fredag 12. oktober 2018

பேசாலையில் வரவிருந்த துறைமுகமும், அதன் பலாபலன்களும்:

பேசாலையில் வரவிருந்த துறைமுகமும், அதன் பலாபலன்களும்: பேசாலைதாஸ்
                                              


                                   என் அன்புக்கினிய உறவுகளே! துறைமுகம் தொடர்பாக இதற்கு முன்னர் நான் இரண்டு பதிவுகள் எழுதி இருந்தேன், எமது ஆலை யத்தில் இது தொடர்பாக நேற்றும் இன்றும், மக்களிடம் இருந்து கருத்து கணிப்பு நடந்ததாக கேள்விப்ப ட்டேன். நானும் ஒரு பேசாலை குடிமகன் என்ற வகையில், என் உறவுகளுக்கும், என் ஊருக்கும், இனி வரவிருக்கும் சந்ததிகளுக்குமாக எனது கருத்தை இங்கே மீண்டும் பதியவிடுகி ன்றேன்.
                                                                முதலாவதாக, கரையோர பாவனை அதன் உரிமம் தொடர்பாக கவணத்திற்கு கொண்டு வருகின்றேன், கரையோர பாடுகள் அதன் பாவனைகள் முற்றுமுழுதுமாக அந்த ஊர்மக்களூக்கே சொந்தம், இது தேசவழமை சட்டத்திற்கமைய, மரபு ரீதியாக இலங்கை யில் நடமுறையில் இருக்கின்றது. எமது ஊரில் சிறுத்தோப்பு பகுதியில் எமது வங்காலை சொந்தங்கள் பருவகாலங்களில் மீன்பிடிக்கவந்தா ர்கள், நீர்கொழும்பு சிங்கள மீனவர்களும்  சேத்துப்பாட்டில், நடுக்குடா வில் தொழில் செய்தார்கள், ஆனால் வங்காலை மக்கள், சிறுத் தோப்பு பாட்டை தமது பாடு என்று சொந்தம் கொண்டாடி, சச்சரவுகள் சண்டை கள் எல்லாம் செய்தார்கள், இறுதியாக நீதிமன்றம் சென்றபோது, முத்து நாயக்கா கமிஷன் ஆணைப்படி, காலகாலம் சிறுத்தோப்பு பாட்டில் வங்காளைமக்கள் தொழில் செய்யலாம் என்ற ஒப்பந்தம் பிரகாரமாக அந்த பாடு வங்காலை மக்களுக்கு சொந்தமாகியது, இதிலே பாராள மன்ற உறுப்பிணர் சூசைதாசன் அவர்கள் பேசாலை மக்களுக்கு எதிராக, தனது சொந்த ஊரின் சார்பாக செயல்பட்டார், இப்போது அந்தபாட்டில் பாடசாலை ,சபை ஆலையம் எல்லாம் வந்துவிட்டது, வங்காலை மக்கள் எமது இனம், சொந்தம் என்ற வகையில், அது நமக்கு ஒரு பலமாகவும், பாதுகாப்பாகவும் அமைந்தது!
                                                                           இங்கே நான் முன்வைக்கும் தர்க்கம் என்னவென்றால், தற்போது கரவைலை பாச்சுவலை மீன் பாடு இல்லை என்பதால், நீர்கொழும்பு சிங்களமக்கள் வருவது குறைந்துவிட்டது, துறைமுகம் வந்தபின், ஆழ்கடல் மீன் பிடி இருக்கும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் துறைமுகம் அமைய இருக்கும் சேத்துப்பாட்டுக்கு வருவார்கள் என்றால் உங்களின் நிலைப்பாடு என்ன? பாட்டை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுப்பீர்களா? கட்டாயம் துறைமுக அதிகாரம் அவர்களை அரவணைக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனெனில் ஆழ்கடல் மீன்பிடியில் அவர்கள் தான் விற்பணர்கள் என்பது நாடே அறியும்! இப்போது விளங்குகின்றதா, பொறி எங்கே? எப்படி வைக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?

                                                                    எனது அடுத்த தர்க்கம் என்னவென்றால், ஆழ்கடல் மீன் பிடி என்பது பேசாலை கடல் பரப்புக்கு சற்றேனும் ஒத்து வரமுடியாத ஒரு தொழில், பேசாலை கடல், பெண்கடல் அதாவது பரவை க்கடல், இராமேஸ்வரம் தொடங்கி, இரணனைதீவு, கச்சைதீவு, பாலை தீவு, எழுவைதீவு, நனைனாதீவு, புங்குடுதீவு உட்பட பாக்குதொடுவாயால் மறிக்கப்பட்ட ஒருவலையமே பேசாலைக்கடல் பிராந்தியம், இந்த தீவு களை அண்மித்து உருவாகும், சேற்று வலயத்திலும், ஆழம் குன்றிய கடல் பரப்பில் பெருவாரியாக உற்பத்தியாகும் இறால், கணவாய், நண்டு, திரு க்கை கடலட்டை, சங்கு போன்ற திரவியங்களை, காலகாலம் இந்திய தமிழக இழுவைப்படகுகள் வாரிக்கொண்டு போனார்கள். 

