tirsdag 20. mars 2018

கிழிந்த பாடசாலை புத்தகப்பை Amburose Croos Roy¶¶¶

கிழிந்த பாடசாலை புத்தகப்பை


Amburose Croos Roy¶¶¶
கிழிந்த பாடசாலை புத்தகப்பை
அழுக்குப் படிந்த பழைய சீருடை

எண்ணையில்லாமல் வாரப்பட்ட
வளர்ந்த இரட்டைச் சுழித்தலை

ஒற்றையடிப்பாதை வழியே
புழுதி கிளம்ப ஓடோடி வந்தான்

வந்த வேகத்தில் காலை விட்டுப்
பறந்து போனது தைத்திருந்த
ஒற்றைச் சப்பாத்து

அதை கையிலெடுத்தவனாய் மூச்சிறைக்க
பாடசாலை கதவை நெருங்கி வந்தான்

கண்களில் பசி மயக்கம் ஆனாலும்,
படிக்க வேண்டும் என்ற பேராசை

இறுதி மணியடிக்க கதவையடைத்தான்
கறுப்பு நீள காற்சட்டை மாணவன்

கூனிக்குறுகி வெளியில் நின்றான் அவன்
அதிபர் வந்து அவனைக் கண்டு சினத்துடன்

வழமையாக போடும் அடியை விட
இரண்டடி மேலதிகமாக போடவே

கையை கசக்கிக்கொண்டு வகுப்பறையை
நோக்கி வேகமாக ஓடிப்போனான்

பசியோடு படித்து விட்டு மீண்டும்
அதே ஓட்டம் வீட்டுக்கு வந்தான்

வீட்டு வாசலை நெருங்கவே உள்ளே அப்பாவின் அரட்டல் சத்தம் அவனை பயமுறுத்தியது

அவனின் அப்பன் அம்மாவோடு வாய்ச்
சண்டை பிடித்துக்கொண்டு இருந்தான்

வந்த பசி அவனுக்குள் ஆடி அடங்கிப்போனது
கூடவே அம்மாவின் விம்மலும்

பக்கத்து வீட்டில் வாங்கிய ஒரு சுண்டு அரிசியும் பருப்பும் அடுப்பங்கரையை அலங்கரித்துக் கொண்டிருந்தன

இரட்டைப்பசி அவனை இரண்டாக்கிப்போட்டது
இரண்டரைக்கு டியூசன் என்று ஓடிவிட்டான்

இவ்வாறு ஆண்டுகள் கழிந்து இறுதித்தேர்வில்
அவன் பெற்ற புள்ளி பல்கலைக்கழக நுழைவு

அம்மாவுக்கு மட்டற்ற சந்தோசம்
அப்பனும் பல்கலைக்கழகம் எடுபட்டவனாம்

பின்னாளில் தாய் சொன்னவள்
குடியால் இடையில் கெட்டவனாம்.

தகப்பனுக்கு புத்தியுடன் போதையும்
தெளிந்தது, அன்று முதல் ஓடி ஓடி
உழைத்து கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்தான்

மகனை பட்டதாரியாக்கினான்
மனைவியை மதிக்கலானான்

வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது,
கண்களில் கண்ணீர் அரும்பியது

இளமையில் கல்வி சிலையில் எழுத்து போல்
படிப்பும் வறுமையும் அவனை உயர்த்தியது.

Amburose Croos Roy¶¶¶

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...