onsdag 21. mars 2018

#தாயவள் #நான்_காணும்_தேவதை றோய் குருஸ் அம்புறோஸ் .

#தாயவள்

#நான்_காணும்_தேவதை

ஐயிரண்டு மாதக் 
கலப்படம் அற்ற 
வயல்வெளி அவள்/

பன்னீர்க் குடத்தில் 
தலைகீழாயினும்
தடுமல் பிடித்ததில்லை 
அவள் வயிற்றிலே/

களவெடுக்க முடியாத 
களஞ்சியவறை 
கருவறைக்கு நான் 
சூடிய நாமம்/

என்னைச் சுமந்தவள்தான் 
என் தாயவள்தான் 
நான் காணும் தேவதையவள்/

#Mother

#I_see_the_angel

Ten months
Not contaminating
Field she/

In the penguin pool
Head down
Do not stop it
She was in the stomach/

Can not be grasped
Storage room
To the farmx
Name/

That's me
That's my mother
The angel I see/

றோய் குருஸ் அம்புறோஸ் .

#கவிதைகளின்_பிறந்த_நாள்

#கவிதைகளின்_பிறந்த_நாள்

கண்ணை மூடினாலும் நீயே!
கண்ணைத் திறந்தாலும் நீயே!
கனவிலும் நீயே நினைவிலும் நீயே!
காலங்கள் கடந்து வியாபித்திருப்பதும் நீயே!

காய்ந்த சருகுக்கு உயிரளித்ததும் நீயே!
கம்பீரமான மரத்தைக் காலடியிட்டதும் நீயே!
கரைந்து போன இரவுகளின் காவலனும் நீயே!
கண்ணீர்த்துளிகளின் ஆறுதலும் நீயே!

நிலாமுற்றத்தில் என் பெயரும் உன்னாலே!
கவி மலர்களில் மலராகியதும் உன்னாலே!
சந்திரோதயத்தில் சஞ்சரித்ததும் உன்னாலே!
உன்னாலே உன்னாலே எல்லாமே உன்னாலே!

கவிஞர்கள் உருப்பெற்றதும் உன்னாலே!
இன்றைய நாள் இனியதானதும் உன்னாலே!
ஏனென்றால் கவிதையின் பிறந்த நாள்……
கவிதைகளுக்கு இன்று பிறந்த நாளாம்……

tirsdag 20. mars 2018

அவளொருத்தி எழுகிறாள் # கவிதையின் காதலன்

அவளொருத்தி எழுகிறாள் 

அவளொருத்தி எழுகிறாள் !
கதிரவன் முகம் நுகர்கிறாள்!
 மூச்சிழுத்து புடவையைத் தூக்கி 
இடுப்பில் வரிகிறாள் !
துடைப்பத்தின் ரேகையை 
கைகளாள் அழிக்கிறாள் !
நிலத்தின் குப்பைகளை 
தூரிகையாள் அளக்கிறாள்  !

அடுப்பங்கரை வெளிச்சம் கொள்கிறது 
தண்ணீர் ஆவியாகி  
தேனீர் கோப்பையை அலங்கரிக்க
 குழந்தையை முத்தமிட்டு 
நாவில் இனிப்பைப் பருக்குகிறாள்!

மரக்கறிக்கு அவசரமாய்
 அறுவைச்சிகிச்சை நடக்கிறது !
குழம்புக்குளத்தில் 
காய்கறிகளை வேக வைத்து
 உள்ளங்கையை நாவால் உறிஞ்சி 
உப்புச்சுவையின் அளவைச் சுவைக்கிறாள்!

கிணற்றுத் துலாவில் தொங்கி ஆடுவாள்!
உடுப்பைப் பிளிந்து இடுப்பை நெழிப்பாள்!
தலைவனுக்குத் தலை துவட்டி
 கடவுளுக்கு புகை காட்டி
 கண்ணிமைக்குள் கடைமை புரிகிறாள்!

சுட்டு விரலில் கருமை எடுப்பாள்!
மகளின் விழியில் அதனைப் புதைப்பாள்!
அடுமனை உணவாய் வெந்து தணிவாள்!
 
தோள்ப்பையில் புத்தகம் நிறையும் 
கைலேஞ்சி இவளில் வேகத்திலே மடியும், 
வயிறு பசியில் சுருங்கி விரியும்
பள்ளி வாகனமோ அதற்குள் விரையும்.

உணவுப்பொதியை பிரித்துக் கொடுத்து
கணவன் உடையை சுருக்கி வெளுத்து
ஆசை முத்தம் அழுத்திக்கொடுத்து 
அன்புப் பிள்ளையை அனுப்பி வைப்பாள்!