                                               1972 பின்பே பேசாலை மக்களுக்கு இழுவைப்படகுத் தொழில் அறிமுகமானது. இருந்தாலும் தமிழக இழுவை படகினால் எமது கடல்வளம் குன்றியது மட்டுமல்ல, பேசாலை மக்களின் இழுவைப்படகு நாளாந்தம் உபயோகிக்கும் எரிபொருள் செலவை சமாளிக்க முடியாது திண்டாடும் அளவுக்கு இழுவைப்படகு தொழில் குன்றிப்போனது, இதனை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு, புள்ளிவிபரப்படி, மீன் பாடு குறைந்துவிட்டது, அதற்கு மாற்றீடாக ஆழ்கடல் மீன்பிடியை பரிந்துரை க்கின்றது, நய வஞ்சகம் கொண்ட இலங்கை மீன்பிடி திணைக்களம்.

                                              எமது கடல்வலய செல்வங்களை, அத்துமீறி வந்து அபரிக்கும், இந்தியாவை ,இலங்கை அரசு .தட்டிக் கேட்குமா? ஒருபோதும் இல்லை, அதற்குத்தானே இந்தியா, கச்சைதீவை சீதனமாக கொடுத்துள் ளதே! இப்போது விளங்குகின்றதா கச்சைதீவை ஏன் மத்திய அரசு இலங் கைக்கு தாரை வார்த்து கொடுத்தது? பேசாலை மக்களின் மீன்பிடிமீது, உண்மையாகவே இலங்கை அரசுக்கு அக்கறை இருக்குமானல், இந்தியா மீனவர்களை தடுக்கும், இராஜதந்திர உடண்படிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ளுமானல் எமது பேசாலை மக்கள் இன்னும் அதிகமான இழுவைபடகுகளை கொள்வனவு செய்து அபிவிருத்தி அடைவார்கள்! முதலில் இந்திய இழுவை படகுகளை நிறுத்த சொல்லுங்கள் அதற்கான நடவடிக்கையை எடுக்கச்சொல்லுங்கள். பேசாலை மீன்பிடி தானாக அபிவிருத்தி அடையும்:

                                                                       எனது அடுத்த தர்க்கம் என்னவென்றால் துறைமுகத்தின் உரிமம், அதன் அதிகாரம் யார் வசம்? சிங்கள மீன்பிடிக் களம் துறைமுகத்தில் தரிக்கும் நிலை வந்தால், அதனை தடுக்கும் உரி மை பேசாலை ஆலையத்துக்கு உண்டா? இதை நான் ஏன் கேட்கின்றேன் என்றால், ஞாயிறு, கடன் திருநாட்களில் கடலுக்கு செல்லக்கூடாது என்பது ஊர்க்கட்டுப்பாடு, இதனை ஒரு முறை ,இதே சேத்துப்பாட்டில் சிங்களமீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று மீறிய போது பெரும் பிரச் சனை ஏற்பட்டு சண்டை மூண்டது! துறைமுகம் தொடர்பாக அத்தகைய கட்டுப்பாடுகளை எமது பங்கு சபையோ, மீன்பிடி சங்கமோ கையாளும் அதிகாரம் உண்டா? இதற்கு ஒருபோதும் அரசோ ஆசிய அபிவிருத்தி வங்கியோ ஒத்துவராது, நானூறு கோடியையும் வட்டியையும் வசூலிப்ப திலேயே எல்லாம் அடங்கிப்போகும்! துறை முகம் என்ற் ஒரு போர்வை யில் நாம் சேத்துப்பாட்டை இழக்கப்போகின்றோம்!

