torsdag 30. november 2017

இந்த பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது?

இந்த  பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது? 

என்  இனிய உறவு களே! எனது கேள்வி உங்களுக்கு ஆச்சரி யமாக இருக்கின்ற தா?  இது தெரியாதா? வேறு யாருக்கு, பேசாலை மக்களின் உழைப்பிலே கட்டப் பட்டதால் இது பேசாலை மக்களுக்கு சொந்தமானது என்று நீங்கள் சொல்லக்கூ டும்! அதுதான் தவறு என்று நான் சொல்கின்றேன். திருச்சபைக்கு என்று ஒரு சட்டம் உள்ளது அதாவது The canon law of the Catholic Church (Latin: jus canonicum) என்று சொல்வார்கள். அந்த சட்டத்தின் பிரகாரம் எமது பேசாலை வெற்றிநாயகி ஆலையம் திருச்சபைக்கு சொந்தமானது. அதாவது மன்னார் மறை மாவட்ட பரிபா லகராக இருக்கும் ஆயருக்கும், அவரது நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட பேசாலை பங்கு குருவே பேசாலை வெற்றிநாயகி ஆலையத்தின் நேரடி உரிமையாளர் ஆவார் ஆயினும் இர ண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின் இந்த உரிமைகளும் அதிகாரங்களும், பங்கு மக்கள் ஊடாக, பங்கு குரு செயல்ப டுத்தும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதால் ஆலைய‌ அதிகாரங்கள், பங்கு சபையால் குருவோடு சேர்ந்து பரிபாலி க்கப்படுகின்றது. இதை இங்கு நான் ஏன் பதிவு செய்ய முய ற்ச்சிக்கின்றேன் என்றால் நோர்வே நாட்டில் ஓஸ்லோ மற்றும் பேர்கன் பங்கு சபைகளில் நான் செயலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இங்கே பங்கு சபையானது பொது சபையின் உத்தரவாத்துடன் ஒரு நிறைவேற்று சபையாக செயல்படுகின்றது. பொதுக்கூட்டத்தில் தமது செயல்பாடு களுக்கான கேள்விகள் விமர்சனங்களுக்கு அது தார்மீக பொறுப்போடு விளக்கம் அளிக்கின்றது.
                                                                                      பங்கு சபைக்கு என்று ஒரு யாப்பு இருத்தல் அவசியம், அந்த யாப்பின் ஒவ்வொரு சரத்தும் பொதுமக்களின் அனுமதியுடன், அவர்களது அபிப்பி ராயங்களை உள்வாங்கி உருவாக்கப்படல் வேண்டும். இந்த யாப்பை உருவாக்க ஒரு யாப்பு நிர்ணய சபை இருக்கவே ண்டும். அந்த நிர்ணய சபையில் கல்விமான்கள், எமது பங்கை சார்ந்த குருக்கள், கன்னியாஸ்திரிகள், பொது நிலையினர் இப்படி பலதர்ப்பட்டவர்கள் அங்கத்துவம் பெற்று அவர்கள்து ஆலோசனை பெறப்படவேண்டும். ஆக மொத்தத்தில் பங்கு சபையின் நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்பதை ஜனநா யக அடிப்படையில், அறிக்கைகள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும். பங்கு சபையின் நிர்வாகம் மற்றும் பங்கு குரு மீது அண்மையில் பல விமர்சனங்கள் முக நூலிலே பதி வானதினாலே இதை நான் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்ட து. நல்ல விமர்சனங்கள் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதுதான் ஆனால் அதுவே வீண் குழுப்பங்களை தோற்றுவிக்கக்கூடாது. எனவே நமது ஆலையம், நாம் என்ற உணர்வுடன்( We feeling) செயல்படுவோம், இந்த‌ நாம் என்ற உணர்வுத்தத்துவம் We feeling philosophy பற்றி லண்டன் புறுனல் பல்கலைக்கழ்கத்தில் நான் எழுதிய ஒரு ஆய்வு கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்ப த்தில் பதிய விடுகின்றேன். 
அதுவரை அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

mandag 20. november 2017

நமது ஞான மேய்ப்பர்கள்!

நமது ஞான மேய்ப்பர்கள்!