சுருக்குப் பையில் சுருட்டிய காசு 
கணவன் கை போய் சேரும் வரைக்கும் 
வெடுக்கு மணங்கள் அடிக்கா வண்ணம் 
மிடுக்குடனே காத்து வருவாள்!

பத்து மணி ஆனபின்பு 
பல்துலக்க தூரிகை எடுப்பாள் ! 
கண்சிமிட்டும் கனப்பொழுதில் 
கை,முகம் கழுவி வயிறு புசிப்பாள்!

கட்டைப்பையில் கத்தியை சுற்றி
 கடற்கரைக்கு பட்டெனப்போவாள்!
பத்துப் பெட்டி மீனாய் இருந்தாலும் 
பக்குவமாய் வெட்டி முடிப்பாள்!
பசிக்கு கொடுத்த பயித்தம் பணியாரத்தை
பத்திரப்படுத்தி மகளுக்கு கொடுப்பாள்!

 பாகாய் மாறும் சக்கரை போல 
வேனா வெயிலில் கருவாடு கிழிப்பாள்!
கூந்தக் கணவாய கண்ணில பார்த்தா
கூடையில் போட்டு வீட்டுக்கு விரைவாள்!
விறகு வெட்ட கோடரி எடுத்து 
வேலிக் குத்தியில் ஒத்திகை பார்ப்பாள்!

கூப்பங் கடையின் றேசன் அரிசியில் 
கல்லப் புடைச்சு சோத்தக் காச்சுவாள்!
சொதிக்குப் பிழிஞ்ச தேங்காய் சக்கையில் 
கறிக்குப் பாலையும்  பிரித்து எடுப்பாள்!

பள்ளி விட்டு பிள்ளை வந்ததும் 
பிளேண்டி வைத்து இஸ்கிறின் கொடுப்பாள்!
கறியைக் கூட்டி அடுப்பில் வைத்து 
கருவப்பிள்ளை மரத்தை முறிப்பாள்!

மதிய உணவை கொடுத்த பிறகு 
டியூசன் அனுப்ப சந்தி விரைவாள்!
கெளப்பி , கடலை மலிவில் கிடைத்தால்
மாலை உணவில் அதனைச் சமைப்பாள்!

வேலை முடிந்து கணவன் வந்ததும்
வெந்நீர் கொடுத்து குழிக்க வைப்பாள்!
ஆறு ஆனதும் மாதா படத்தில், 
 வத்தி கொளுத்தி  சாம்பிராணி எரிப்பாள்!

எட்டுக்குள்ளே உணவு சமைத்து 
பத்துக்குள்ளே படுக்கை விரிப்பாள்!
சட்டி பானை கழுவி முடித்து
 பதினொரு மணிக்கு  கழுத்தை சரிப்பாள்!

# கவிதையின் காதலன்

கிழிந்த பாடசாலை புத்தகப்பை Amburose Croos Roy¶¶¶

கிழிந்த பாடசாலை புத்தகப்பை


Amburose Croos Roy¶¶¶
கிழிந்த பாடசாலை புத்தகப்பை
அழுக்குப் படிந்த பழைய சீருடை

எண்ணையில்லாமல் வாரப்பட்ட
வளர்ந்த இரட்டைச் சுழித்தலை

ஒற்றையடிப்பாதை வழியே
புழுதி கிளம்ப ஓடோடி வந்தான்

வந்த வேகத்தில் காலை விட்டுப்
பறந்து போனது தைத்திருந்த
ஒற்றைச் சப்பாத்து

அதை கையிலெடுத்தவனாய் மூச்சிறைக்க
பாடசாலை கதவை நெருங்கி வந்தான்

கண்களில் பசி மயக்கம் ஆனாலும்,
படிக்க வேண்டும் என்ற பேராசை

இறுதி மணியடிக்க கதவையடைத்தான்
கறுப்பு நீள காற்சட்டை மாணவன்

கூனிக்குறுகி வெளியில் நின்றான் அவன்
அதிபர் வந்து அவனைக் கண்டு சினத்துடன்

வழமையாக போடும் அடியை விட
இரண்டடி மேலதிகமாக போடவே

கையை கசக்கிக்கொண்டு வகுப்பறையை
நோக்கி வேகமாக ஓடிப்போனான்

பசியோடு படித்து விட்டு மீண்டும்
அதே ஓட்டம் வீட்டுக்கு வந்தான்

வீட்டு வாசலை நெருங்கவே உள்ளே அப்பாவின் அரட்டல் சத்தம் அவனை பயமுறுத்தியது

அவனின் அப்பன் அம்மாவோடு வாய்ச்
சண்டை பிடித்துக்கொண்டு இருந்தான்

வந்த பசி அவனுக்குள் ஆடி அடங்கிப்போனது
கூடவே அம்மாவின் விம்மலும்

பக்கத்து வீட்டில் வாங்கிய ஒரு சுண்டு அரிசியும் பருப்பும் அடுப்பங்கரையை அலங்கரித்துக் கொண்டிருந்தன

