torsdag 8. mars 2018

உலக மகளிர் தினம் கவிதை

#மாதம்_மூன்று_நாட்கள்_எட்டு
#உலகமகளிர்_தினம்

ஆராரோ ஆரிரரோ
அழுகுரலும் அடங்கிப்போகுமே
ஆறடி மண்ணுக்குள்ளே!

பெண்ணுக்குள்ளே உயிர் பெற்ற பெண்மையைப் போற்றிட,
புகழ்ந்தேற்றிட பல யுகங்கள்
போதாதே இங்கே!

உயிருக்குள் உயிர் சுமக்கும் உத்தமியைப் பெண்ணாய்க் கண்டானோ பிரம்மனவன்!

குவா குவா சத்தம்
நித்தம் சொட்டும்
மழலை முத்தம்

தத்தித் தத்திப் பிஞ்சு விரல்கள் நடக்கையிலே கெட்டியாக பற்றிக்கொள்வாள் பிஞ்சு கைவிரல்களை அன்னையவள்!

கத்திக் கத்திப் பேசினாலும் அன்போடு அணைத்திடுவாள் பெண் மகவைத் தாயவள்!

சிறு வயதிலே ஆண் பிள்ளை
அரை மேனியாய்த் திரிந்தாலும்
பெண் பிள்ளைதனை சிப்பிக்குள்
முத்தாய்ப் பார்த்திடுவாளே!

""என்ட செல்லமே வாமா ஓடியாம்மா இத போடும்மா போட்டுனு போம்மா""

"வேணா நீயே போடு போ"

என்ற மழலை மொழி கேட்டு
மனக்கவலை தீர்ப்பாளே!

அவளுக்குத்தான் தெரியும் பெண்மையின் மகத்துவம்

வளர வளர அவளுக்கே முக்கியத்துவம் முன்னுரிமை

ஆண் பிள்ளை வயதுக் வந்தால் சடங்கென்ன சம்பிரதாயம் என்ன

பெண் பருவமடைந்தால்......

அக்கா அக்கா ………

"என்ன செண்பகம் இந்த உச்சி வெயில்ல வேர்க்க வேர்க்க வந்திருக்க என்ன விசயம்……"

"அக்கா நாட்டுக்கோழி முட்டை இருந்தா தாங்கக்கா பின்னேரம் அவரு வேலையால வந்தப்பிறகு காசு கொணந்தாரன் தாங்கக்கா………"

முதல் தண்ணி
ஊத்திப் புட்டுக்களி கிண்டி
கொடுத்த பின்பு அவள் வயிற்றிலோ புளிக்கரைசல் மகவின் எதிர்கால வாழ்வை எண்ணியே!

எத்தனை சவால்கள்,
எத்தனை புகார்கள்,
எத்தனை விவாதங்கள்
அத்தனையும் பொறுத்துப் போவாளே தான் பெற்ற பெண் மகவுக்காக!

பள்ளியிலே கேளிக்கைப் பேச்சு,
வீதியிலே கோமாளிகள் கூத்து,
இவைகள் அனைத்தையும் எதிர்த்து நடை போடுவாளே இலட்சியப் படி கொடி பிடித்து!

காதல் என்ற போர்வையிலே
ஆயிரம் ஆசாபாசங்கள்,
கோப தாபங்கள்,
பாச நேசங்கள்
விசமாய்ப் போகக்கூடிய கட்டிளமைப் பருவ வேடங்களைத் தகர்த்து முன்னின்றுடுவாளே!

பட்டணத்துப் பெண்கள் மனதால்
வலியோரே வார்த்தைகளால் அவர்கள் மனக்கிடக்கைகள் யாருக்கும் புரியாதே!

கிராமத்துப் பெண்கள் பேச்சும்
அச்சு வெல்லமே நடை உடை
பாவனையால்  மனதையும் தொடுவார்களே!

அவள் தாயாகித் தன் சேய்க்குப் பாட்டியானவளைத் தாங்கி ஆதரித்து அனுசரித்து வாழ் நாள் முடிவு வரை
அவளோடு தண்டவாளம் போலே பயணித்திடுவாளே!

தான் தத்தித் தத்தித் நடந்த போது
எட்டி எட்டிப் போகமல் கெட்டியாகப்
பற்றிக் கொண்டு சுட்டி நடை போட்டவளின் தள்ளாடும் வயதினிலே அவளைத் தள்ளாட விடாமல் பிறர் வாய்ச் சொல்லால் எள்ளி நகையாட விடாமல் தாங்கி நிற்பாளே பெண்ணவள்!

மண்ணைப் பெண்ணுக்கு ஒப்பிடுவார்கள் அவள் மண்ணைப்போல் மௌனித்து இருப்பதினாலோ!

பெண்ணுக்கு நிகர் கண்ணாடியில்
தோன்றும் அவளின் உருவமே!

உலகப் பெண்களை உளமாற வாழ்த்துவோம்!

CROOS.A.H

Ingen kommentarer:

Legg inn en kommentar

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் –

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி ப...