என் அன்பிற்கினிய பேசாலை உறவுகளே! நாம் வெற்றி அன்னையின் பிள்ளைகள், எமது ஆலையத்தில் நாம் மிகப்பெ ரிய பற்றுதல் கொண்டுள்ளோம். எமது பங்குச் சபை மன்னார் மறைமாவட்டத்தில் நிதிவளம் பெருகிய  ஓர் பங்குச்சபை, இந்த பங்கு சபையிலே நிதி நிர்வாகம் என்பது பெரும் பிரச்ச னைக்குரிய விடயம் தான்.  பங்கு நிதியிலே ஒரு தவறு நட க்கும் போது வெறுமனே பங்கு குருவை குறை சொல்வதும், அவரிடம் காரனம் கேட்பதும் உண்மையில் ஜதார்த்தம் இல்லை. 

                                          ஒருவேளை பங்கு சபை நிதியை ஒருவர் முறைகேடாக பாவித்திருந்தால் அதனை வெளிப்படுத்து தல் ஒரு குருவானவரின் கடமை இல்லை. அவருக்கென்று சில தார்மீக பொறுப்புகள் இருக்கின்றது, அதைவிட பாவங்கள், தவறுகள் இது தொடர்பாக கத்தோலிக்க குருவானவருக்கெ ன்று சில நடமுறைகள் உள்ளன. அதனை நாம் ம‌திக்கவே ண்டும். உதாரணத்திற்கு பங்கு பணத்தை முறைகேடாக பாவி த்த ஒருவர், தனது தவறை தனிப்பட்ட ரீதியில் குருவானவரு க்கு தெரிவித்தால் அது தொடர்பாக குருவானவர் மெளனம் காக்கவேண்டியவராக உள்ளார் என்பதனை மறக்கவே ண்டாம். அதனை அவர் மீறுவாராக இருந்தால் அவர் பாவங்க ளை மன்னிக்கும் ஒரு குருவின்  அதிகாரத்ததை கேள்விக்குறி யாக்குகின்றார். 

                                    எனவே ஒரு பங்கு குருவை மன நோகடிப்பது நல்ல செயல் அல்ல, அப்படியானல் பங்கு நிதி நிர்வாகத்தை எப்படி பரிசீலிப்பது என்ற நடமுறை பிரச்சனை எழுகின்றது அல்லவா? அதற்கு எனது ஆலோசனை,  எமது பங்கிற்கு என்று தனியான ஒரு இணையத்தளம் இருக்கவேண்டும் அதில், நிதி துறைக்கென்று தனியான ஒரு பகுதி அமைக்கப்படவேண்டும், அந்த நிதி துறையை பேசாலை பங்கு மக்கள் மட்டும் பார்வை யிடுவதற்கான ஒரு முறையை அமுல்படுத்தவேண்டும்,  அவ ர்கள் ஏற்கனவே இணைத்தளத்தில் தங்களை பதிவு செய்து அதற்கான இரகசிய குறியீடை பெற்றுக்கொள்ளவேண்டும், நான் இங்கு ஒரு சர்வதேச அமைப்பின்  ஊடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தவேளை, எமது பங்கு மகன் அமலி வேலா யுதத்தின் மகன் அந்த தொழில் நுட்ப முறையை நோர்வேயில் இயங்கும் ஒரு நிறுவணத்திற்காக செய்திருந்தார் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன், கணனியில் பல வல்லுணர்கள் எமது ஊரிலே இப்போது இருக்கின்றார்கள் அவர்களின் உதவியை நாடலாம்.
                                                                          இணையத்தளத்தின் நிதி துறையில், பங்கு சபைக்கு வரும் அத்தனை வருவாய், செல வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்,   அதற்கான கேள்விகள் கேட்பதற்கான Feed back முறை அங்கு இருக்க வேண்டும். இதனைவிட்டு பொதுச்சபை கூடி, ஒரு குருவா னவரை நடுவே நிறுத்தி கேள்வி கேட்டு அவமானப்படுத்தல் முறையான செயல் அல்ல, தகவல் அறியும் சட்டப்படி பங்கு மக்களுக்கு பங்கு நிதியில் என்ன நடக்கின்றது என்பதை பங்கு சபை அறிவிக்க க‌டமைப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு தகவல் பரிவர்த்தணை சிறப்பக இருக்குமேயானல், ஊழல், மோசடிகள் என்பன நடக்கவாய்ப்பே இல்லை. மேலும் இணை யத்தளம் ஊடாக கத்தோலிக்க இணைய வானொலி, வத்தி க்கான் வானொலி இவைகளை இணைத்து ஆன்மீகத்தில் முன்னேற முடியும் அதற்கான உதவிகளை நான் எப்பொழும் செய்ய தயாராக உள்ளேன்.
அன்புடன் பேசாலைதாஸ்

fredag 17. november 2017

நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா)

நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா)

ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள் செல்லமாக, அழைப்பதுண்டு. நேர்மையன அன்பான மனிதர், எனக்கு ஒருவகையில்  அத்தான் முறை. சமூக ஆர்வலரும் சிறந்த நாடக கதாசிரியரும், இயக்குனரும் ஆவார். நான் நினைக்கி ன்றேன் போர்வாள் என்ற சரித்திர நாடகம் இவருடையது என்று. இவர் ஒரு ஹாஸ்யமான மனிதர், ஸ்நாபக அருளப்பர் மன்றத்தின் யூபிலி விழாவுக்கு எஸ்தார் என்ற நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அது மிக சுவாரஸ்யமானது! ஸ்நாபக அருளப்பர் மன்ற‌ உறுப்பிணர் எல்லோரும் ஒரு நாள், அவர் வீட்டிற்கு போய் அவரை சந்தித்து, தொட்டப்பா எங்களுக்கு ஒரு நாடகம் எழுதி தாருங்கள் என்றோம் உடனே அவர் நாளை மாலை கோவிலுக்கு நாடகத்தோடு வருகின்றேன் என்றார். 

                                                           சொன்னபடியே வந்தார் கையில்  கொப்பி எதுவும் இல்லை, கொஞ்சம் மப்பு, வந்தவர் நாடகம் ரெடி, நாடகத்தின் பெயர் எஸ்தார் ராணி, நாடக பத்திரங்க ளுக்கு நபர்கள் தெரிவனா ர்கள், எஸ்தர் ராணியாக வேலாயுதம் அன்ரன் தெரிவானர், எஸ்தாரின் காதலான நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். அன்றைய மாலை இதோடு  முடிந்தது, மறு நாள் மாலை வந்தார் அன்று கூட கையில் கொப்பி இல்லை, ஆனால் எனக்கும், அன்ரனுக்கும் சில பாட்டுக்களும் ராகங்களும் சொல்லித்தந்தார். ஆனால் நாடக கதையை முழுமையாக சொல்லவில்லை. 

                                                                 அடுத்த நாளும் மாலை வந்தார் அப்பொழு தும் கையில் கொப்பி இல்லை. ஆனால் ஒவ்வொரு மாலையில் ஒவ்வொரு காட்சிகளாக சொல்லிவிட்டு, அடுத்த காட்சி எப்படி என்பதை நாளைக்கு சொல்கின்றேன் என சொல்லிவிட்டு போவார். இப்படியே நாடகம் அரங்கேறும் நாளும் வந்துவி ட்டது அப்பொழுது கூட  கதையை முழு மையாக சொல்லவே இல்லை. நாளை நாடகம் அதற்கு முந்திய மாலை தொட்டப்பா ஆரோக்கியசாமி வந்தார். சரி, நாடக முடிவு ரெடி என்றார். கிளைமக்ஸ் இதுதான். என்னைப்பா ர்த்தார் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, தேவதாஸ் நீ உன் படைத்தளபதிகளுடன் காட்டுக்கு வேட்டை யாடப்போ கின்றாய், அங்கு கள்ளு குடிக்கின்றாய், அந்த கள்ளிலே விஷம், நீ சாகின்றாய், அந்த செய்தி எஸ்தருக்கு சொல்லப்ப டுகின்றது. அவளும் அங்கே மயக்கமுற்று விழு கின்றாள் நாடகம் முடிகின்றது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது ஏதோ நாடகம் அரங்கே றுகின்ற சந்தோசத்தில் களைந்து சென்றோம். 

                                                            மறுநாள் பரபரப்பு, சில நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது, எங்களுடைய நாடகம் கடைசி நிகழ்வு. நாடகம் அரங்கத்தில்  போய்கொண்டிரு க்கின்றது, தொட்டப்பா ஆரோக்கியசாமி அவர்கள், திரைக்கு பின்னாள் நின்று கொண்டு, வசனம் சொல்லி தந்துகொண்டி ருக்கின்றார். கடைசி காட்சி, காட்டிலே பாசறை காட்சி, தொட்டப்பா அரங்க காட்சியை ஏற்பாடுபண்ணுகின்றார். கங்கானி ஜோன்சனிடம் வேப்பமரத்தில் ஏறி கொப்புகளை வெட்ட சொல்கின்றார், அதற்கு ஜோன்சன் தொட்டப்பா வேப்பமரத்தில், அம்மா இருக்கும்( அம்மை) என்றான், அரை மப்பில் இருந்த, தொட்ட ப்பாவுக்கு கோபம் வந்து துசனத்தில் அம்மாவும்,,,,,,,,,, ஏறுடா மரத்தில் என்றார். நாங்கள் விழுந்து சிரித்தோம். இறுதி காட்சி! நான் விஷம் கலக்கப்பட்ட கள்ளு குடித்து கீழே விழுந்து இறக்கின்றேன்நான் விழுந்தது அரங்கத்தின் முற்பகுதியில், திரையை அம்புறோஸ் ஐயா  மூடுகின்றார், திரை சரியாக எனக்கு மேலாக விழுகின்றது, எனது வலது கையும் காலும் முகமும் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரிகின்றது. தொட்டப்பா என்னை எழுந்து வரச்சொ ல்கி ன்றார். நான் சொல்கின்றேன் தொட்டப்பா நான் செத்து க்கிடக்கின்றேன் என்று சொல்ல, என்னை வந்து உதைக்கி ன்றார். நான் எழுந்து ஓடுகின்றேன்,  பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்,,,,,,என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 9. november 2017