இரட்டைப்பசி அவனை இரண்டாக்கிப்போட்டது
இரண்டரைக்கு டியூசன் என்று ஓடிவிட்டான்

இவ்வாறு ஆண்டுகள் கழிந்து இறுதித்தேர்வில்
அவன் பெற்ற புள்ளி பல்கலைக்கழக நுழைவு

அம்மாவுக்கு மட்டற்ற சந்தோசம்
அப்பனும் பல்கலைக்கழகம் எடுபட்டவனாம்

பின்னாளில் தாய் சொன்னவள்
குடியால் இடையில் கெட்டவனாம்.

தகப்பனுக்கு புத்தியுடன் போதையும்
தெளிந்தது, அன்று முதல் ஓடி ஓடி
உழைத்து கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்தான்

மகனை பட்டதாரியாக்கினான்
மனைவியை மதிக்கலானான்

வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது,
கண்களில் கண்ணீர் அரும்பியது

இளமையில் கல்வி சிலையில் எழுத்து போல்
படிப்பும் வறுமையும் அவனை உயர்த்தியது.

Amburose Croos Roy¶¶¶

mandag 12. mars 2018

பங்குனி எட்டில் பதிவிடத் தவறிய பா இது.....!

பங்குனி எட்டில் பதிவிடத் தவறிய பா இது.....!

இது வள்ளுவனையும் வீழ்த்திவிடும் பெண்ணதிகாரத்தின் அறக்குறள், பெண்மையை ஏற்றும் என்னதிகாரத்தின் தனிக்குறள்,
கள்ளிப்பாலின் பசிக்கெனப் பிரசவிக்கபடும் தாரகைகளே தவிக்கவேண்டாம் உமக்காக வழக்காடவே இந்தப் பேனா காகிதம் நனைக்கும்..!
கண்ணீர் வேண்டாம் உமக்காகவே இந்தச் சுதந்திரதினம் பங்குனித் திங்களில்.....!
விரட்டிவிடுங்கள் இனியும் வேண்டாம்
இவர்நியாயங்கள்.
துரத்தியடியுங்கள்
போதும் போதும் பாரதிகள்
 எத்தனை முண்டாசுகள் குரல் நீட்டினும் கட்டிளமைத் தாண்டி மாதமொருமுறை இறந்து பிறக்கும் புதுமைப்பெண்களின் சுமைமாற்றி சுமக்க யார்தயார்??
வயிற்றோட்டத்திற்கே வாடிப்போகும் ஆண்வர்க்கமே, கர்வம் கொள்வாயோ!!
சகதிகள் பூசப்பட்டு நாறிக்கிடக்கும் சமுதாயத்தின் நறுமணப்பூக்களுக்கு மாலை வேண்டும், கழுத்துக்கல்ல கற்புக்கு,
துணைதர வேண்டும் தோளுக்கல்ல தொப்புள் கொடிக்கு
 இந்த மஞ்சள் விலங்கினை விரும்பி ஏற்கிறாள் அல்லாடும் போது
அது விழுந்துவிடாது வருந்திக்காக்கிறாள் தள்ளாடும் போதும்
தன்னை மறக்கிறாள் ஊரான் பிள்ளை தன்கருவில் ஊரத்தொடங்க,
 தூக்கம் துறக்கிறாள்
தன்மகவின் பசியோடு தாகமடங்க.....!!!
தாங்கிப் பிடிக்கிறாள் தன்னைப்பெற்றோரை,
 ஏங்கித் தவிக்கிறாள் தான்பெற்றோர்க்காய். ஆறடி அறையில் தூங்கித் தொலையுமுன் தூக்கிநிறுத்தவே வீழ்ந்து எழுந்து வாழ்ந்து மாண்டும் தன்மக்கள் மார்பில் நிலைக்கிறாள் பெண்பேதை...!
உலகமன்றத்தில் ஊர்நியாயம் பேசியது போதும் வழக்காடும் எங்களுக்கு வாய்க்கரிசி இடுங்கள் தாங்கலாம்ஆனால் அவர் கற்பைக் களங்கப்படுத்த வேண்டாம்
 கல்வி சுமக்கவிடுங்கள் சிறுவயதில் கலவி திணிக்க வேண்டாம் அடுத்தவன் செடியில் பூப்பறிக்கவேண்டாம்
கண்களுக்கு கருணைப்பாடமெடுங்கள் காமப் பார்வை வேண்டாம்
இந்நாளல்ல எந்நாளும்
என்னாலும் உன்னாலும் பெண்மை தாய்மை பாரினில் சிறக்க பங்குனி எட்டில் பல்லாயிரம் வாழ்த்துகள்.

