தி ற்குப் பின் இறந்தவர் எங்கு செல்கிறார்? மரணத்திற்குப் பின் என்ன நிகழும்?” என்கிற கேள்வி பலருக்குள்ளும் இரு க்கிறது. ஆனால், மரணம் என்பது அனைத்திற்கும் ஒரு முடிவல்ல என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இறந்தவ ர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்,  அவருடன் நமக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களை நாம் சில செயல்முறைகள் மூலம் தொட முடியும். அந்த உயிருக்கு தேவையான நன்மையை செய்ய முடியும். அன்பர்களே நோர்வே நாட்டில் சேமக்காளை அதாவது சவ‌க்காலைகளை பார்த்தால் வியப்பாக  இருக்கும். . பச்சைப் பசேலென ஒரு பூங்காவைப் போல அந்த இடம் .செழி ப்பான மரங்கள், பசுமையான சூழல், சுத்தமான நடைப்பாதை என அந்த சூழல் அங்கே ஒரு அமைதியை உருவாக்குகிறது.  குறைந்தது கால்வாசி கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்ப ட்டிருக்கும், குறிப்பாக கார்த்திகை மாதம் முழுவதும், கிறிஸ்மஸ் தினங்களில், இறந்தவர்களோடு இன்னமும் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றோம் என்பதை நினைவுறுத்த சகல‌ கல்லறை களிலும், உறவினர்களால் பூக்களும் மெழுகுவர்த்தியுமாக கல்ல றைகள் காட்சி தரும்.   ஒவ்வொரு கல்லறைகளும் நேர்த்தியாக வரிசைகிரகமாக நிறுவப்பட்டிருக்கும். அந்த கல்லறைகள சுற்றி, அழகிய மலர்ச்செடிகள் பூத்துக்குழுங்கும்! கல்லறையில் சிரித்த முகத்தோடு இருக்கும் படங்கள், ஜீவியத்தி என்னை நேசித்த இதயங்களே! மரணத்திலும் என்னை மறவாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சேமக்காளைக ளுக்கு செல்லும் போது மனதில் ஒரு அமைதி, இறை உணர்வுகள் பெருகுகின்றன. இந்த சேமக்காளைகள் ஆலய நிர்வாகிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன்.  ஆனால் எமது ஊரில் உள்ள சவக்காளையை பாருங்கள்! இடிந்து போன, மதில்கள், பாசி பட ர்ந்த கல்லறைகள், ஏழை எளிய மக்கள் என்றால் அவர்களை புதைத்த இடம் தெரியாமல் மறைந்து போகும்! பல வருடங்கள் கழித்து, ஒரு பணக்காரனுக்காக அந்த இடம் தோண்டப்படும் அதிலே அந்த பணக்காரனின் கல்லறை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை அந்த பணக்காரன் அநியாய வட்டியில், குறு க்கு பாதையில் செலவம் சேர்த்திருக்கலாம், ஆனால் அவனு க்காக தோண்டப்பட்ட அந்த ஏழை உத்தமராய் வாழ்ந்திருக்க லாம். சமரசம் உலாவும் இடம் மாயானம் என்பார்கள். எங்கே இருக்கின்றது சமரசம்? எங்கே இருக்கின்றது இறை நீதி?  அது போகட்டும் அன்பர்களே! சற்று சிந்தியுங்கள், அங்கே புதை க்கப்படிருப்பது யார்? உன் அப்பா, அம்மா உன்னை நேசித்தவ ர்கள். நீ நேசித்தவர்கள் அங்கே துயிலுகின்றார்கள். ஒரு நாள் நீயும் நானும் அங்கே போகப்போகின்றோம். அந்த அறுவறு ப்பான, அலங்கோலமான இடத்திலா நீயும் போய் நிரந்தரமாக படுக்கப்போகின்றாய்?  சிந்தித்துப்பாருங்கள்! ஊரின் பெரு மையை பறை சாற்ற, பல இலட்சம் செலவழித்து பாஸ் காட்டு வதில், முனைப்பாக இருக்கும், ஆலைய நிவாகிகள், ஊர்மக்கள் எமது இறுதி வீடான, நிறந்தர தூங்கும்  இடமான சவக்காலையை புணரமைத்து, அழகுபடுத்தி, வாழ்வின் மறுவாழ்வின் அர்த்த ங்களை புரிந்து கொள்வோமா?  அன்புடன் பேசாலைதாஸ் 

வண்ணப்பறவைகள்
tirsdag 28. mars 2017

சுய ஆற்றலில் விருத்தி கண்டு உலகை வெல்லுங்கள்!