சோக்ரா! chocra!

சோக்ரா! chocra!

பேசாலையில் சோக்ரா என்று சொன்னால் அது லோறன்ஸ் பீரிஸ் அவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை குறிக்கும், இவ ர்களை இன்றும் சிலர் சோக்ரா என்று அழைப்பார்கள். இது இப்பொழுது உள்ள தலைமுறைக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பு இல்லை. அது என்ன சோக்ரா? என்று சிந்திக்கின்றீர்களா? அதை விபரமாக விளக்க வேண்டும் என்றால் பேசாலையின் கலை வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டிவரும், பொறுமை உங்களுக்கு இருக்கின்றதா? அப்படி யானல் இதோ தொடர்கின்றேன்,,,, எமது பேசாலையில் பாரம்பரிய கலைவடிவம் உடக்கு பாஸ் என்பதற்கு மேலாக வாசாப்பு, சரிதை நாடகம், லெம்பவங்கள் இப்படி பல மேடை கலைவடிவங்கள் இருந்தது. என் நினைவுக்கு அருளானந்தர் என்ற நீண்ட சரிதை நாடகத்தை (இரண்டு நாள் நாடகம்) பார்த்து ரசித்து இருக்கின்றேன், அது பற்றி பல சுவாரஸ்யமான‌ சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன, அதுபற்றி பிரிதொரு சமயம் எழுதுகின்றேன். இப்போது சோக்ரா என்ற விடய த்துக்கு வருகின்றேன்.  
                                                நீண்ட சரிதை நாடகங்கள் அல்லது வாசாப்புகள் மேடை ஏற்றும் போது குறைந்தது இரண்டு நாட்கள் செல்லும், ஊரே கலை விழாவாக காட்சிதரும். இந்த வாசப்புகள் நாடகங்கள் இரவு இரவாக நடைபெறும். ஒரு காட்சி அமைப்புக்கு பின் இன்னொரு காட்சி அமைப்பு ஒழுங்கு செய்ய, தயாரிப்பாளருக்கு நீன்ட நேரம் செல்லும், இரவு நேரம் அல்லவா பார்வையாளர்கள்,  தூங்கிவிடக்கூடாது  என்பதற்காக, அவ ர்களை விழிப்பாக வைத்திருக்க, நகைச்சுவை நேரத்தை ஒதுக்குவார்கள், அந்த நகைச்சுவை காட்சிகளை ஒழுங்கு செய்பவர்தான் இந்த சோக்ரா! எனது தந்தை ஒரு நகைச்சுவை ,கோமாளி நடிகர், இது அவரின் இன்னொ ரு வடிவம் ஆளுமை! இந்த நகைச்சுவைப் பண்பு, அவரின் பிள்ளைகளி டமும் இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள், அவர்கள் உழைப்பதி லும், படிப்பதிலும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாளராகவும் இருப்பார்கள். இந்த சோக்ரா என்ற கலைவடி வம், கோமாளித்தனமான காரியங்களை செய்து பார்வையாளைகளை சந்தோசப்படுத்திக்கொண்டு இருப்பார்கள், அவர்களின் உள்ளத்தில் சோகங்கள் நிறைய இருந்தாலும், அதனை வெளிக்க்காட்டாமல், பார்வை யாளர்களை சிரிக்கவைப்பார்கள், உலக புகழ்பெற்ற  சார்ளி சப்ளின், நாடக மேதை சேகஸ்பியர் இவர்கள் எல்லோரும் சோகம் நிறைந்த மனி தர்கள்! இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற சமயம் ஐரோப்பிய மக்கள் இழப்புகளினால் மனம் வாடினின்ர வேளை, சார்ளி சப்ளின் அவர்களை பேசாத நடிப்பினால், நகச்சுவையினால் மீட்டு எடுத்தார்.