                                                                                       துறைமுகம் என்ற போர்வையில் மறைமுகமாக சிங்கள ஆக்கிரமிப்பு நடக்க இருக்கின்றது, அதிலும் குறி ப்பாக நீர்கொழும்பு, முன்னக்கரை சிங்கள மக்கள் பெருவாரியாக பேசாலைக்கு படையெடுக்கும்  நிலைம உருவாகும், அதனை யாருமே தடுக்கமுடியாது, துறமுகம் அதனை ஊக்குவிக்கும், அரசும் அதனை வர வேற்கும், அப்படி ஒரு நிலமை உருவாகுமானால், வெற்றி நாயகி ஆலை யத்தில் சிங்களத்திலும் திருப்பலி நடக்கும்! பேசாலை மாகாவித்தியால யத்தில் சிங்களமாணவர்களுக்கென வகுப்புகள் ஆரம்பமாகும்! அதற்கு முன்பு புத்தர் சிலை மெளனமாக முளைக்கும், தற்போது இரயில்வே காணியில் புத்தர் சிலை அமைக்கும் மந்திர ஆலோசனை நடக்கின்றது.
நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ, துறைமுகம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, நான் சொன்ன சிங்கள ஆக்கிரமிப்பு நடந்தே தீரும் மெதுவாக, ஆனால் துறை முக வசதிகள் இதனை துரிதப்படுத்தும், துறைமுகம் வந்தால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுக்குள் இவையாவும் நடைபெறும், நாம் வாழும் நாடு சிங்கள நாடு, நமெல்லாம்  வெறும் அடிமைகள்! எனவே துறைமுகம் என்ற போர்வையில் துரிதமான அழிவை தேடுகின்றிர்களா?

                                                             சிங்கள மக்களின் ஊடுவலினால், பேசாலை மக்களின் அரசியல் ஸ்திரம் உருக்குழையும், சிங்கள கட்சிக்கு பின்னால் நிற்கும் முஸ்லிம் கட்சியின்  வாக்குவங்கி அதிகரிக்கும், தற்போதும் அதுவே கொஞ்சம் கொஞ்சம் நடக்கின்றது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வங்குரோத்து அரசியல் நடமுறைகளினால், படிப்படியாக அரசியல் அதிகாரம் பற்போகின்றது, துறைமுகம் என்ற போர்வையில் இது துரித மாகும், அது தேவையா? இந்த அரசியல் தற்கொலை பேசாலை மக்களு க்கு தேவையா?

                                                                  எனது அடுத்த தர்க்கம், அமைய இருக்கும் துறைமுகத்தில், கடற்படைகளின் உபயோகத்துக்கும் பாவிக்கும் ஒரு நிலை உருவாகுமானால், அதனை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? ஏற்கனவே அங்கு ஒரு மினி கடற்படை முகம் இருக்கின்றது, இதனை வலுப்படுத்தும் நோக்கில் தான் இந்த துறை முக வருகை என்பதை ஏன் நீங்கள் இன்னும் உணரவில்லை? துறைமுக அமைவுக்குப்பின்னால் பெரும் சதிதிட்டம் இருக்கின்றது.

                                                                தற்போதுள்ள இரு நூறு இழுவைப்படகு களுக்கு, பாதுகாப்பாக இந்த துறைமுகம் அமையும், உண்மைதான், அதற்காக பாரிய துறைமுகம் ஒரு தீர்வா? எமது படகுகளை காப்பாற்ற, நாமே நமக்கு சிறிய அளவில், அணையை உருவாக்கமுடியாது? பாரிய கோவில் கட்டிய நமக்கு இது பெரிய சவாலா? அப்படி நாம் அமைப்போ மானல், அதன் வழியாக வரும் வருமானம் கோவிலுக்கு சென்றடையும், உறவுகளே சிந்தியுங்கள்! துறை முகம் வந்தால் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் உண்மைதான், துறைமுக காணி நல்ல விலைக்கு போகும் அதுவும் உண்மைதான், அதற்காக கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா? ஒருவேளை கட்டுமானம் நடக்கும்போது ஒருசிலருக்கு Contract மூலம் தற்காலிக வருமானம் கிடைக்கும், ஆனால் துறை முகத்து க்குள் நமது படகு வந்து செல்லும்போது, கட்டணம் வசூலிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தர‌வாதம்? துறைமுக பாதுகாப்புக்கு என கடற்படை கடமை புரியும், அவர்கள் துறைமுகத்துகுள் நுழையும் போது, அடையாள அட்டை பர்சோதனைகள், கடத்தல் போதைவஸ்து பர்சோதனை என்ற போர்வையில் நடக்கும், சுதந்திரமான எமது மீனவ வாழ்க்கை பறிபோகும்!

