torsdag 27. desember 2018

மரம் வளர்ப்போம்! மண் காப்போம்!

மரம் வளர்ப்போம்! மண் காப்போம்! பேசாலைதாஸ்

                                 மரம் வளர்ப்பது, இயற்கையான காடுகளை அழியாது பாதுகாப்பது என்பது மிக மிக அத்தியாவசிய செயல்பாடாக மாறி வருகி ன்றது, உலகம் வெப்பமயமாகின்றது என்றும் அதனால் உலகம் இயற்கை பேரழிவுகளை சந்தி க்க இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் எச்சரி க்கின்றார்கள், உலக வெப்பமயம் ஆகுதல் மூலம்,  உலக கடல் மட்டம் இன்னும் முப்பது வருடங்களில் அபரிமிதமாக உயரும் என்றும் பல தீவுகள் அழிந்துவிடும் என்றும் நாஸா எச்சரித்து ள்ளது. மாலைதீவு கூட்டங்களில் சில தீவுகள் கடலில் அமிழ்ந்துவிட்டது,

                                                       அங்கு வாழ்ந்த மக்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியா குடியுரிமை கொடுத்து ஏற்றுக்கொன்ட விடயம் யாவரும் அறிந்ததே! மாலை தீவுக்கு  சற்று அப்பால் தென் பக்கமாக இரு க்கும், அமெரிக்க இராணுவதளம் கொண்ட டியாகோ கார்ஸியா நீரில் மூழ்கும் அபாயம் நெருங்கிவருவதால், அமெரிக்கா திரிகோணமலை யை தம்வசப்படுத்த பகிரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இன்னும் மன்னார் தீவு ஐம்பது வருடத்தில் முற்றாக நீரில் மூழ்கும் அபாயம் உண்டு! 


                                                           காடுகளை அழியாது பராமரிப்பதன் ஊடாக உலகம் வெப்பமயமாகுதலின் விரைவை கட்டுப்படுத்த முடியும், மரங் களை வளர்ப்பதன் ஊடாக பசுமையை ஏற்படுத்த முடியும், எங்கு அடர்ந்த காடுகள் உண்டோ, எங்கே  வானளாவிய உயர் மரங்கள் உண்டோ அங்கு தான் மழை வீழ்ச்சி அதிகமாக இருக்கும், இதனால் அப்பிரதேசங்களில் வெப்பம் குறைந்து மிதமான காலனிலை காணப்படும். இதை புரிந்து கொள்ள அதிக விளக்கம் தேவையில்லை என் நினைக்கின்றேன். 


                                                   இலங்கைத்தீவில் வரண்ட பகுதியாக புவியல் பாடத்தில், மன்னார்,அம்பாந்தோட்டை மாவட்டங்கள் காணப்படுகி ன்றது. வடகீழ், தென்மேல் பருவக்காற்றுகள் வீசும் திசைகளை ஒதுக்கு ப்புறமாக கொண்டிருப்பதாலேயே இப்பகுதிகளுக்கு மழை வீழ்ச்சி மிக மிக குறைவாக இருப்பதாக சொல்லப்படுகின்றது, அந்த காரணம் ஏற்பு டையே ஆயினும் அதுமட்டும் காரணம் அல்ல, மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை, கழுதைகள் உலாவும் உப்புத்தரவையும், வரண்ட மணல் திட்டுகளும், மழை வீழ்ச்சி குறைவுக்கு காரனமாக அமைகின்றது, பனை மரங்களையும், ஈச்சை பற்றைகளும் சாரீரப்பதனை அதிகாரிக்காது, இதற்கு மாறாக கள்ளிபற்றைகள் காற்றின் சாரீரப்பதனை உறிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்டது.


                                                                 குடைபோல விரிந்து குளிர்ச்சியான நிழல் தரும் உயிலை மரங்கள், உடை மரங்கள் மழை வீச்சியை துரிதப்படுத்தும் காட்டு மரங்களாகும்,  ஆனால் அவை யாவும் துரித கதியில் வெட்டிச்சாய் க்கப்படுகின்றன, வறிய சில குடும்பங்கள் தமது பிழைப்பூதியத்துகாக விரகு வெட்டிப்பிழைப்பதை நாம் பொறுத்துக்கொண்டாலும், எரிவாய்வு வங்கி சமையல் செய்ய முடியாத வறிய குடும்பங்கள் விரகு வெட்ட காட் டுமரங்களை தறிப்பதை மனிதாபிமான ரீதியில் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பேக்கரிகள், தொழில்சாலைகள் பெருமளவில் காட்டு மரங் களை அழிப்பதை எப்படி சகித்துக்கொள்ளமுடியும்?