                                    சோக்ரா என்றால் ஸ்பானிய மொழியில் வாய் பேசா நகைச்சுவையாளன் என்று பொருள் படும், எனது தந்தைக்கு இந்த பட்டத்தை வழங்கியவர் எமது கோவிலில் கட்டளைக்குருவாக இருந்த பொமிக்கல் சுவாமி அவர்களே எனது தந்தையை அன்பாக சோக்ரா என்று அழைப்பார் அதுவே நாளடைவில் எங்களது பட்டப்பெயராக மாறிவிட்டது. எனது தந்தைதை பெரிய படிப்பாளி அல்ல, பணக்காரரும் அல்ல, ஆனால் அவரைப்பற்றி நிறையவே கதைக்கலாம்,, அது பற்றி தொடரும் எனது பதிவில் எழுதுகின்றேன்,,,,,,,,,,,,

                                                                                       சென்ற பதிவில் சோக்ரா என்ற பட்டப்பெயருக்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தேன், இப்பொழுது அந்த சோக்ரா பற்றிய ஒரு முக்கிய விடயத்தை இங்கே கூறவிழைகின்றேன். எமது கோவிலுக்கு முன்பு கட்டளைக்காரர்கள் இருந்தார்கள், கட்டளை க்குருவானவரும் இருந்தார்கள், தற்பொழுது அது மாற்றப்பட்டு பங்கு மக்கள், பங்குகுரு, பங்குச்சபை  இப்படியாகிவிட்டது. கட்டளைகார ர்களாக இருந்தாலும் சரி, பங்குச்சபையாக இருந்தாலும் சரி, கோவில் பணத்தையும் கோவில்  சொத்துக்களையும் அட்டைபோடும் சம்பவங்கள் பல நடந்துள்ளன, நடந்துகொண்டிருப்பதாக்வும் கேள்வி? தற்பொழுது மன்னார் நகரிலே கம்பீரமாக  சிரித்துக்கொண்டிருக்கின்றதே வெற்றி நாயகி கட்டிடம், அந்த கட்டிடம் எழும்புவதற்கு முன்பு அங்கே பேக்கரி ஒன்று இருந்தது. அந்த பேக்கரியை சோக்ரா எனும் என் தகப்பனார்தான் நடத்தி வந்தார். எனது தகப்பனார்  பாண் கேக் இன்னும் பல சாப்பாடு களை செய்வதில் கைதேர்ந்தவர். கும்பா கேக் என்ற ஒரு பாரம்பரிய த்தை எனது தகப்பனார்தான் அறிமுகம் செய்துவைத்தவர். இந்த பேக்கரியை தனது சொத்தாக மாற்றுவதற்கு செவாலியர் வேதம் பல்தானோ அரும்பாடுபட்டார். அதற்காக தனது மகனை வக்கீலுக்கு கூட படிக்கவைத்தார். பெரும் பணக்காரர், சேவாலியர் இதனால் அவரை எதிர்க்க கட்டளை குருவுக்கோ, அப்போதுள்ள கட்டளைகாரர்களுக்கு தைரியம் இல்லை, இருந்தபோதும் எனது தகப்பானார் விட்டபா டில்லை.தனியொருவனாக தனித்தே எதிர்த்தார். அந்த பேக்கரியும் காணியும் மாதாவுக்கே சொந்தம் என்று போராடினார். அவரது உழைப்பு முழுவதும் கோட்டுக்கும், பொலிஸுக்குமாக கரைந்ததுதான் மிச்சம்! இதனால் எங்கள் தக‌ப்பன் எங்களது படிப்பில் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டவில்லை. நிலமை இப்படியாக இருந்தவேளையில் தான், பேசாலைக்கு பொன்னையா சுவாமி வந்தார். பேசாலையில் பெரும் புரட்சி நடந்தது! புரட்சிகரமான புனித ஸ்நாப அருளப்பர் மன்றம் உருவானது, கூடவே சிங்கராயர் எனும் ஒரு சிங்கம் உதவிக்குருவாக இருந்தார். புனித ஸ்நாபக அருளப்பர்  மன்ற இளையோரின் உதவியுடன் பொன்னையா சுவாமி, மன்னார் பேக்கரி விவகாரத்தை கையில் எடுத்தார். வெற்றியும் பெற்றார். அப்பொழுது அத்திவாரமாக இருந்து சோக்ரா அழுதார், இப்பொழுது கட்டிடம் ஜொலிக்கின்றது. எனது வெற்றி அன்னையும் மனமகிழ்ந்தாள், சோக்ராவின் முயற்ச்சி,  அன்னையின் ஆசியாக அவரது ஆண் வாரிசுகளுக்கும், அவர்களது பிள்ளைகளையும் வந்தடைந்தது.  அவரது பிள்ளைகள் பட்டதாரிகளாகவும், அவர்து பேரப்பிள்ளைகள் டாக்டர்களாகவும் , பொறியியலாளராகவும், விமான பொறியியலாளராகவும், வங்கி முகாமையாளராகவும், சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநணர்களாகவும், ஐரோப்பிய‌ மண்ணிலே வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்! சோக்ராவின்  வாழ்வில் நடந்த பல முக்கிய பதிவுகளுடன் மீண்டும் உங்களை அடுத்த பதிவிலே சந்திக்கின்றேன். அன்புடன் உங்கள் அன்பு பேசாலைதாஸ்