                                        எனவே எனது உறவுகளே! எப்படிப்பார்த்தாலும் பாரிய துறைமுகம் என்பது நமக்கு பாதகமான விளைவையே உண்டாகும், எமது அரசியல் அதிகாரம், எமது இருப்பு, எமது அடிப்படை உரிமைகள் சரி யான முறையில் நல்லதோர் தீர்வு கிடைக்குமானல், அதன்வழியாக வரும் இத்தகைய அபிவிருத்தி திட்டம், உள்நோக்கம் எதுவும் இல்லாமல் அபிவிருத்தி ஒன்றே இலக்காக கொண்டமையும், அதுவரை முடிந்தளவு நாமாக இருக்க முயற்ச்சிப்போம்! எமது உரிமைகளை வென்றெடுக்கும் வரை, அபிவிருத்தி என்ற மாய வலையில் சிக்காது இருப்போமாக, எம க்கு நல்லதோர் தீர்வு அமையுமானல், புலம் பெயர் தமிழரிடம் இருக்கும் வலிமையும் பணவலிமையும் நம்து பிரதேசத்தை ஐந்து ஆண்டுக்குள் வளப்படுத்துவார்கள்! வழியை விட்டுத்தரச்சொல்லுங்கள் அதற்காக போராடுவோம் நன்றி  அன்புடன் பேசாலைதாஸ்
                                        ஏமாற்றப்படுகிறார்களா பேசாலை மக்கள்…? பேசாலை மீனவதுறைமுக திட்டத்தில் நடப்பது என்ன..??