fredag 9. mars 2018

#மூவிராசப்_பட்டணம்_கலைப்_பட்டறையின் #மகளிர்_தினக்_குறும்படம்

#மூவிராசப்_பட்டணம்_கலைப்_பட்டறையின் #மகளிர்_தினக்_குறும்படம்https://m.facebook.com/story.php?story_fbid=1715616745172424&id=100001723444489#மூவிராசப்_பட்டணம்_கலைப்_பட்டறையின் #மகளிர்_தினக்_குறும்படம்

வதைப் புண்கள் தரும்
சதைப்பிண்டம் ஒன்றை உண்டிக் கோயிலின் கற்பக் கிரகத்தில் சுமக்கிறாள் அவளொருத்தி.
மெல்லும் ஆகாரத்தால்
பிண்டத்திற்கு அட்சயமிடுகிறாள்,

மேகத்தை நிலவில் கோர்த்து
மோகத்தின் விளைவைப் பார்த்து
தேகத்தில் சுவையை வார்த்து
கற்பனைப் பூவுக்கு கனவிலே
இதழ் முத்தமிடுகிறாள்.

ஈனும் முத்தை முகையில்
வைத்தே உவமித்து உவகை கொள்கிறாள்.
உலகத்தின்  இனியவை எல்லாம்
கவனித்து கருவுக்கு கருவூலம் ஊட்டுகிறாள் !

கருவில் நிறம் அறியாது,
ஆண் பெண் மணம் அறியாது,
அன்பில் தனித் தனியே  சுவையறியாது நிற்பதால்,  நானிலம் கொண்ட நன்னீர் ஏரிகளில் அவளும் ஒருத்தி !

உடலைப் பிளந்து, விழிநீர் சிவந்து
மகவை தவழ்ந்த நேரம் , இவள்
மனதைக் குடைந்து சமூகம் கடிந்த புரை வேர் கதை வற்றிப் போகும்.!

மழலை கொஞ்சல் மொழியில்
மதுரம் கலந்த தொனியில், வண்ணக் கவிகள் அவள் படிப்பாள், பள்ளிச் சிறுமை வயதில் பக்குவத் தோள்களில் பகுத்தறியும் புத்தகம் தான் சுமப்பாள்.

பூப்பெய்தும் காலத்தே பூவை முகம் சிவப்பாள் , பருவக் கிளிகள் பறிக்க விளையும் காதல் கனிகளை, கற்புக் கோட்டையில் கவனமாய் காப்பாள்.

கல்வித் தூண்களில் கற்சிலை வடிப்பாள், நூதனப் பொறிகளை மதி கொண்டு தறிப்பாள்! வறுமைக் காட்டிலும் வசந்தப் புன்னகை பூப்பாள்! வீட்டில் சுமைகளை பொதி கொண்டு சுமப்பாள் !

கலவி கடந்த காதலை ரசிப்பாள் ! தலைவனைப் பார்க்கையில்
பூ முகம் சிவப்பாள்!
உணர்ச்சிக்கு உருகத் தடை விதிப்பாள் ! புணர்ச்சிக்கு பருவத்தடை தெளிப்பாள்! கண்ணிலும் தெளிவாய் கற்பைக் காப்பாள் !

விதிக்கும் மதிக்கும் வீதி சமைத்து காதல் கைசேர வீறு நடை கொள்வாள்.
சூழ்நிலை என்னும் வேகத் தடையால் வேதனை பூசி வெட்கித் தலைகுனிவாள் !

தோல்வியில் காதலன் வெறுப்பு வார்த்தைக்கு கள்ளிச் செடியாய் மெளனம் தரிப்பாள் ! வெள்ளத்தின் கோரமாய் கோபங்கள் இருந்தும் காதலின் விளைவென்று அமைதி  கொள்வாள்!