சோக்ரா என்ற லோறன்ஸ் பீரிஸ்,,,,,

சென்ற பதிவிலே மன்னார் வெற்றி நாயகி கட்டிட காணி சம்பந்தமாக சோக்ராவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டியிரு ந்தேன், இப்பொழுது சோக்ராவின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை பதியவிட ஆவலாக இருக்கின்றேன். மன்னார் பஸ் டிப்போவில் இருந்து, தலைமன்னார் நோக்கி பிற்பகல் மூன்று மணிக்கு செல்லவிருந்த பேருந்து, அன்று நாற்பத்தைந்து நிமிடம் தாமதாமாக புறப்பட்டது. அந்த பேருந்தில் சோக்ரா அவர்கள், தனது கேக், பாண், பனிஸ் பெட்டிகளை ஏற்றிக்கொன்டு தானும் புறப்பட்டார். ஏற்கனவே தாமதமாக புறப்பட்டதால், பேருந்தின் சாரதி படுவேகமாக பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தார். எருக்கலம்பிட்டியை அண்மித்துவிட்டது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளது பத்து வயது பையனும், பேருந்தில் ஏறுவதற்காக,  தரிப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பத்து வயது பையன் ஓடிவந்து,  பேருந்தில் ஏறிக்கொண்டு, ஓடி வாங்க அம்மா என்று கத்திக்கொண்டிருந்தான், பாவம் அந்த கர்ப்பிணிப்பெண் என்ன செய்வாள்? மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தாள். அதனை பொறுக்க முடியாத பேருந்து நடத்துணர், வண்டியில் ஏறிய சிறுவனை இறக்கிவிட்டு, பிஸிலை ஊத, சாரதி விருட்டென்று வண்டியை வேகமாக ஓட்டினார். இதனை பார்த்த சோக்ராவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சாரதியோடும் பஸ் நடத்துணரோடும் வாய்த்தர்க்கம் செய்தார். சோக்ராவின் தர்க்கத்தை காதில் வாங்கிக்கொள்ளாமல் சாரதி பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தார். சோக்ராவும் ஏனோ அமைதியாகிவிட்டார், இப்பொழுது பஸ் கரிசலைதாண்டிவிட்டது, திடிரென்று சோக்ரா எழுத்து உடனே பஸ்ஸை நிறுத்தும்படியும், தனக்கு மூத்திரம் வருகின்றது அடக்கமுடியவில்லை பஸ்ஸை நிற்பாட்டுங்கள் என்று கத்த, பஸ் வண்டி நிறுத்தப்பட்டது. சோக்ரா அவசர அவசரமாக் கீழே இறங்கி, அருகில் இருந்த ஈச்சை பற்றைக்குள் மறைந்து கொண்டார், அரைமணி நேரம் சென்றும் ஈச்சை பற்றையை விட்டு சோக்ரா வெளியே வரவேயில்லை. ஏற்கனவே பஸ் தாமதாமாகிவிட்ட படியால் பயணிகள் குழும்பிவிட்டார்கள். பின்பு சோக்ரா ஆறுதலாக வெளியே வந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டார். ஒரு கர்ப்பிணிப்பெண்ணை ஏற்ற ஐந்து நிமிடம் உங்களால் பொறுக்க முடியவில்லை, இப்பொழுது அரை மணித்தியாலம் வீணாக்கிவிட்டீர்களே! எனக்கு மூத்திரம் வரவில்லை உங்கள் செயலை கண்டு ஆத்திரம் தான் வந்தது என்று, பணிகளோ சாரதியோ யாரும் ஒன்றுமே சொல்லவில்லை, சோக்ராவின் செயலில் மனிதாபிமானம், நியாயம் இருப்பதை எல்லோரும் உணர்ந்து மெளனமானர்கள். யாரோ ஒரு கர்ப்பிணி பெண்ணுக்காக வாதடியவர்தான் இந்த சோக்ரா,,,,எவன் ஒருவன் அநீதியை கண்டு ஆத்திரப்படுகின்றானோ அவன் என் தோழன் என்றான் சேகுவேரா,,,, அன்புடன் உங்கள் அருமை பேசாலைதாஸ்


சோக்ரா வெற்றி அன்னையின் ஆசீர் பெற்றவன்!