தங்கள் படகுகளை நிறுத்திவைக்க பாதுகாப்பான கட்டுமானவசதிகள் ஏதும் இன்மையால் பலவருடங்களாக பேசாலைமீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதும், வருடந்தோறும்காற்றுக்காலங்களில் தம் படகுகளை கடலுக்கு காவுகொடுப்பதும் யாவரும் அறிந்ததே. இந்நிலையில்தான் அரசுவடக்கில் அமைக்க இருந்த நான்குமீன்பிடித்துறைமுகத்திட்டத்தில் பேசாலையும்உள்வாங்கப்பட்டது.
அதிலும் சிறப்பான விடயம் அந்த நான்குதுறைமுகங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கசம்மதித்திருக்கும் இரண்டு துறைமுகங்களில் பேசாலையும்ஒன்று மற்றையது பருத்தித்துறை துறைமுகம். இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. ஆசியஅபிவிருத்தி வங்கியானது ஆசியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான கடன் மற்றும் மானியங்கள் வழங்கும்ஒரு முக்கிய நிறுவனம். ஏனைய நிறுவங்களை போல் அரசிற்குதானே கடன் கொடுக்கிறோம் என்ன நடந்தாலும் அரசு அதைதிருப்பி செலுத்தும் தானே என்று மெத்தனமாய் இருந்துவிடாது தான் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் சரியான இடத்தில்உண்மையான தேவை உள்ள மக்களுக்கு தான்வழங்கப்படுகிறதா என்பதில் மிகக்கவனமாக செயற்படும். அதன் அடிப்படையில் தான் பருத்தித்துறை துறைமுகம் தெரிவுசெய்யப்பட்ட பிறகு மற்றைய துறைமுகத்திற்காகபரிந்துரைக்கப்பட்ட சிலாவத்துறை, முல்லைத் தீவு மற்றும்பேசாலை போன்ற இடங்கள் பார்வையிடப்பட்டு, இதில்தற்போதிருக்கும் ஒரு நாள் படகுகளின் எண்ணிக்கை, வருடாந்தம் ஏற்படும் பாதிப்புக்கள், எதிர் காலத்தில் நெடுநாள்(Trip Boats) படகுகள் வாங்கக்கூடிய சாத்தியக்கூறுகள்என்பனவற்றின் அடிப்படையில் பேசாலை தெரிவுசெய்யப்பட்டது.
இதில் இன்னொரு முக்கிய விடயம் ஆசியஅபிவிருத்தி வங்கி தான் ஒரு திட்டத்தை செய்வதற்கானஇடத்தை தெரிவு செய்த பிறகு உடனடியாக அத்திட்டத்தைநடைமுறைப்படுத்தாது முதலில் அத்திட்டத்தை செய்வதற்குதேவையான சமூக ஆய்வுகள், சுற்றுச்சூழல் சார் ஆய்வுகள்மற்றும் தொழில் நுட்பசார் ஆய்வுகளை நடாத்தி மக்களின்கருத்துக்களையும் உள்வாங்கிய பின்னரே திட்டத்தைவடிவமைக்கும். 2015 முதல் சர்வதேச மற்றும் உள்நாட்டுதுறைசார் வல்லுநர்களை ஈடுபடுத்தி இவ்வாய்வுகள்அனைத்தும் உரிய முறையில் செய்யப்பட்டு அதன்அடிப்படையிலேயே விரிவான திட்ட வடிவமைப்பு நிறைவுபெற்று கட்டுமான வேலைகளுக்கு ஏலம் கோரப்படும்நிலையில் உள்ளது. 
வரமாக கருத வேண்டிய இத்துறைமுகம் இன்று பேசாலைமக்களால் சாபமாக பார்க்கப்படவும் எதிர்க்கப்படவும் காரணம் என்ன?? இதுவரை நடந்தது என்ன???  கொஞ்சம்ஆராய்வோமா..
2015 இல் இத்திட்டம் உருவான காலம் முதல் ஆசியஅபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளும்மீன்பிடித்திணைக்களத்தின் திட்டச்சார் அதிகாரிகளும்பேசலை மீனவ சமூகத்தின் பிரதிதிகளான மீன்பிடி சங்கத்தின்தலைவர் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் கடந்தமூன்று வருடங்களாக 15 ற்கும் அதிகமான கூட்டங்களைநடாத்தி இத்துறைமுகத்தில் வரப்போகும் வசதிகள் என்னஅவை எவ்வாறு பராமரிக்கப்படும் இதில் மீனவ சங்கத்தின்பங்கு என்ன என்பன விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதில் துறைமுகத்திற்கான இடம் தெரிவு முதல் தொடர்ந்துநடைபெற்ற அனைத்துக்கூட்டங்களிலும் தங்களுக்குவரப்போகும் துறைமுகம் என்னென்ன வசதிகளைஉள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்கிறகலந்துரையாடல்கள். அதுமட்டுமன்றி தாங்கள்களப்பயணமாக சென்று பார்வையிட்ட வாழைச்சேனைதுறைமுகத்தின் செயற்பாடுகள் தமக்கு திருப்தி அளிப்பதாகவும்அதன் அடிப்படையில் சில கோரிக்கைகளும் திட்ட சார்அதிகாரிகளிடம் மீனவ சங்க உறுப்பினர்களால்விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வைக்கப்பட்ட சிலகோரிக்கைகளும் அவற்றிற்கு மீன்பிடித்துறைமுககூட்டுத்தாபனத்தால் அளிக்கப்பட்ட பதில்களும், எடுக்கப்பட்டமுடிவுகளும் வருமாறு…..