என் அன்பு சின்ன மாணவர்களே! 
                                                                                    பெற்றோர்களே! இன்று கல்வி பொது தராதர சாதாரண பரீட்டை பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன. ஒரு சில மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் குது கலிக்கக் கூடும். முதலில் அவர்களை வாழ்த்துவோம், அவர்க ளின் சந்தோசத்தில் பங்குகொள்வோம். அதேவேளை எங்களு டைய பிள்ளைகள் அதி திறமையாக சித்தியடையவில்லையே என்ற கவலையை விட்டுத்தள்ளுங்கள்: உண்மையில் மாணவர்க ளின் ஆய்ந்து அறியும் அறிவுத்திறன். அவர்களின் ஆளுமை, படைப்பாற்றலை  இவைகளை வெளிப்படுத்துவது, இந்த பரீ ட்சைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் மாணவர்களின் அறிவு, உளவளம் இவைகளை எடை போட பரீட்சை ஒன்றைத்தவிர, வேறு ஒரு உத்தியும், செய்முறையும், இலங்கை கல்வி திணைக்களம் இன்னும் அறியாது உள்ளது. அப்படி அறிந்திருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்தும் பொருளாதார வசதிகள் இலங்கைக்கு இல்லை. பின்லாந்து நாட்டில் ஏன் நோர்வே நாட்டிலும் கூட, பிள்ளைகளின் திறமை களை அறிந்து கொள்ள, அந்த நாட்டின் கல்வித்திணைக்களம் பரீட்சைகளை நாடுவதில்லை. West Minister Education System பிரித்தா னிய கல்வி முறையை இன்றும் ஸ்ரீ லங்கா கடைப்பிடித்து வருகி ன்றது. அந்த பரீட்சை முறை,பல குறைபாடுகளை கொண்டு ள்ளது. மூன்று மணித்தியாலயத்தில் திணிக்கப்பட்ட விடய ங்களை மீண்டும் கிரகித்து அப்படியே ஒப்புவிக்கும் செயல் முறையில் பரீட்சைகள்  நடத்தப்படுவதால், மாணவனின் புலமை, அறிவு சார் ஆற்றல்,படைப்பு திறன், மதியூகம் எல்லாம் பரீட்சையில் வெளிப்படும் என்பது மடமைத்தனம்! 

                                                                                     அது ஒரு புறம் இருக்க, எல்லா மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் கொடுக்கப்படு கின்றனவா என்று நோக்கும் போது அதிலும் குறைபாடுகளே தென்படுகின்றன. உண்மையில் இப்படிப்பட்ட பரீட்சைகளில்,

பாடசாலையின் தரம், ஆசிரியரின் பங்களிப்பு, அதிலும் மேலாக பெற்றோர்களின் கல்வித்தகமைகள், அவர்களின் விடாப்பிடி வாத திணித்தல் என்பன பின்புல காரணியாகின்றது. என்னை பொறுத்தவரை, கல்வி அறிவற்ற, ஏழை குடும்பத்தை பின்னணி யாக கொண்ட ஒரு மாணவன் குறைந்த பட்சம் இரண்டு ஏ பெறு பேறு எடுத்தால் அதுவே மாபெரும் வெற்றியாக கணிக்கப்படும். ஏனெனில் அந்த மாணவன் தன் சுய  சொந்த ஆற்றலை கொண்டு மிளிர்கின்றான். இதற்கு என் சொந்த கல்வி அனுப வமே எனக்கு சாட்சியாக விளங்குகின்றது. 

                                                                                            நானும் எனது அண்ணனும், விஞ்ஞான பாடம் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டோம்.

வறுமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. சராசரி பெறுபேறுக ளுடன் யாழ் பல்கலைக்கழகம் சென்றோம். அப்பொழுது புக ழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து அதி திறமையான பெறுபேறு களில் யாழ் மாணவர்கள் எங்களோடு படித்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் பின் தள்ளி, நானும் எனது அண்ணன் எட்வேட் பீரிஸ் அவர்களும் சிறப்பு நிலை ( Special B.A. Hones in Economics) and ( Special B.A. Hones in Political Science)  பட்டம் பெற்றோம், அதிலும் எனது அண்ணன் என்னைவிட ஒருபடி மேலே சென்று Upper Class எடுத்தார். மூன்று ஏ க்களோடு வந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. எனவே மாணவர்களே பெற்றோர்களே பரீட்சை பெறுபேறுகளையிட்டு கவலை ப்படாமல் சுய ஆற்றலில் விருத்தி கண்டு உலகை வெல்லுங்கள் நன்றி. அன்புடன் பேசாலைதாஸ்

வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!

வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!


வாடைக்காற்று தன் மூர்க்கத்தை இழந்து, மெல்ல வீசிகொண்டி ருந்தது. சித்திரை தொடங்கிவி ட்டாலே வாடைக்காற்று தன்  மூர்க்கம் தணிந்து, வரவிருக்கும் சோழக அத்தானுக்காக காத்திரு க்கும். வாடைக்காற்று தன் ஆக்ரோசமெல்லாம் இழந்து மெல்ல வீசுகின்ற போது, கரை யோர மக்கள் மனதிலும், அவர்க ளின் உடலிலும் இனம் புரியா சோர்வு தொற்றிக்கொள்ளும். தென்னை வட்டுக்குள், நிழலுக்காக உட்கார்ந்த பெண் குயில், ஏதோ ஒரு தவிப்பில் தன் இணையை கூவியழைக்கின்றது. மிக நீண்ட பொழுதாய் தன் இணை தேடி அலைவதைப்போல அதன் இனிய குரலில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. அந்த குயிலின் குரலை கேட்க மீராவின் கண்களில் கண்ணீர் சுரந்து அவளின் பட்டுப்போன்ற மிருதுவான கண்ணங்களில் உருண்டன. கூடவே அவள் எண்ணங்களும் சோகத்தை அடை காத்தன. " மா பாவி இவன்இப்படி செய்துபோட்டானே, ஆண்கள் தன் காதலை வெளிப்படுதினால், பெண்கள் அதனை நிராகரிப்பதை அவமானமாக கருதும், இந்த ஆண் ஆணவப் போக்கை, கடவுள் எப்போதுதான் ஆண்களின் மனதில் இருந்து நீக்கப்போகின்றாரோ? ஒருவேளை கடவுளும் இதனை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் தவிக்கின்றாரோ,,, "  மீராவின் மனம், அவள் எண்ணங்களோடு  போராடியது
                                          ஆத்திதன் அவனை ஆதி என்றுதான் ஊர்க்காரர்கள் அழைப்பார்கள். கட்டழகனாக இருந்தாளும், ஊர் சுற்றும் கட்டாக்காலி அவன். அழகான பெண்களுக்குப் பின்னால் தெரு நாய் போல அழைவது, அவன் இயல்பு. கொஞ்சகாலம் அவன் மீராவை வளைய வளைய சுற்றித்திரிந்தான். மீராவோ, அவன் காதலை அடியோடு வெறுத்தாள், அவன் சேட்டைகள் பொறுக்கமா ட்டாள் மீரா ஊரில் உள்ள அருட்குரு ஒருவரிடம் விசயத்தை சொல்லி, ஆதியின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். காலங்கள் உருண்டன. ஆதி வன்னியில் ஒரு அகதி பிள்ளையோடு தொடர்பு கொண்டு வன்னிக்கே போய், அங்கே இருந்துவிட்டான். மீராவுக்கு பெற்றோர்கள் மட்டக்களப்பில் இருந்து நல்ல படித்த பையனை கல்யாணம் செய்துவைத்தார்கள். மீராவை பெண்பார்க்க வந்த இடத்தில் ரமேஸ் மீராவின் அழகில் மயங்கி சீதனம் எதுவும், வேண்டாம், மீராவுடன் இந்த ஊரிலேயே வாழ்வேன் என்று, ஒரே அடியாக சொல்லிவிட்டான்.பட்டதாரியான ரமேஸ், வங்கியில் மேலாளராக வேலை பார்த்தவன் மீராவுக்காக வேலையில் இடம் மாற்றம் கேட்டு, மீராவின் ஊருக்கே வந்துவிட்டான். மீரா ரமேஸ் இல்லறவாழ்வு இனிமையாக நகர்ந்தது.