மனது கருக மறு வீடு செல்வாள், உணர்வு பொசுங்க ஊடல் கொள்வாள் காதல் பசுமையை காலம் திண்ண கணவன் காலடி சொர்க்கம் என்பாள்!

சமையல் தொடங்கி துவையல் வரை  தேனிக் கூடாய் தினமும் விரைவாள்!  பட்டினிக் கோப்பையை பாயாசம் என்பாள் ! குழந்தை சிரிக்க கோமாளியாவாள் ! கணவன் ரசிக்க ஏமாளியாவாள்!

வதைப் புண்கள் தரும் சதைப்பிண்டம் ஒன்றை உண்டிக் கோயிலில் அன்பாய் சுமப்பாள் !

தண்ணீருக்குள் தெய்வச் சிலை தெரிந்தால்  அதிசயம் என்கிறோம்
பன்னீருக்குள் தெய்வச் சாயல் கொடுப்பவளை  தெய்வத்தாய் என்றால் அவை மிகையில்லை!

#ஆக்கம்
#கவிதையின்_காதலன் John Belkan Fernando

புரை - குரள் வளை
வதைப் புண்கள் - வயிற்றுக்குள் குழந்தை உதைப்பது
சதைப் பிண்டம் - சதையால் ஆன ஓர் உருவம் அல்லது பொருள்
உண்டி - வயிறு
ஆகாரம் - உணவு
அட்சயம் - கொடுத்தல் / வாங்குதல்
முகை - முத்தின் ஆரம்ப நிலை
நானிலம் - உலகம்
மதுரம் - இனிமை
கலவி - sex
புணர்ச்சி - Sex

torsdag 8. mars 2018

ஆசையே விலகிப் போய் விடு

#ஆசையே_விலகிப்_போ

குப்பை மேட்டில் எரியும்
குப்பையினின்று பறக்கும் சாம்பல்
துகள்களைப் போலே மனிதனில்
இருக்கும் பண ஆசையே விலகிப் போ!

காய்ந்த மரத்திலிருந்து உதிரும்
சருகுகளைப் போல் மனிதனில்
இருக்கும் காம ஆசையே விலகிப் போ!

பருத்தி மரக்காய்கள் பழுத்து,வெடித்துப் பறக்கும் பஞ்சு போலே மனிதனில்
இருக்கும் மது ஆசையே விலகிப் போ!

இரவை ஆட்டிப் படைத்தப் பனி
பகலவனைக் கண்டதும் பணிந்து
போவது போல் மனிதனில்
இருக்கும் பதவி ஆசையே விலகிப் போ!

மனிதனுள் இருந்து மனிதனை
ஆட்டிப் படைக்கும் இவ்வளவு
பேராசைகளும் விலகிப் போங்கள்!

றோய் குருஸ் அம்புறோஸ்,
Amburose Croos Roy.

உலக மகளிர் தினம் கவிதை

#மாதம்_மூன்று_நாட்கள்_எட்டு
#உலகமகளிர்_தினம்

ஆராரோ ஆரிரரோ
அழுகுரலும் அடங்கிப்போகுமே
ஆறடி மண்ணுக்குள்ளே!

பெண்ணுக்குள்ளே உயிர் பெற்ற பெண்மையைப் போற்றிட,
புகழ்ந்தேற்றிட பல யுகங்கள்
போதாதே இங்கே!

உயிருக்குள் உயிர் சுமக்கும் உத்தமியைப் பெண்ணாய்க் கண்டானோ பிரம்மனவன்!

குவா குவா சத்தம்
நித்தம் சொட்டும்
மழலை முத்தம்

தத்தித் தத்திப் பிஞ்சு விரல்கள் நடக்கையிலே கெட்டியாக பற்றிக்கொள்வாள் பிஞ்சு கைவிரல்களை அன்னையவள்!

கத்திக் கத்திப் பேசினாலும் அன்போடு அணைத்திடுவாள் பெண் மகவைத் தாயவள்!

சிறு வயதிலே ஆண் பிள்ளை
அரை மேனியாய்த் திரிந்தாலும்
பெண் பிள்ளைதனை சிப்பிக்குள்
முத்தாய்ப் பார்த்திடுவாளே!

""என்ட செல்லமே வாமா ஓடியாம்மா இத போடும்மா போட்டுனு போம்மா""

"வேணா நீயே போடு போ"

என்ற மழலை மொழி கேட்டு
மனக்கவலை தீர்ப்பாளே!

அவளுக்குத்தான் தெரியும் பெண்மையின் மகத்துவம்

வளர வளர அவளுக்கே முக்கியத்துவம் முன்னுரிமை

ஆண் பிள்ளை வயதுக் வந்தால் சடங்கென்ன சம்பிரதாயம் என்ன

பெண் பருவமடைந்தால்......