கோரிக்கை 1: துறைமுகத்தில் அமைக்கப்பட இருக்கும்கடைத்தொகுதிகள் பேசாலை மக்களுக்கே குத்தகைக்குவழங்கப்பட வேண்டும்.
பதில்: இலங்கையின் எந்த ஒரு துறைமுகத்தின்கடைத்தொகுதியும் திறந்த கேள்வி (open tender) கோரப்பட்டுத்தான் குத்தகைக்கு வழங்கப்படுவது வழமை. இருப்பினும் மீனவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுஅவ்வாறு கேள்வி மனுக்கள் ஒப்பிடப்படும் (EVALUATION) போது பேசாலை மக்களின் கேள்வி மனுக்களுக்கேமுன்னுரிமை வழங்கப்படும். (இதற்கான பொறிமுறையைஎழுத்து மூலமும் பெறலாம்).
கோரிக்கை 2: இக்கடைத்தொகுதிகளில் அதிக லாபம்ஈட்டப்படுவதான சிற்றுண்டிச்சாலை மீனவ சங்கத்திற்கேகுத்தகைக்கு விடப்பட வேண்டும்
பதில்: மேற்குறிப்பிட்டதை போன்று வேறு இடங்களில் இப்படிநடைமுறை இல்லை எனினும், மீனவசங்கத்தின்கோரிக்கையை ஏற்று சிற்றுண்டிச்ச்சாலையின் குத்தகையைதிறந்த கேள்வி(Open tender) கோராமல் நேரடியாகவே மீனவசங்கத்திற்கு வழங்க சம்மதிக்கப்பட்டது.
கோரிக்கை 3: துறைமுகத்திற்குள் எரிபொருள் நிரப்புநிலையம் அமைக்கப்பட இருப்பதால், தற்போது படகுகளுக்குஎரிபொருள் விற்பனை செய்வதன் மூலம் மீனவ சங்கத்திற்குவரும் லாபம் பாதிக்கப்படும் அதனால் எரிபொருள்நிலையத்தை நடாத்தும் உரிமமும் மீனவ சங்கத்திற்கேவழங்கப்பட வேண்டும்.
பதில்: இலங்கையில் உள்ள எல்லா மீன்பிடிதுறைமுகங்களையும் அங்குள்ள எரிபொருள் நிலையங்களின்மூலம் ஈட்டப்படும் இலாபத்தின் ஊடேயே பராமரிப்பதனால், அதை யாருக்கும் குத்தகைக்கு விடுவதில்லை. நேரடியாகஇலங்கை மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனமே நடாத்தும். இருப்பினும் மீனவ சங்கத்தின் வருமானம் பாதிக்கப்படுமெனின், மீனவர்சங்கம் அதனூடாக பதிவு செய்யப்பட்ட படகுகளுக்குஎரிபொருள் நிலையத்தினால் நிரப்பப்படும் எரிபொருளுக்கானபணத்தை சேகரித்து வழங்கலாம். இவ்வாறு சேகரிக்கும் போதுஇப்போது போலவே லீட்டருக்கு 2 ரூபாய் வீதம் அதிககட்டணம் அறவிட்டு அதை மீனவ சங்கத்திற்காக பயன்படுத்தலாம். தேவை ஏற்படின் இதை மீனவ சங்க யாப்பிலும்சேர்த்துக்கொள்ளலாம். அப்படி செய்தால் தற்போதுஎரிபொருள் விற்பதன் மூலம் மீனவ சங்கத்திற்கு கிடைக்கும்லாபம் பாதிக்கப்படாது.
இவ்வாறு கடந்த 3 வருடங்களாக 15 ற்கும் மேற்பட்டகூட்டங்களில் கலந்துகொண்டு துறைமுகத்திற்காகபேச்சுக்களை நடாத்திய மீனவ சங்கம் திடீரென ஒரு நாள்,இந்த துறைமுக விடையத்தை கோவில் பங்குச்சபைக்குகொண்டு வந்ததுடன், நாங்கள் இதுவரை வெறும் கடல்அணை அமைக்கப்பட போகிறதென்றுதான்நினைத்திருந்தோம், துறைமுகம் வரப்போவது தங்களுக்குதெரியாதெனவும், எங்களுக்கு துறைமுகம் வேண்டாம் என்றும்துறைமுகம் வந்தால் நிறைய பாதகங்கள் பேசாலைக்குஏற்படும் என்றும் கூறியுள்ளனர் (கடல்அணை என்பதுகடலிற்குள் அமைக்கப்பட இருக்கும் ஒரு அணையே தவிரஅதில் சிற்றுண்டிச்சாலையோ கடைகளோ எரிபொருள்நிலையமோ இருக்காதென்பது யாவரும் அறிந்ததே. துறைமுகம் என்று தெரியாமல் கடைக்கும்சிறுண்டிச்சாலைக்கும் உரிமம் கோரியது எப்படி?). இதன் பின்,எங்களுக்கு துறைமுகம் வேண்டாம் வெறும் கடலணைமட்டுமே போதும் என ஒரு கடிதம் எழுதப்பட்டு அதுஆங்கிலத்திலும் மாற்றப்பட்டு அதில் பேசாலை மக்கள் பலரின்கையெழுத்து பெறப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கிக்குஅனுப்பிவைக்கட்டது. இதன் விளைவாக ஆசிய அபிவிருத்திவங்கியால் தற்போது இத்திட்டம் கைவிடப்படும் நிலையில்உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியை பொறுத்தமட்டில்மக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு திட்டத்தையும்வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தாது.