                                                                           இந்தியாவின் உதவியுடன் வீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலம் அது, ரமேஸ் வீட்டு திட்டத்திட்டங்களின் பணிப்பாளராக அவனது வங்கியால் நியமிக்கப்பட்டிருந்தான். ஊரில் உள்ளவர்களின் படிவங்களின் தன்மைக்கு ஏற்ப, ரமேஸ் வீட்டுத்திட்டத் திற்கான கடனையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தான். ஆதித்தனும் வன்னியில் இருந்து, குடும்ப மாக அவ்வூருக்கு வந்திருந்தான். எல்லோரையும் போலவே ஆதியும் வீட்டு திட்ட கடனுக்காக மனுச் செய்திருந்தான். ஆனால் அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரனம், ஆதி, வீட்டுத்திட்டத்திற்காக மனுப்பண்ணின காணி, முருகன் கோவிலுக்கு சொந்தமானது என காரனம் காட்டி, வேறு ஒரு சொந்த கானியை சமர்ப்பிக்கும் படி கேட்டு, ஆதியின் கடன் விண்ணப்பம் ரத்தாகி இருந்தது, இது மீராவின் கணவனின் திட்டமிட்ட செயல் என்றும், மீரா சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்குகி ன்றாள் என்று தனக்குள்ளே கொதிப்படைந்தான் ஆதி.

                                                                        ஆத்திரம் கொண்ட ஆதி, நேராக வங்கிக்கு சென்றான். ரமேஸிடம் கடன் விண்ணப்ப‌ம் ரத்தாகியது தவறு என்றும், ரமேஸும் அவன் மனைவியும் தன்னை பழி வாங்குகின்றார்கள் என்றும், ரமேஸின் மனைவி தனது முன்னாள் காதலி என்றும், தனக்கும் அவளுக்கும் தொடர்பு இருந்தது என்றும், நான் அவளின் காதலை நிராகரித்தமையால், தன் கணவனின் அதிகாரத்தை தவறாக பயண்படுத்தி தன்னை பழிவாங்குவதாக சத்தமிட்டு வங்கியில் கத்தினான். வாடிக்கையாளர்கள், அலுவல ர்கள் மத்தியில் மீராவை பழி சுமத்துகின்றானே என எண்ணி, ரமேஸ் தலை குனிந்து நின்றான்.
                
                                                                           அன்று வீட்டுக்கு திரும்பிய ரமேஸ், மீராவிடம் முகம் நிமிந்து பேசவே இல்லை. சோர்ந்து போயிருந்தான்.
கையில் காபியுடன் வந்த மீரா " என்னங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க, தலை வலியா,, மாத்திரை ஏதாச்சும்,,,,," என்று இழுத்தவளை, ரமேஸ் இடை மறித்து " மீரா யார் அந்த ஆதி?" சற்றும் எதிர்பாராமல் ரமேஸிடம் இருந்து வந்த அந்த கேள்வியால் நிலை குழைந்தாள் மீரா! ஒருமாதிரி தன்னை ஆசுவாசப்படுத்திகொண்டு,நடந்தை   அப்படியே விபரித்தாள் மீரா. 

" மீரா இதை நீ ஏன் என்னிடம் முன்பே சொல்ல வில்லை?" 
 "முன்பு என்றால் நம் திருமணத்திற்கு முன்பா? பின்பா?" அச்சத்துடனும், வியப்புடனும் மீரா கேட்டாள்.
 "அதுவல்ல பிரச்சனை எதுவாயிருந்தாலும் மீரா,  எதுவானாலும் எனக்கு தெரியும் முன்னே நீயாக உன் வாயால் நான் கேட்டிருக்க வேண்டும். அடுத்தவன் வாயால்,,,,, அவமானமாக கருதுகின்றேன்" இது ரமேஸ்.
 " இதில் என் தப்போ தவறோ இல்லை, அதைவிட அது ஒன்றும் எனக்கு பெரிய விடயமாக தெரியவில்லை" இது மீரா சொன்னது. 

இந்த உரையாடலுக்குப் பின் இருவருக்கும் இடையில் கலகலப்புகள், ஊடல் சில்மிஸங்கள். சிணுங்கல்கள் எல்லாமே வற்றிப்போயி ருந்தன. வற்றிய‌ குளத்து கொக்கு போலத் துவண்டாள் மீரா.