சோக்ரா என்னும் பதிவில், சோக்ரா மன்னார் வெற்றிநாயகி கட்டிட க்காணி சம்பந்தமாக சோக்ராவின் தனிமனித போராட்டத்தையும், அதன் விளைவாக வெற்றி அன்னையின் அருளை பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பாக பதிவு செய்திருந்தேன், அந்த அன்னையின் அருளை எனது சொந்த வாழ்வில் உணர்ந்து மெய் சிலிர்த்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிரலாம் என என் உள்மன உணர்வு தூண்டுகின்றது. எமது பேசாலை மக்கள் எல்லோரும் மண்டப முகாமில் இருந்தவேளை, இந்தி யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருட்களை ஏற்றி இறக்கி வியா பாரம்  செய்து கொண்டிருந்தார்கள்.
                                                                                     ஒரு முறை எனது கடைசி தம்பி சுவக்கின், செல்வம் மற்றும் பிலிப்பண்ணன் எல்லோரும் பேசாலையில் இருந்து வருவதாக எனக்கு தகவல் கிடைத்தது, பொருட்களை மொத்த மாக வாங்கும் மண்டபத்து ஆறுமுகத்தோடு நான் அந்த இரவு இராமே ஸ்வரத்தில் நிற்கின்றேன், அதிகாலை நான்கு மணிக்கு பேசாலையில் இருந்து சில போட்கள் வந்தன, அப்பொழுது ஒரு பேரதிர்ச்சி செய்தி எனக்கு கிடைத்தது அதாவது கடலில் நேவிக்காரன் பீரங்கியால் சுட்டதா கவும் அதில் சுவக்கினின் போட் சிக்கிக்கொண்டதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது, எனக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது, ஒன்றுமே புரியவில்லை ஓவென்று கதறி அழுகின்றேன், நிலைமையை புரிந்து கொண்ட ஆறுமுகம் டக்கென்று சாராயபோத்தலை திறந்து அப்படியே எனது தொண்டையில் ஊற்றுகின்றான் அதுதான் எனது முதல் அனுபவம், கொஞ்சம் வெறி தலைக்கேறுகின்றது, பிலிப்பண்ணனின் தகவலை திண்டுக்கலில் இருக்கும் எனது அண்ணிக்கு சொல்வதற்காக, விடிய ற்காலை நாகை செல்லும் கடுகதியில் ஏறிக்கொண்டேன், பஸ் நாகபட்ட ண‌த்தில் நின்றுவிட்டது, நான் அன்னைவேளாங்கன்னி ஆலயம் செல்கி ன்றேன், முகப்பு மண்டபத்தில் ஒரு தேவவசனம் *அன்னையின் பிள்ளை கள் அவலமாய்ச் சாகமாட்டார்கள் என்பதே அந்த வசனம்! எனக்கு ஆறுதலாக இருந்தது, ஆம் நாங்கள் வெற்றி அன்னையின் பிள்ளைகள் என்பதை எனது மனம் ஆயிரம்தடவை உச்சரித்து க்கொண்டது.  
                                                                            திண்டுக்கலுக்கு பஸ் எடுத்து அங்கே சென்றேன் எனக்கு அங்கே ஆச்சரியம் காத்திருந்தது,  இறந்திருப்பரோ என்று நினைத்த பிலிப்பண்ணன் அங்கே நிற்கின்றார். நடந்த நிகழ்வு களை விபரிக்கின்றார். நேவிக்காரன் பீரங்கியால் சுட்டதும்  போட்டின் முற்பகுதியில் தான் சேதம் ஏற்பட்டது உடனே இயந்திரத்தை நிறுத்தி விட்டு இருட்டிலே அப்படியே நின்றுவிட்டோம் , சுவக்கின் கடலில் பாய்ந்துவிட்டான் அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது, நான் இன்னொரு படகு மூலமாக இராமேஸ்வரம் வந்து சேது எக்ஸ்பிரஸ் மூலாமாக இங்கு வந்துவிட்டேன் என்றார், மனதுக்கு ஒரு ஆறுதல் ஆனாலும் சுவக்கினின் கவலை தொட்டுக்கொண்டது, இப்போது நான் மண்டபம் நோக்கி புறப்படுகின்றேன், அங்கே நான் போய்ச்சேர்ந்ததும் நல்லதோர் செய்தி எனக்கு கிடைத்தது, அதாவது கடலில் பாய்ந்த சுவக்கின் தலைமன்னார் கரை ஒதுங்கினான் என்பதே அந்த நல்ல செய்தி, அன்னையின் அருட்கரம் பேசாலை மக்களை பல இன்னல்களில் இருந்து காப்பாற்றி உள்ளது, பேசாலை ஆலையத்தில் நடந்த குண்டு தாக்குதல் நல்லதோர் புதுமையான சம்பவம் என்பதை என் ஊர்மக்கள் அறிவார்கள்! அன்னையின் பிள்ளைகளாக என்றும் சுகமாக பாதுகாப்பாக நாம் எல்லோரும் வாழ்வோம்  அன்புடன் பேசாலைதாஸ்

