பேசாலையில் ஆசிரியராகவும் ஒரு கலைஞனாகவும் வாழ்ந்து மறைந்தவர் தான் அமரர் திரு செபஸ்தியான் குரூஸ் அவர்கள்
மென்மையான சுபாவம் கொண்டவரும் எல்லோரிடமும் அன்பாக பழகும் சுபாவம் கொண்டவர் இவர். இவரிடம் நான் கல்விகற்றது கிடையாது ஆனால் இவரின் இசைப்பாடல்கள் வாசாப்புகள் நாடகங்களினால் நான் பெரிதும் கவரப்பட்டிருக்கின்றேன். நத்தார் விழாவந்தால் அந்த இரவுப்பூசை முடிந்தகையோடு பீடப்பரிசாரகரும் மற்றும் பாடகர் குழாமும் இணைந்து இரவு முழுவதும் வீடு வீடாக சென்று கரோல் பாட்டு இசைத்து பணம் சேகரிப்போம் அது ஒரு சொர்க்கமான கனாக்காலம்! அப்போதெல்லாம் செபஸ்ரியான் குரூஸ் மாஸ்டர் கரோல் பாடல் இசையமைப்பர். ஆடினதெப்படியோ ஆடுகள் நாம் ஆடினதெப்படியோ தகுட தக்கூட என்று அந்தப்பாடல் வரும் இப்பவும் அந்தப்பாடலை என் மனம் என்னை அறியாமலே மனனம்செய்வதுண்டு. இவருடைய பாடலுக்கு எசப்பாட்டக திரு பிரகாசம் லெம்பேட், அமரர் திரு பிளசியஸ் இவர்கள் சினிமாப் பாடல்களை உருவி இசையமைப்பார்கள் முசாகிரி கானா முத்து முத்து மைனா இரவில் வந்த இரட்சகரை அந்த இடையர்களும் இந்த மடையர்களும் என்று கிண்டலடித்து பாடுவதை கேட்கும் போதெல்லாம் மனம் ஆனந்தகூத்தாடும். அமரர் ஆசிரியர் ஒரு கலைஞர் மட்டுமல்ல ஓர் கைதேர்ந்த நுட்பவேலைக்காரர் எளிமையான அந்தமனிதரோடு நமது ஊரில் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் கலைஞர்களை வாழ்த்தி போற்றவேண்டும் என்பதற்காக திரு உதயன் அவர்களோடு இணந்து பிரமாண்டமன வாழும்போதே வாழ்த்துவோம் என்ற ஒரு கலை இரவைப் இலட்சம் ரூபா செலவில் அரங்கேற்றினோம். இறந்த சிங்கத்தைவிட உயிரோடு உள்ள ஆடு மேலானது என்ற வேதவாக்குக்கு ஏற்றாற்போல இது அமைந்தது. தொடரும் நினவுகளோடு
நேசமுடன் பேசாலைதாஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி)
Emat Croos Yesterday at 15:35 · நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி) நம்ம ஊரு இலுப்பையடி சொல்லும் பல...


-
பேசாலை.... Emat Croos வந்தாரை வாழ்விக்கும் வசந்த சாலை வந்து சென்றோரும் போற்றிடும் புகழ் சாலை ஊருக்குள் இழையோடும் பிரதான சாலை மன்ன...
-
சோக்ரா! chocra! பேசாலையில் சோக்ரா என்று சொன்னால் அது லோறன்ஸ் பீரிஸ் அவர்களை அல்லது அவர்களின் பிள்ளைகளை குறிக்கும், இவ ர்களை இன்றும் சி...
-
ஆயிரம் கண்கள் வேண்டுமே! ஆயிரம் கண்கள் வேண்டுமே, இப்பாரினில் ஆனந்தப் புன்னகைக் கோலங்கள் கண்டிட, மாதா உம் ப...

Ingen kommentarer:
Legg inn en kommentar