                                             தென்னம் வட்டுக்குள் நிழலுக்காக ஒதுங்கிக் கொண்ட அந்த குயிலின் சோக அழைப்பு,,, சோக ராகமாக காற்றிலே 
கலந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. கன்னங்களில் உருண்ட கண்னீரை துடைத்துக்கொண்டு, எதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் கடிதம் ஒன்றை எழுதினாள்,,, 

                                      என் அன்பு ரமேஸுக்கு. நீங்கள் எனக்கு கிடைத்தது இறை வரம் என்று தான், இதுவரையும் எண்ணுகின்றேன். இனிமை குன்றாதா உங்கள் அன்பில், நான் திளைத்து இருந்தேன். தேனுக்குள் விழுந்த எறும்பாக, உங்கள் தித்திப்பான அன்பிலே உலகை மறந்தேன். என் அன்பே! எதுவானலும் நான் உங்களிடம் முன்பே சொல்லி இருக்கவேண்டும். சொல்லாதது என் தவறுதான். எதோ ஒரு குற்ற உணர்வு என்னை வாட்டுகின்றது. என் அன்பே என்னை மன்னி த்துவிடு! இந்த கடிதம் நீங்கள் வாசித்த பின். ஏற்கனவே உயிரை மாய்த்துக்கொள்ள, வாங்கியிருக்கும் பொலிடோல் போத்தல் கலியாகிவிடும். என்னை மன்னித்து விடுங்கள் ரமேஸ்! இப்படிக்கு உங்கள் தித்திக்கும் அன்பை இழக்கும் அபாக்கியவதி மீரா.

                                                   கடிதத்தை எழுதி முடித்த மீரா, அதை ரமேஸின் கைகளில் கிடைக்கும் படியாக, ரமேஸின் மோட்டர் சைக்கில் திறப்பு க்கோர்வையை அதன்மேல் வைத்து,   கடிதத்தை  மேசை மீது வைத்து விட்டாள். வழமைபோல ரமேஸ் வங்கிக்கு கிளம்பினான். மேல் மாடி யின் விறாந்தாவில் ரமேஸின் கை அசைவுக்காக வழமை போல காத்திருந்தாள் மீரா.  . ரமேஸ் கை ஏதும் அசைக்காமல் விருட்டென்று கிளம்பிவிட்டான் மாடியை விட்டு கீழே வந்த மீரா. கடிதத்துக்கு மேலே. மோட்டார் சைக்கிள் திறப்புக்கோர்வை இருப்பதைக் கண்டு வியப்புற்றாள். 
     
                                             அப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது அவர் நேற்று தன் மோட்டார் சைக்கிள் பழுதுதாகி அதை  கராஜில் விட்டு விட்டு தன் நண்பரின் சைக்கிளில் வீட்டுக்கு வந்தது. கடிதத்தை வாசித்தார இல்லையா என்று அறிய மீரா கடிதத்தை எடுத்தாள். அதில் ரமேஸின் கை எழுத்துக்கள்,,, 

                                   என் அன்பு மீரா! உன்னை பற்றி எனக்கு தெரியாதா என் வானம் என்ற இதயத்தில் கொழுவிருக்கும் இதய நிலா நீ. நான் அன்று உன்னிடம் கேட்டதை அன்றே நான் மறந்துவிட்டேன். அதை நீ எனக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். நீ தான் வீணாக உன் மனதை குழப்பி ஒரு வாரமாக எனக்கு வரவேண்டிய முத்தங்கள், இறுக்கமான அணைப்பு க்கள், இன்பமான உரைஞ்சல்கள் எல்லாவற்றையும் எனக்கு தர மறந்துவிட்டாய்,, நான் தவித்த தவிப்பு எனக்கல்லவா தெரியும். என் அன்பே பொலிடோல் போத்தல் முழுவதையும் குடித்து          என்னை இறுதியில் வஞ்சிக்காதே ! வண்ண நிலவே!! குடித்த பின் பாதியை வை, நானும் குடித்து அன்னோடு மாய்கின்றேன். நிலவில்லாமல் ஒரு வானமா அது நானா?    இப்படிக்கு உன் ரமேஸ்.
                                                       கடிதத்தின் இறுதி பந்தியை ஓராயிரம் முறை படித்தாள் மீரா!  வாடா, வா ரமேஸ!, இன்று உன்னை என்ன செய்கின்றேன்  பார். நீ போதும் போதும் என்று சொல்லும் வரை,,,,,,,,,,,
 மனசில் எதோ நினைத்துக் கொண்டு, ஆவேசமாக லீப்ஸ்டிக்கை தன் உதட்டில் தேய்க்கின்றாள் மீரா!     யாவும் கற்பனையே,,,

                                                          பேசாலைதாஸ்    

கருப்பை இழ‌ந்த என் கடல் அன்னை!