அக்கா அக்கா ………

"என்ன செண்பகம் இந்த உச்சி வெயில்ல வேர்க்க வேர்க்க வந்திருக்க என்ன விசயம்……"

"அக்கா நாட்டுக்கோழி முட்டை இருந்தா தாங்கக்கா பின்னேரம் அவரு வேலையால வந்தப்பிறகு காசு கொணந்தாரன் தாங்கக்கா………"

முதல் தண்ணி
ஊத்திப் புட்டுக்களி கிண்டி
கொடுத்த பின்பு அவள் வயிற்றிலோ புளிக்கரைசல் மகவின் எதிர்கால வாழ்வை எண்ணியே!

எத்தனை சவால்கள்,
எத்தனை புகார்கள்,
எத்தனை விவாதங்கள்
அத்தனையும் பொறுத்துப் போவாளே தான் பெற்ற பெண் மகவுக்காக!

பள்ளியிலே கேளிக்கைப் பேச்சு,
வீதியிலே கோமாளிகள் கூத்து,
இவைகள் அனைத்தையும் எதிர்த்து நடை போடுவாளே இலட்சியப் படி கொடி பிடித்து!

காதல் என்ற போர்வையிலே
ஆயிரம் ஆசாபாசங்கள்,
கோப தாபங்கள்,
பாச நேசங்கள்
விசமாய்ப் போகக்கூடிய கட்டிளமைப் பருவ வேடங்களைத் தகர்த்து முன்னின்றுடுவாளே!

பட்டணத்துப் பெண்கள் மனதால்
வலியோரே வார்த்தைகளால் அவர்கள் மனக்கிடக்கைகள் யாருக்கும் புரியாதே!

கிராமத்துப் பெண்கள் பேச்சும்
அச்சு வெல்லமே நடை உடை
பாவனையால்  மனதையும் தொடுவார்களே!

அவள் தாயாகித் தன் சேய்க்குப் பாட்டியானவளைத் தாங்கி ஆதரித்து அனுசரித்து வாழ் நாள் முடிவு வரை
அவளோடு தண்டவாளம் போலே பயணித்திடுவாளே!

தான் தத்தித் தத்தித் நடந்த போது
எட்டி எட்டிப் போகமல் கெட்டியாகப்
பற்றிக் கொண்டு சுட்டி நடை போட்டவளின் தள்ளாடும் வயதினிலே அவளைத் தள்ளாட விடாமல் பிறர் வாய்ச் சொல்லால் எள்ளி நகையாட விடாமல் தாங்கி நிற்பாளே பெண்ணவள்!

மண்ணைப் பெண்ணுக்கு ஒப்பிடுவார்கள் அவள் மண்ணைப்போல் மௌனித்து இருப்பதினாலோ!

பெண்ணுக்கு நிகர் கண்ணாடியில்
தோன்றும் அவளின் உருவமே!

உலகப் பெண்களை உளமாற வாழ்த்துவோம்!

CROOS.A.H

tirsdag 6. mars 2018

நிழல் தேடிய பயணத்தில் CROOS.A.H


நிழல் தேடிய பயணத்தில்
நினைவான நிலவே
என் நிறைவேறாத
ஆசைகள் எத்தேனையோ!

பூமி வாழ் மானிடன் நான்
அருகில் வர தொட ரசிக்க
ஏக்கங்கள் கோடியே
ஆனாலும் தெருக்கோடியே!

நீ என்றாவது என்னைப் பற்றி
சிந்தித்ததுண்டா என்னைக் காண
பூமி தரையிரங்கி வந்ததுண்டா
எப்போ வருவாய் பதிலுரை!

என்னைப் போலே எண்ணற்ற
எண்ணங்களுடன் எண்ணற்ற
மனிதர்களின் எண்ணங்களுக்கு
எப்போது விடை தருவாய்!

வான் வீதி விட்டு மண் வீதி
இறங்கி வா மதியே
பதில் தா கேள்விகளுக்கு
ஏமாற்றாதே நான் ஏமாந்திடுவேனே!

