torsdag 7. april 2011

நினைவுகளில் நீங்காதவர்கள் அமரர் ஜெகநாதன் பீரிஸ்!

சமூக ஆர்வலன், ஏழைப்பாங்காளன், பண்பா ளன், உத்தியோகப்ப ற்றற்ற பிரிகேடியர், ஊருக்கு ஒரு அண்ணன் ஜெகநாதன் அண்ணன் இப்படி யாக பேசாலை மக்களால் நேசிக்கப்பட்டவர் தான் அமரர் லோறன்ஸ் ஜெகநாதன் பீரிஸ் அவர் கள். அண்ணன் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் பதாதைகளில் எழுதப்பட்ட வாசகங்கள் தான் மேலே தரப்பட்ட பட்டங்கள். ஒருவனுக்கு இத் தனை பட்டங்களா? அப்படி அவர் என்னதான் செய்தார்? இதை நான் எழுதுவது பொருத்தமா கது என்றுதான் நினைத்தேன். அப்படி நான் எழு தாவிட்டால் மின் எழுத்துக்களில் ஊர் போற்றிய ஒரு அண்ணனின் நினைவுக்குறிப்புகள் இடம் பெறாமல் போய்விடுமோ என்ற ஓர் ஆதங்கத் தில் ஒரு பேசாலை குடிமகனாக நினைத்துக் கொண்டு எழுதுகின்றேன்.                                                            ஒருவனின் வாழ்வு எப்படியோ அப்படி அவன் மரணமும் அமையும்! உண்மைதான், பணம் பட்டம் பதவி அதிகாரம் படி ப்பு இவைகளைக்கொண்டு மனிதன் மதிக்கப்படு கின்ற தற்கால உலகிலே இவை எதுவுமில்லா மால் ஒரு மனிதன் அவன் இறப்பிலே மதிக்கப்பட் டான் என்பது அண்ணனின் இறப்பு உறுதிசெய் தது. மக்கள் ஒரு மனிதனின் உண்மையான இதய அன்பை மிக சரியாக எடைபோடுகின்றார்கள் என்பதற்கு பேசாலை மக்கள் ஓர் உதாரணம்!                                                        என் ஊரைப்பற்றி நான் பெருமைப்படுகின்றேன். அண்ணன் ஜெகநாதன் பீரிஸ் தன் சகோதரங்களைப்போல பட்டதாரி அல்ல, தன் பெற்ற பிள்ளைகளைப்போல பொறி யியலாளர் அல்ல. பணமில்லாதவர் பள்ளிக்குச் சென்று சரியாக படித்ததும் கிடையாது! அவருக்கு த்தெரிந்த தெல்லாம் பாசமும் அன்பும் பண்பும் மட்டும்தான். அவருக்குள் இருக்கும் பாச உணர்வு அவரோடு பிறந்த உடன்பிறப்புகளில் யாருக்கும் கிடையாது! அவரைப் பற்றி நிறைய எழுதலாம். அவர் இறந்தபின் அவருக்கு கிடைத்த மரியாதை யே தனிரகம்! இராணுவம் பொலிஸ் ஏன் புலிகள் கூட மரியாதை செலுத்தினார்கள்.                                       இவருக்கு இருக்கும் சிறப்பான அம்சம் எது வென் றால் யார் எந்த நேரத்திலும் என்ன உதவிகேட்டாலும் தயங்காமல் செய்வார் அதன் கடினம் சிக்கல் இவைகளை ஆராயமல் செய்வார் இதுதான் பேசாலை மக்களுக்கு அவர் மீது பிடித்த காரியம்! இராயப்பரைப்போல யோசி க்காமல் கடலில் இறங்கி நடக்க நினைப்பார்! தூய்மையான அன்பு அப்படித்தான் செய்யும். ஒரு முறை ஒரு ஏழைத்தாய் அண்ணனிடம் வந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட தன் பிள்ளையை மீட்டுத்தரும்படி அழுது கொட்டியிருக்கின்றாள் பொறுக்கமுடியாத அண்ணன் இராணுவத்திடம் சென்று பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொல் லியுள்ளார் உண்மையி லேயே பிடிபட்டவன் ஒரு நிஜமான சிறந்த புலிப்போராளி. பிடித்ததோ அனு ராதபுர இராணுவம். இவர் பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொன் னதும் இராணுவம் அண் ணனைப் பிடித்து அடித்து உடைத்துள்ளார்கள் நல்லகாலம் தள்ளாடி பிரிகேடியார் வந்தபடியால் உயிர்தப்பினார்.                                            இப்படி இன்னொரு சம்பவம்! கடலுக்கு செல்லக் கூடாது என இராணுவ உத்த ரவு, ஊர்மக்கள் தொழில் இல்லாமல் சரியாக கஸ்டப்பட்டார்கள். தள்ளாடி பிரிகேடியர் தென்ன க்கோன் அவர்கள் ஜெகநாதன் அண்ணனுக்கு நன்கு பழக்கம் எனவே தள்ளாடி முகாம் சென்று பிரிகேடியரை சந்தித்து நிலமைகளை சொல்லி தொழிலுக்கு போக உத்தரவு கேட்டிருக்கின் றார் அந்தநேரம் பார்த்து சிலாவத்துறையில் தாக்கு தல் நடத்தப்பட்டது உடனே பிரிகேடியர் தொழில் விடயமாக இன்னொரு நாள் ஆறுதலாக முடிவெ டுப்போம் எனச்சொல்லி பிரிகேடியர் அவசரமாக கிளம்பி விட்டார். அண்ணன் பேசாலைக்கு திரும் பிவந்தார் கொஞ்சம் போதையில், வந்ததும் நீங் கள் தொழிலுக்குப் போங்கள் நான் பார்த்துக் கொள்கின்றேன் எனச் சொல்ல அவர் வார்த்தை யை கேட்டு எல்லோரும் கடலுக்கு கிளம்பிவிட் டனர்                                                         கடலில் நேவிக்காரன் எல்லோரையும் பிடிக்க மீனவர்களோ பிரிகேடி யர் உத்தரவு எனச்சொல்ல கடலில் நேவிக்கும் தரையில் ஆமிக்கும் இடையே தகராறு! அடுத்த நாள் காலையில் கோவில் முன்றலில் இராணு வம் ஊர்மக்களை விசாரிக்க ஊர்மக்களோ ஜெகநாதன் அண்ணன் சொன்னார் நாங்கள் போனோம் என்றார்கள் விசாரிக்க வந்த பிர்கே டியர் தென்னக்கோன் ஜெகநாதன் அண்ணனை ப்பார்த்து நீ பிரிகேடியரா? அல்லது நான் பிரிகே டியரா? என வினாவ அண்ணன் தலையைச் சொரிய மக்களும் இராணுவமும் சிரிக்கத்தொட ங்கினார்கள். மனம் இளகிய பிரிகேடியர் தென்ன க்கோன் நிபந்தனைப்படி மீன் பிடிக்க உத்தரவு வழங்கினார் அன்றில் இருந்து அண்ணன் ஜெகநாதன் அவர்கள் பேசாலைமக்களின் இதய த்தில் பிரிகேடியராக தரமுயர்ந்து நின்றார்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...