உண்மையில் இங்கே நடந்தது என்ன?? மீனவசங்கத்தின்இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?? இதில் மூன்றாம்நபர்கள் யாரினதும் தலையீடுகள் உள்ளதா?? இந்ததுறைமுகத்திட்டம் கைவிடப்படுவதால் யாருக்கு லாபம் சற்றுஆராய்வோமா??
மீனவ சங்கத்தின் இரண்டு நடவடிக்கைகள் சந்தேகத்தைஏற்படுத்தின.
1) துறைமுகம் வேண்டாம் என்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்குஅனுப்பிய கடித்ததில் தமிழில் எழுதப்பட்டதற்கும் அதன்ஆங்கில வடிவத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆங்கில கடிதம் இத்திட்டத்தை நிறுத்தியே ஆகவேண்டும்என்கிற நோக்கில் கடும் தொனியில் தமிழ் கடிதத்தில் இல்லாதசில மேலதிக விடயங்களையும் உள்ளடக்கி இருந்தது. மீனவசங்கத்தால் தமிழில் எழுதப்பட்டதாக கூறப்படும் அந்தகடிதம் மொழிபெயர்ப்பின் போது எவ்வாறு இப்படிமாறக்கூடும்???
2) குறிப்பிட்ட கடிதம் அரசாங்க அதிபருக்கோ அல்லது ஆசியஅபிவிருத்தி வங்கியின் இலங்கை கிளைக்கோஅனுப்பப்படாமல் நேரடியாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும்ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமை காரியாலயத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தலைமை காரியாலத்திற்குஅனுப்பினால் இதை உடனே நிறுத்தி விட முடியும் என மீனவசங்கத்திற்கு கூறியது யார்??? தலைமை காரியாலத்தின்முகவரியை கொடுத்தது யார்???
இந்த முரணான செயற்பாடுகள் இதன் பின்னணியில் யாரோசெயற்படுவதையும் அவர்கள் இந்த திட்டத்தை நிறுத்தியேஆகவேண்டும் எனும் முனைப்பில் இருப்பதையும் உணரமுடிந்ததன் அடிப்படையில் அவர்கள் யார் என்பதை அறியமுற்பட்டோம்.
அப்போதுதான் அந்த ஆபத்தான உண்மை வெளி வந்தது. இதன் பின்னணியில் தெற்கை சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும்ஒரு அரச சார்பற்ற நிறுவனம் செயற்படுவதும். இந்நிறுவனத்தின் வடக்கிற்குரிய பொறுப்பாளராகயாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் செயற்பட்டு வருவதும் தெரியவந்தது. இவர்கள் தங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின்திட்டங்களை மேற்பார்வையிடுபவர்களாக கூறிக்கொண்டுமீனவர்சங்கத்தை அழைத்து இத்திட்டம் பாதகமானதுஎனக்கூறி அவர்களை குழப்பியதோடு மட்டும் அல்லாது, அதை நிறுத்தச்சொல்லி எழுதிய ஆங்கில கடிதத்தையும்இவர்களே வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றிஅந்த கடித்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின்தலைமைக்காரியாலத்திற்கு (மணிலா- பிலிப்பைன்ஸ்) அனுப்பியவர்களும் இவர்களே.
எதற்காக எம் ஊரிற்கு வரும் ஒரு அபிவிருத்தி திட்டத்தைஇவர்கள் குழப்ப வேண்டும்?? இதனால் இவர்களுக்கு என்னநன்மை???
இவர்கள் மட்டும் அல்லாது இன்னும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் அண்மைக்காலங்களாக இப்படிஇயங்கத்தொடங்கி உள்ளன. இவர்களின் தொழில், ஆசியஅபிவிருத்தி வங்கி போன்று பெரிய நிதி வழங்கினார்களின்திட்டங்களை கண்காணிப்பதாக கூறி அத்திட்டங்களை அதுசார்ந்த மக்களைக் கொண்டே எதிர்க்க வைப்பது. பின்னர் அதுநிறுத்தப்படும் தறுவாயில் நிதி வழங்குனரிடம் சென்று இந்தபிரச்னையை நாங்கள் தீர்த்து தருகிறோம். ஆனால் அதற்குஎங்கள் நிறுவனத்தை சமூக பிரச்சனைகளை தீர்க்கும் துறைசார் நிபுணர்களாக நியமித்து ஒரு பெரும் தொகை பணத்தைஅதற்கு கூலியாக தரவேண்டும் என பேரம் பேசுவார்கள். இதுதான் இவர்களின் தொழில். சுருக்கமாக சொன்னால்பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையாட்ட காசுகேட்பவர்கள்.