CROOS.A.H

mandag 5. mars 2018

அப்பா

#அப்பா(ஐயா)

அப்பா இல்லையெனில்
பிள்ளையாகுமே தப்பாய்
அப்பா இருந்தாலே பிள்ளை
வாழ்க்கை இருக்குமே சிறப்பாய்/

இன்று வரை அணிந்ததில்லை
கால்களுக்குப் பாதணி
என் நினைவு தெரிந்த
நாள் முதலாய்க் கண்டதில்லை
அவர் கைகளில் தங்க நகையணி/

நரை தாடி வயதிலும்
ஓடி ஓடி உழைத்திடுவாரே
நடை,உடை இன்று வரைத்
தள்ளாடிக் கண்டதில்லையே/
-
காண்போரிடம் இன்முகம்
காட்டி உறவாடிருவாரே
உறவுகளுக்கு முன்மாதிரியாய் நிலைத்திடுவாரே/

இல்லத்திலே எனக்கு மூத்தோர்
மூன்று சகோதரர்களே
அவர்களுக்கெல்லாம் மூத்த
சகோதரர் அவராமே/

அகவை எழுபதிலும் நேரிய பார்வையும்,நிமிர்ந்த நடையிலும் இம்மியளவும் குறைந்ததில்லையே/

மாற்றாரைக் குறைப்பாடு
உரைக்கவென குரலும்
ஓங்கியதில்லையே
குறைகண்டு வந்தவரையும்
நிலை தாழ்த்தி உரைத்ததில்லையே/

மாலையிட்ட நாள் முதலாய்
அதிகாரம் அம்மாவிடம்
கொாண்டதில்லையே
தன் இரத்த உறவுகளிடம்
அகங்காரப் பேச்சும்
உரைத்ததில்லையே/

அன்னையவள் கொண்டாளே
ஐயிரண்டு மாதக் கர்ப்ப வலி
தந்தையவர்க்கு நானோ இன்று
வரை தலைவலி ஆனாலும்,
கையுதறி விட்டதில்லையே/

உழைத்த கைகள் வரி வரியாய்க்
காய்ந்து போனாலும்,
மனதிலே பசுஞ்சோலை
வனம் போலே ஈரம் உற்றவரே/

அப்பாவைப் பற்றியியம்ப
சிறப்புற்ற தமிழே நீ வாழும்
காலம் வரைக்கும்
அப்பாவின் வாழ் நாள் நீளட்டுமே/

றோய் குருஸ் அம்புறோஸ்,
Amburose Croos Roy.

#மூவிராசப்_பட்டிணம்_கலைப்_பட்டறை #ஆக்கம்:- #மூவிராசப்_பட்டிணக்_குழுமம் (#இது_ஒரு_கழகம்_அல்ல)

#மூவிராசப்_பட்டிணம்_கலைப்_பட்டறை

மூவிராசப் பட்டிணம் மூச்சடங்கா
முயற்சியுடையோரின் கருவூலம்/

எங்கள் மூதாதையரின் பழம் பெருங்கதை
சொல்லுமே பெயர் சாலை தெருவோரம்/

கடற்கரையோரம் நிலை கொண்ட
எங்கள் பழம் பெரும் நகரோரம்/

வந்தாரை வாழ வைத்து பெயர் பெற்ற
இருபக்க நீர்ப்பரப்போரம்/

நாங்கள் எடுத்த முயற்சி
கைகூடுமே வான் வீதிவரையோரம்/

பல திறன் கொண்ட கலைஞர்கள்
எங்கள் வலக்கரமோரம்/

அடுத்தடுத்து ஆக்கம் படைப்போரின் பெரும் கலைப்பட்டறை எங்கள் கையோரம்/

இனி எங்கிலும் காண்போம் திறமைகளின் படைப்புக்கலை எங்கள் இளைஞர்களின் விரலோரம்/

ஆக்கம் கொண்டு பிரகாசித்திடுவோம்
இணையத்தின் எல்லைவரையோரம்/

ஊக்கம் கொடுத்தால் சென்றிடுவோம்
உலக எல்லைவரையோரம்/

உயர்ந்து நிற்போம் தாழ்ந்தோனை
உயர்த்தி வைப்போம்/

#ஆக்கம்:- #மூவிராசப்_பட்டிணக்_குழுமம்
                 (#இது_ஒரு_கழகம்_அல்ல)

விக்டரியன்ஸ் கொடி பறக்கும்.... # கவிதையின் காதலன்.

 விக்டரியன்ஸ் கொடி பறக்கும்....

வெற்றிக் கோயில் மணியடிக்க
 எட்டுத்திக்கும் அனல் பறக்க,
நடந்து வரும் படையை பாரு!
இவர் திறனுக்கு முன்,
துணிந்து நின்று
திணறியவர் கதைய கூறு!