கருப்பை இழ‌ந்த என் கடல் அன்னை!

என் ஆசை நண்பா அப்புகாமி
எப்படி இருக்கின்றாய் நலம் தானே!
உயிரான என் ஊர் எப்படி இருக்கின்றது.
கலவரக்காலங்களில் காடுகளுக்குள்
நம் நட்பு இறுகியது, நாட்கள் செல்ல‌
கலவரத்தால் இணைந்த நாம்
கடல்களால் தள்ளி நிற்கின்றோம்.
துருவத்தில் நான் துயரத்தில் நீ!
இயக்கத் தோழன் துரம் எப்படி?
எப்போதும் வட்டக்கோடில் ஜெயிக்கும்
என் பக்கத்து வீட்டு பார்வதி எப்படி?
கடல் பாம்பின் வால் பிடித்து
சுழற்றி நீ விளையாடுவது சுற்றிச் சுற்றி
என் நினைவுச் சுழியில் வந்து போகிறதே!
கடற்கரையின் வலைக் கும்பத்தையும்,
விரிந்து கிடக்கும் படகுப் பாய்களையும்
நான் விசாரித்ததாச் சொல்லிவிடு.
இடியன் குஞ்சுகளும், ஓட்டு கணவாயும்
கலர்களும், காரலும் காணாமல் போனதாமே!
வாரிச் சுருட்டி, வயிற்றில் போடும்
இந்திய இழுவைப்படகுப் பலகைகளுக்கு
பகுத்தறியும் பழக்கமுண்டோ சொல்!
கருப்பைகள் அகற்றப்படும் போது
பாவம் கடல் அன்னை என்ன செய்வாள்?
பஞ்சமும் பட்டினியும் பரிசாய் நமக்கு இனி
என்பதை என் ஊரவரருக்கு ஒருதரம்
என் சார்பாய் சொல்லிவை நண்பா!

             இப்படிக்கு பேசாலைதாஸ்

fredag 24. mars 2017

என் ஊர் பேசாலை

என் ஊர் பேசாலை


நிலாச்சோறு, நிலா மழை நீண்டு மனதில்பதிந்த அந்த நிலாக்காலம் மீண்டு வருமோகடற்கரையின் கொண்டல் திசையிலே தெரியும்விராணா வெளிச்ச கோபுரம் விரக்தியில்விழிக்ககச்சான் பக்கமாயுள்ள பியர் இறங்கு துறைஇன்னமும் வெறிச்சோடிக்கிடக்கின்றது.


செக்கல் பொழுதில், சுக்கானில் கைவைத்த படிகச்சான் திசையிருந்து கொண்டல் நோக்கி,,மீண்டும் கொண்டலில் இருந்து கச்சான்முகமாய்அங்கும் இங்குமாய் அலைகின்ற இழுவை படகிலேஎன்னூரை விழித்து பார்க்கின்றேன்,,,,,,,,,


மாதா கோயில் கோபுரம் கம்பீரமாய் தெரியநாலாம் வட்டார வீடுகள் எல்லாம் சிறிதாய், அடுக்கிவைத்தபடி அழகாய் தெரியதென்னை மர சோலையில் காகங்கள் உட்கார்ந்து,,,,,


வைகரைப் பொழுதை வரவேற்க உற்சாகமாய் கரைந்து ஊரை எழுப்புகின்றனஎன் கனவுகள் மீண்டும் விழித்துக்கொள்ளஎன் ஊரையும் உறவுகளையும் நினைத்த படி,பனிவிழும் வனாந்திர நாட்டில் நான்,,,,,,,,,,,,,,

                                                       பேசாலைதாஸ்

கியூபட் அவர்களின் இறுதிக் கவிதை


காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் –

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி ப...