                                                          
எமது கிராமத்தில் இயங்கிவரும் நண்டு, மீன் பதனிடும் தனியார் ஸ்தாபனம் பெருமளவு உடைமரங்கள், உயில்மரங் களை நாள் தோறும் தறித்து, எரிபொருளாக பாவிப்பதை நாம் கண்டும் கானாதவர்கள் போல‌ அலட்சியம் செய்கின்றோம், உடனடியாக இந்த ஸ்தாபனம் காட்டு வளங்களை  சூறையாடுவதை தடுத்து நிறுத்த அவச ரமாக நடவடிக்கையில் இறங்கவேண்டும்! தொழில் நிறுவனத்திற்கு நாம் எதிர்ப்பாளர்கள் அல்ல, ஆனால் எரிபொருளாக காட்டு மரங்கள் பாவிப் பதை தடை செய்யவேண்டும். பேசாலையில் கணிசமான குடும்பங்கள், எரிவாய்வை சமையலுக்கு பாவித்துவரும் இந்த நிலையில், தனியார் ஸ்தாபனம் இலாபத்திற்காக எமது காட்டுமரங்களை அழிப்பதை எமது உறவுகளே அனுமதிக்காதீர்கள்! இது சம்பந்தமாக பிரதேச சபை நிர்வா கிகள் தங்களது கவனத்திற்கு கொண்டுவரும்படி பணிவாக ஊரின் சார்பில் கோரிக்கைவிடுகின்றேன்! உடனடியாக எமது கோவில் நிர்வா கம், இந்து ஆலைய நிர்வாகிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கழக ங்கள் உடனடியாக விரைந்து செயல்படவேண்டும் என்று உரிமையோடு கோரிக்கைவிடுகின்றோம். மீண்டும் தங்களது கவனத்திற்கு நினைவூ ட்டுகின்றோம், நாம் தொழிற்சாலையை எதிர்க்கவில்லை ஆனால் காட்டை அழிப்பதை எதிர்க்கின்றோம்,  எமது வளங்களை நாம் பாதுகா ப்போம், இறைவன் நமக்கு தந்த  இயற்கையை பாதுகாப்போம், இயற் கையின் சீற்றங்களுக்கு இரையாகாமல் துரிதமாக செயல்படுவோம்! அன்பின் பேசாலைதாஸ்

fredag 7. desember 2018

தாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை பார்த்தழுவேன்? நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்?


தாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை  பார்த்தழுவேன்? நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்?  பேசாலைதாஸ்

                                                      இன்று எனது பேசாலை மக்கள் அன்னைக்கு விழா எடுத்து மகிழ்கின்றார்கள்! இந்த மரியாள் என்ற பெண் இல்லை என்றால் கிறிஸ்து மனிதனாத பிறக்க சந்தர்ப்பம் ஏது? இந்த உலகில் ஒரு மனிதன் பிறக்கவேண்டும் என்றால் ஒரு பெண் அதற்கு இணங்க வேண்டும்! அந்த இணக்கம் இல்லாமல் இறைவன் நினைத்தால் கூட மனிதாக பிறக்க முடி யாது! கிறிஸ்து மனிதனாக பிறக்கவேண்டும் இல்லை என்றால் மனிதனுக்கு இரட்சிப்பு இல்லை, எனவே மனித குலத்தை இரட்சித்தது அன்னை மரியாளே!இதனை எமது பங்கிலே இருந்து கொண்டு அன்னையை விமர்சிக்கும் சபை சகோதரங்கள் உணரவேண்டும்! என் நினைவுகளில் சதா அன்னையின் நினைவே வந்து போகின்றது, அன்னையைபற்றி சினிமா பாடலில் வரும் அடிகள் ஏனோ என் மனதை தொட்டு செல்கின்றன அதனை  இன்நாட்களில் உங்களோடு பகிர துனிந்தேன், தாய் முகத்தை பார்க்காமல், யார் முகத்தை  பார்த்தழுவேன்?நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழிலலில் போய்யிருப்பேன்? அன்புக்கரங்கள் படத்தில் வரும் பாடலின் அடிகள்  

எனக்கு பிடித்த இன்னொரு பாடல் வரிகள் " அன்னையை பார்த்த பின் என்னவேண்டும் தெய்வமே? இன்று நான் உன் பிள்ளைபோல மாறவேண்டும்  என் அன்னையே! இந்த பாடல் தெவமகன் படப்பாடலில் இடம் பெறுகின்றது பேசாலைதாஸ்
         


அன்னையை பார்த்த பின் என்னவேண்டும் தெய்வமே? 


கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது (செய்தியாளர்) 03.01.2020 கடந்த வருடம் (2019) மன்னார் மறைமாவட்டத்தில்...