fredag 17. november 2017

நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா)

நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா)

ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள் செல்லமாக, அழைப்பதுண்டு. நேர்மையன அன்பான மனிதர், எனக்கு ஒருவகையில்  அத்தான் முறை. சமூக ஆர்வலரும் சிறந்த நாடக கதாசிரியரும், இயக்குனரும் ஆவார். நான் நினைக்கி ன்றேன் போர்வாள் என்ற சரித்திர நாடகம் இவருடையது என்று. இவர் ஒரு ஹாஸ்யமான மனிதர், ஸ்நாபக அருளப்பர் மன்றத்தின் யூபிலி விழாவுக்கு எஸ்தார் என்ற நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அது மிக சுவாரஸ்யமானது! ஸ்நாபக அருளப்பர் மன்ற‌ உறுப்பிணர் எல்லோரும் ஒரு நாள், அவர் வீட்டிற்கு போய் அவரை சந்தித்து, தொட்டப்பா எங்களுக்கு ஒரு நாடகம் எழுதி தாருங்கள் என்றோம் உடனே அவர் நாளை மாலை கோவிலுக்கு நாடகத்தோடு வருகின்றேன் என்றார். 

                                                           சொன்னபடியே வந்தார் கையில்  கொப்பி எதுவும் இல்லை, கொஞ்சம் மப்பு, வந்தவர் நாடகம் ரெடி, நாடகத்தின் பெயர் எஸ்தார் ராணி, நாடக பத்திரங்க ளுக்கு நபர்கள் தெரிவனா ர்கள், எஸ்தர் ராணியாக வேலாயுதம் அன்ரன் தெரிவானர், எஸ்தாரின் காதலான நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். அன்றைய மாலை இதோடு  முடிந்தது, மறு நாள் மாலை வந்தார் அன்று கூட கையில் கொப்பி இல்லை, ஆனால் எனக்கும், அன்ரனுக்கும் சில பாட்டுக்களும் ராகங்களும் சொல்லித்தந்தார். ஆனால் நாடக கதையை முழுமையாக சொல்லவில்லை. 

                                                                 அடுத்த நாளும் மாலை வந்தார் அப்பொழு தும் கையில் கொப்பி இல்லை. ஆனால் ஒவ்வொரு மாலையில் ஒவ்வொரு காட்சிகளாக சொல்லிவிட்டு, அடுத்த காட்சி எப்படி என்பதை நாளைக்கு சொல்கின்றேன் என சொல்லிவிட்டு போவார். இப்படியே நாடகம் அரங்கேறும் நாளும் வந்துவி ட்டது அப்பொழுது கூட  கதையை முழு மையாக சொல்லவே இல்லை. நாளை நாடகம் அதற்கு முந்திய மாலை தொட்டப்பா ஆரோக்கியசாமி வந்தார். சரி, நாடக முடிவு ரெடி என்றார். கிளைமக்ஸ் இதுதான். என்னைப்பா ர்த்தார் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, தேவதாஸ் நீ உன் படைத்தளபதிகளுடன் காட்டுக்கு வேட்டை யாடப்போ கின்றாய், அங்கு கள்ளு குடிக்கின்றாய், அந்த கள்ளிலே விஷம், நீ சாகின்றாய், அந்த செய்தி எஸ்தருக்கு சொல்லப்ப டுகின்றது. அவளும் அங்கே மயக்கமுற்று விழு கின்றாள் நாடகம் முடிகின்றது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது ஏதோ நாடகம் அரங்கே றுகின்ற சந்தோசத்தில் களைந்து சென்றோம். 

                                                            மறுநாள் பரபரப்பு, சில நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது, எங்களுடைய நாடகம் கடைசி நிகழ்வு. நாடகம் அரங்கத்தில்  போய்கொண்டிரு க்கின்றது, தொட்டப்பா ஆரோக்கியசாமி அவர்கள், திரைக்கு பின்னாள் நின்று கொண்டு, வசனம் சொல்லி தந்துகொண்டி ருக்கின்றார். கடைசி காட்சி, காட்டிலே பாசறை காட்சி, தொட்டப்பா அரங்க காட்சியை ஏற்பாடுபண்ணுகின்றார். கங்கானி ஜோன்சனிடம் வேப்பமரத்தில் ஏறி கொப்புகளை வெட்ட சொல்கின்றார், அதற்கு ஜோன்சன் தொட்டப்பா வேப்பமரத்தில், அம்மா இருக்கும்( அம்மை) என்றான், அரை மப்பில் இருந்த, தொட்ட ப்பாவுக்கு கோபம் வந்து துசனத்தில் அம்மாவும்,,,,,,,,,, ஏறுடா மரத்தில் என்றார். நாங்கள் விழுந்து சிரித்தோம். இறுதி காட்சி! நான் விஷம் கலக்கப்பட்ட கள்ளு குடித்து கீழே விழுந்து இறக்கின்றேன்நான் விழுந்தது அரங்கத்தின் முற்பகுதியில், திரையை அம்புறோஸ் ஐயா  மூடுகின்றார், திரை சரியாக எனக்கு மேலாக விழுகின்றது, எனது வலது கையும் காலும் முகமும் பார்வையாளர்களுக்கு நன்றாக தெரிகின்றது. தொட்டப்பா என்னை எழுந்து வரச்சொ ல்கி ன்றார். நான் சொல்கின்றேன் தொட்டப்பா நான் செத்து க்கிடக்கின்றேன் என்று சொல்ல, என்னை வந்து உதைக்கி ன்றார். நான் எழுந்து ஓடுகின்றேன்,  பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்,,,,,,என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் –

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி ப...