இப்போதைக்கு இவர்களுக்கு தேவை ஆசிய அபிவிருத்திவங்கியின் ஒரு திட்டத்தை நிறுத்திக்காட்டவேண்டும்அப்போதுதான் அது எதிர்காலத்தில் இப்படியான திட்டங்களில்ஆசிய அப்பிடிருத்தி வங்கியுடன் பேரம்பேச உதவும். அதற்காகஅவர்கள் தெரிவு செய்த திட்டம்தான் இந்த பேசாலை மீன்பிடிதுறைமுக திட்டம். இதில் கேலியான விடயம் என்னவென்றால்இந்த அமைப்பின் வடக்கின் பொறுப்பாளரானயாழ்ப்பாணத்தை சேர்ந்த அந்த நபர் தனது ஊரில் (யாழில்)அமைக்கபட இருக்கும் ஏனைய 3 திட்டங்களையும் எதுவும்செய்ய முடியாது, யாழ் மக்களை அவ்வளவு எளிதாக ஏமாற்றமுடியாதென தெரிந்து பேசாலையை தெரிவு செய்து, பேசாலைதுறைமுகம் உங்களின் ஊருக்கு பாதிப்பானது அதை நிறுத்தவேண்டும் என கூறி அதற்காக செயற்படுவதுதான். இது வெளிப்படையில், ஆடு நனைவதற்காய் அடுத்த ஊர் ஓநாய்அழுவதைப்போன்றது. இதில் ஓநாயை சொல்லி குற்றமில்லை. ஏமாறத்தயாராய் ஆடுகள் இருக்கும் வரையில் எந்த ஓநாயும்வாலாட்டத்தான் செய்யும்.
இங்கே நாம் விடப்போகும் வரலாற்றுப்பிழை என்னவென்றால்,2015 இல் இத்திட்டம் ஆரம்பிக்கும் போது ஆசிய அபிவிருத்திவங்கியால் மீனவ சங்கத்திடமும் அந்த முதல் கூட்டத்திற்குவந்திருந்த மக்களிடமும் சொல்லப்பட்ட விடயம், “பேசாலையில்தான் இத்துறைமுகத்தை அமைக்கவேண்டும்என்கிற எந்த கட்டாயமும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்குஇல்லை. துறைமுகத்திற்கான உங்களின் தேவையைகருத்தில் கொண்டு மட்டுமே பேசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உங்கள் ஊரிற்கு மீன்பிடி துறைமுகம்வேண்டாம் என்றால் இப்போதே கூறி விடுங்கள் இதைதுறைமுகம் தேவையான வேறொரு இடத்திற்கு மாற்றலாம்.”
இவ்வாறு கேள்வி எழுப்பி அவர்கள் தங்களுக்குள்கலந்துரையாடுவற்கான நேரமும் வழங்கப்பட்டது. அக்கலந்துரையாடலின் முடிவில் இங்கு வருகைதந்த மீனவர்சங்க உறுப்பினர்களும் மக்களும் ஒருமுகமாக எங்களுக்குஇத்துறைமுகம் வேண்டும் என கூறியதன் அடிப்படையிலேயேஇத்திட்டம் ஆரம்பமானது.
3 வருடங்களாக பேசாலையில் துறைமுகத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாய்செலவிட்டு கடல் அலையின் தன்மை, காற்றின் தன்மை, மாதத்திற்கு மாதம் அவற்றில் ஏற்படும் மாற்றம், கடலின் அடியில்மணல் நகரும் அளவு மாறும் தன்மை என மிக நுணுக்கமானபல ஆய்வுகள் செய்யப்பட்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது திடீரென எங்களுக்கு இத்துறைமுகம் வேண்டாம்என்பது, இனி அதை மன்னாரின் எந்த ஓர் இடத்திற்கும் மாற்றமுடியாமல் இத்துறைமுகத்திட்டம் ஒரேயடியாக கைவிடப்பட்டுஅதற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படுவது மட்டுமேசாத்தியமாகும். (அவ்வாறு வேறு இடத்திற்கு மாற்றின் இந்த 3வருடங்களாக செலவிட்ட பணமும் உழைப்பும் வீணாவதோடு, புதிதாக தெரியும் இடத்தில் இன்னும் மூன்று வருடங்கள்ஆய்வுகளை மேற்கொள்ள நேரிடும் என்பதால் ஆசியஅபிவிருத்திவங்கி அதற்கு சம்மதிக்காது)
இவ்வாறு நடந்தால் இனி எந்த ஒரு அபிவிருத்திக்கான நிதியும்பேசாலையை நோக்கி மட்டுமல்ல மன்னாரை நோக்கியேவராது. இதனால் பேசலை மீனவர்களின் அவலநிலைகாலத்திற்கும் தீர்க்கப்படாது அத்தோடு மன்னாரில் ஒரு மீன்பிடிதுறைமுகம் இல்லாத பட்சத்தில் இனி வரும் எந்ததலைமுறையும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடவோ அதற்கானபடகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவோ வேறு மாவட்டதுறைமுகங்களையே கையேந்த வேண்டி ஏற்படும்.
நாம் செய்யும் இந்த பிழைக்காக எம் எதிர்கால சந்ததிக்குபதில் சொல்ல போவது யார்?? யாரோ ஒரு சிலரின் தனிப்பட்டலாபத்திற்கு நாம் பலியாக போகிறோமா?? சிந்திப்போம்…!!!
​​              ஏமாற்றுவது மட்டுமல்ல ஏமாறுவதும்குற்றமே..!!!
எதற்காக எம் ஊரிற்கு வரும் ஒரு அபிவிருத்தி திட்டத்தைஇவர்கள் குழப்ப வேண்டும்?? மேலும் திடுக்கிடும் தகவல்களை தாய் செய்கள் வெளியிட உள்ளது


                                                      

                                                             

Ingen kommentarer:

Legg inn en kommentar

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் –

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி ப...