சோக்ரா (லோறன்ஸ் பீரிஸ்),,,,,,,,, சோக்ரா அல்ல சோக்ரட்டீஸ்!சென்ற சில பதிவுகளில் சோக்ரா பற்றிய அனுபவ குறிப்புகளை பதியவிட்டேன். இன்னும் சில குறிப்புகளை உங்கள் பார்வைக்கு பதியவிடுகின்றேன். சோக்ரா வயோதிப காலம் வந்தபோது, தன்னிச்சையாக வாழ்த்தலைப்பட்டார். தான் உழைப்பதை தானே அனுபவித்துக்கொண்டு, குடித்துக்கொண்டும் வாழ் நாளின் இறுதிப்பாகத்தை கழித்தார். யாராவது என்ன லோறன்ஸ் குடித்துக்கொண்டு திரிகின்றாயே என்று கேட்டால் போதும்,,,, எனக்கு என்ன கவலை, எட்டு சிங்கங்களையும், ஒரு இராசாத்தியையும் பெற்றேன், எனக்கென்ன கவலை போய்ப்படுங்கடா,, என்று வெகு அலட்சியமாக பேசுவார். தான் பெற்ற ஆண்பிள்ளைகள் வாழ்வில் போராடி முன்னுக்கு வருவார்கள் என்பதில் அவருக்கு அசைக்கமுடியா நம்பிக்கையும், வெற்றி அன்னையின் தைரியமும் அவருக்கு இருந்தபடியால், தன் உடல் நிலையை கவனிக்காமல் குடியில் காலத்தை கழித்தார். மது போதையில் இருக்கும் போது, அவர்  பாட்டுபாடுவார், வசனம் பேசுவார். தந்து சரணகொட, துந்துக்கவால,, துந்து சரணகொட இப்படி ஏதோ சிங்கள மொழி பாடலை பாடிவிட்டு வசனம் பேசுவார் " எண்ணிய எண்ணம் எங்கே? இலக்கண குமாரன் எங்கே? கன்னனும் தேரும் எங்கே? கண் கொள்ளாப்  படைகள் எங்கே? எங்கே? என்று கேட்டு தெருவில் போவோர் வருவோரிடம் கேள்வி கேட்பார். எதுவுமே நிரந்தரம் இல்லை. கேள்விகள் மட்டுமே நிரந்தரம் என்று சொல்லுவார். இப்போது நினைத்தால் கூட சோக்ரா அல்ல சோக்ரட்டீஸ் ஞாபகத்துக்கு வரும்! மகாபாரதப்போரிலே, வீழ்ந்து கிடக்கும் துரியோதனனைப்பார்த்து, கிருஸ்ணர் கேட்கும் கேள்விகளைத்தான் சோக்ரா அந்த காலத்தில் கேட்டார்? நாடோடியாக இலங்கை எங்கும் அலைந்து திரிந்ததினால் சோக்ராவுக்கு சிங்களம் நன்றாக பேசவரும், ஆனால் இலக்கிய ஆர்வம் எங்கிருந்து வந்தது என்று எனக்கு புரியவில்லை. சோக்ரா தன் சின்ன வயதில் தாய் தக‌ப்பனை இழுந்து, அண்ணன் எலியாஸ் பீரிஸ் அவர்களின் கண்கானிப்பில் இருந்தபடியால் இறுதிவரை எதிலும் பற்று அற்றவராக வாழ்ந்து மடிந்தார். அன்புடன் பேசாலைதாஸ்

கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது (செய்தியாளர்) 03.01.2020 கடந்த வருடம் (2019) மன்னார் மறைமாவட்டத்தில்...