onsdag 31. oktober 2018

பேசாலை மீனவர் சங்கத்தின் குளறுபடிகளும் மோசடிகளும்:

பேசாலை மீனவர் சங்கத்தின் குளறுபடிகளும் மோசடிகளும்:  பேசாலைதாஸ்

                                                                பேசாலையின் பொருளாதார முதுகெலும்பு, வாழ்வின் ஆதரமாக இருப்பது எமது மீன்பிடியாகும், இந்த மீண்பிடித் தொழிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டியது, மீனவர் சங்க த்தின் பாரிய பொறுப்பாகும்! ஆனால் நடப்பது என்ன? மோசடிகளும் குளறுபடிகளுமே மீதமாக இருக்கின்றது. தற்போது நாற்பது இலட்சம் ரூபாவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மீனவர் சங்கத்தைப்பொறுத்தவரை சகஜம் என்று சொல்லும் அளவுக்கு முறை கேடுகள் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றது. 

                                                                    காணியை விற்று, பூமியை விற்று, கட்டின பெண்டாட்டியின் தாலியைவிற்று, கடலிலே போட்டு, கஸ்டப்பட்டு தொழில் செய்யும், எம் மீனவரின் உழைப்பை  எரிபொருள் விற்பனை என்கின்ற பெயரில் கொள்ளையடிப்பது வேதனை அளிக்கின்றது! இதை உடனடியாக சரி செய்யவேண்டும்! மோசடியில் ஈடுபட்டவர் நமது சொந்த உடன்பிறப்பாக இருந்தாலும் கூட அதை நாம் அனுமதிக்க கூடாது! இப்படிப்பட்ட மோசடி மீண்டும் நடக்காதபடி என் உயிரிலும் மேலான, என் பேசாலை உறவுகளே விழிப்புணர்வுடனும்,சமூக பொறு ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின் றேன்! கள்ளுக்குத்தகை பனைவளத்துறை சபையிடம் கொடுக்கப்பட்டு ள்ளது, சாராய தவறணை தனியார்வசம் உள்ளது. உண்மையில் இவை எல்லாவற்றையும்  நிர்வாகம் செய்ய பேசாலை வெற்றி அன்னை ஆலயத் தின் குருவும், பங்கு சபையும் முன்.வரும் பட்சத்தில் இப்படிப்பட்ட மோசடிகள் இடம் பெறுவது தவிர்க்கப்படும்,. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...