mandag 25. april 2011

அருட் திரு அமரர் Z.N.Croos OMI

எங்கள் கிராமத்து மக்கள் பக்தியிலே தழைத்தோங்கியவர்கள் அதுவும் வெற்றி அன்னைமீது அளவில்லா நேசம் கொண்டவர்கள். இதுவரைகாலமும் பேசாலை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தது கிடையாது. இயற்கை அழிவோ அல்லது யுத்த அழிவோ பெருமளவு நடந்தது கிடையாது. மிகப்பழைய காலத் திலே பெருவாரி நோய் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போன தாக மக்கள் கூறுவதுண்டு. அந்தக்காலத்தில் இருந்து பேசாலைமக்கள் தமது ஊரை சகல விக்கினங்களில் இருந்து காப்பாற்றவேண்டுமென தாயாரை நோக்கி மன்றாடுவதுண்டு. சம்மனசுகளின் இராக்கினியே! என்ற மன்றாட்டை ஒவ்வொரு நாளும் பூசைமுடிந்தவுடன் மிக உருக்கமாக எங்கள் மக்கள் மன்றாடு வதுண்டு. இவ்வாறு அன்னையால் எங்களுக்கு தரப்பட்ட தவப்புதல்வன்தான் அருட்தந்தை இசட் என் குருஸ் என்று அழைக்கப்படும் குருசுசுவாமி! இவர் எங்கள் ஊர் முதல் தவப்புதல்வ னும் மன்னார் மறைமாவட்டத்தின் முதற்குருவும் இவர்தான் என நினைகின் றேன்.இவர் மட்டுமல்ல இவரது குடும்பத்தில் இருந்து பலர் குருக்களாகவும் கன்னியாஸ்திரிகளாகவும் வந்துள்ளனர் அதனால் தான் இவரது குடும்பத்தை பேசாலைமக்கள் குருகுலம் என்று அழைப்பார்கள். குருசு சுவாமி ஓர் பிரசங்கப் பீரங்கி! நரகம் என்று சொல்லி பிரசங்கிக்கும்போது உண்மயிலேயே நடுக்கம் எடுத்துவிடும்! இவருக்குப்பின் கிட்டதட்ட 40 வருடங்களாக ஒரு குருவும் எங் கள் ஊரில் முளைக்கவில்லை. எங்களுக்கு ஒரு சுவாமி இருந்தாலும் அவர் 100 சுவாமிகளுக்கு சமமானவர் என்று மனதை தேற்றிக்கொண்டிருக்கும் போதுதான் அருட்திரு ஜெரோம் அவர்கள் குருவாக மாறினார் அது பெரும் ஆனந்தமாகவும் அதற்குப்பின் அதிக குருக்களும் உருவாகினார்கள். இன்று ஒரே குடும்பத்தைச்சார்ந்த இருவர் ஒரே நாளில் குருவாக திருநிலைப்படுத்தப் படும் பெரும்பாக்கியத்தை பேசாலைமக்கள் அனுபவிக்க இருக்கின்றார்கள் அதையிட்டு நான் பூரிப்படைகின்றேன். இவர் பிறந்தது அன்னைமரி பிறந்த நாள் 1911 September 08  திகதி இறந்தது 07 Decenber 1992 குருத்துவம் 1938 ஆவணி 13     நேசமுடன் பேசாலைதாஸ்                  

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...