மொத்த தீவும் நடு நடுங்க,
ஒத்த கொடி பிடிச்சு கொண்டு
விக்டறியன் நடந்து வந்தா,
கத்தும் கடல் புலன் அடக்கும்,
வெட்டும் தீயின் பொறி பறக்கும்.

பத்திமாவில் அடிய வச்சு,
கபடி சொல்லி கால் மடிச்சா,
லூர்த்து பாட்டில் வெடிமுழங்கும்!
கெபியடியும்  நடுநடுங்கும்!
மணல் பறக்க அடியெடுத்து,
கடல் மடியில தடிய நட்டு,
மட்டைப் பந்து அடிக்கையிலே
மேகத் தட்டும் குல நடுங்கும்
வழி கொடுத்து ஒதுங்கி நிக்கும்.

தடகளத்தில் மிதிய வச்சு
தசைகள் எல்லாம் நடுநடுங்க,
விசையை கொண்டு
ஓட்டம் கண்டால்
திசைகள் எல்லாம் பறபறக்கும்
 பேசாலை சிலு சிலுக்கும் .

வசவுகளை உதறித் தள்ளி
நெசவுகளாய் உறவை அள்ளி
விக்டரியன்  விசையின் புகழ் விண்வரைக்கும் முழங்கி நிற்க,
ஊர்ச்சோலை மரங்களெல்லாம்
பேசாலைப் புகழ் படிக்கும்!

# கவிதையின் காதலன்.

lørdag 3. mars 2018

முத்த தோட்டாக்கள்

புருவங்களை இமைகள் காவு கொள்ள,
காதல் குளத்தில் பார்வைகளின் தற்கொலைத் தாக்குதல்!
இரு பால் இனமும் சம பாதிப்பில்,
ஆனால் உள் காயங்களால்
அதிகம் உழன்றது அவன் இதயம்.

அவளின் உதட்டுப் பிளவுகளின் வண்ணத்தை இவன் அபகரிக்க
உச்ச கட்ட மோகத்தில்
மோதல் கொள்கிறது - இந்த
காதலர் தினப் பனிப் போர்!
கைகள் கட்டப்பட்ட இப் போரில்,
முகங்கள் உணர்வுகளைக் கூட்டி போரிடுகின்றன!

எச்சில் தோட்டாக்கள்
வாய்வழிச் சுரங்கத்தில் மாறி மாறி தாக்குதல் நடத்த,
அவ்வப்போது நாக்குகள்
முறியடிப்புத் தாக்குதல் நடத்துகின்றன!

காதல் கோட்டையை
தக்க வைத்துக் கொள்ள,
நடக்கும் இவ் உள்நாட்டுப் போரில்,
உஷ்ணக் காற்றுக்கு மட்டும்
உட்புகுந்து வெளிவர அனுமதி!
வலிய யுத்தத்தில்
பற்கள் ஒவ்வொரு முறையும்
இருப்பை தக்க வைக்க
பற்றிப் பிடித்து
தாக்குதல் நடத்துகின்றன!
அவற்றுக்கு உதவியாக
நாக்கு அவ்வப்போது
பதுங்கித் தாக்குதல் புரிகின்றன!

உக்கிரப் போரின் முடிவில்
விதிமுறைகள் தளர்கின்றன, கட்டவிழ்க்கப்பட்ட கைகள்,
திடீரென அவளின்
தாடை தேசத்தில் கை வைக்க,
மோகப் பிழம்பில் எச்சில் காட்டாறு பெருக்கெடுத்து ஓடுகிறது!
அமைதி கேட்ட அங்கங்கள் யாவும்
புரட்சி ஆயுதம் ஏந்தியதால்,
இரு தேசங்களும் செய்வதறியாது நின்றன!

ஊடல் போர் வரக்கூடா தென்பதில் தெளிவான அவளரசியும், அவனரசனும் ஈற்றில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்கின்றனர்!
இழப்பீடுகள் வழங்கப்படா
இப்போரில் வலிகளூடே நிவாரணம்
வழங்கியது சிறப்பு!
ஆனாலும் இGet ரு தேசத்து அங்கங்களிலும் ஏக்கம் என்னும் வறுமை
தொற்றிக் கொண்டதை
யாராலும் தடுக்க முடியவில்லை!

# கவிதையின் காதலன்.#தாயவள் #நான்_காணும்_தேவதை றோய் குருஸ் அம்புறோஸ் .

#தாயவள் #நான்_காணும்_தேவதை ஐயிரண்டு மாதக்  கலப்படம் அற்ற  வயல்வெளி அவள்/ பன்னீர்க் குடத்தில்  தலைகீழாயினும் தடுமல் பி...