onsdag 3. oktober 2018

பேசாலை துறை முகமும் எலிப்பொறியியலாளர் சங்கத்தின் அறிக்கையும்; பேசாலைதாஸ்

பேசாலை துறை முகமும் எலிப்பொறியியலாளர் சங்கத்தின் அறிக்கையும்;  பேசாலைதாஸ்
                                                       பொறியலாளர்களின் அறிக்கையை ஆய்வு செய்யுமுன், இரு திட்டங்கள் தொடர்பாக என் உறவுகளுக்கு விளக்கம் அளிக்க ஆசைப்படுகின்றேன். முதலாவது சீனாவின் முத்துமாலை திட்டம், அடுத்தது இந்தியாவின் சாஹர்மாலா திட்டம். சீனாவின் முத்து மாலை திட்டமானது தெற்கு ஆசியா பகுதியில், சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ கேந்திரங்களை ஸ்திரப்படுத்தலும், சீனாவின் ஆழ் கடல் மீன்பிடியை அபிவிருத்தி செய்வதற்கும் உருவாக்கப்பட்டது. முக்கி யமாக இந்தியாவை குறிவைத்து இந்த திட்டம் உருவாக்கட்டுள்ளது. இந்த திட்டத்தின் உதவியுடன் கொழும்பு துறைமுகம், காலிதுறைமுகம் என்n பன புணரமைக்கப்படுகின்றது. அதுமட்டுமல்ல யாவா சுமாத்திர, கொங்கொங் போன்ற நாடுகளிலும் முத்துமாலை திட்டம் உருவா க்கடுகின்றது. 

                                              இதற்கு எதிராக உருவாக்கப்பட்டதே இந்தியாவின் சாஹர் மாலா திட்டம், இந்திட்டத்தின்படி இலங்கையின் வட பகுதி, தென் இந்திய கரையோர பகுதியில் துறைமுக பட்டிணங்களை உருவாக்கி அதன் மூலம் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இதனை அமுல்படுத்துகின்றது. இந்த இரு திட்டத்தின் எதிர்வினையானது ஈழத்தின் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அதற்கான போராட்டத்தின் தார்மிக நியாயத்தை அடக்கியுள்ளது

                                                                             nnnசீனா மற்றும் இந்தியாவின் இந்த திட்டங்களுக்கு எதிராக ஈழ மக்களின் தனிநாட்டு அரசியல் போராட்டம் பாதமாக அமையும் என்ற காரணதினால், சர்வதேசம், சீனா உட்பட எல்லா நாடுகளும் இணைந்து ஈழ போராடத்தை அடக்கியுள்ளது. விடு தலை புலிகள் மட்டுமல்ல, வேறு எந்த இயக்கம் கூட இப்போராடத்தை முன்னெடுத்தாலும்  அது அடக்கப்படும். தமிழர்களின் உரிமை மறுக் கப்படும். எனவே இந்த திட்டத்தின் வழியாக வ்ரும் துறை முகம் தமிழ ர்களின் உரிமையை மதிக்குமா? என்பதனை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!

                                                                  இனி பொறியியலாளர் அறிக்கைக்கு வருவோம். இந்த அறிக்கையில் ஆழ்கடல் மீன்பிடி அபிவிருத்தி என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆழ்கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கின்றது? வழக்கமாக நடுக்குடா கடலை ஆண்கடல் என்றும் பேசாலை கடலை பெண்கடல் என்றும் எம்முன்னோர் கூறினார்கள், ஏனெனில் நடுக்குடா கடலானது நேரடியாக இந்து சமுத்திரத்தோடு இணைந்துள்ளது, அதுபோல பருத்திதுறை தொடக்கம் காலி வரை வங்காள விரிகுடா பெருங்கடலோடு இணைகின்றது.. மன்னார் தீவின் வடக்கே பாலைதீவு, நெடுந்தீவு கச்சை தீவு, இரணைதீவு உட்பட தமிழகத்தின் இராமேஸ்வரம் நாகபட்டிணம் பாக்கு நீரிணையால் முடக்கப்பட்ட ஓர் வலயமே பேசாலை கடல், கடல் என்றுதான் அழைக்கலமே தவிர ஆழ் சமுத்திரம் என்று அழைக்கமுடியாது! இங்கு பிடிக்கப்படும் மீன்கள் ஆழ்கடல் மீன்கள் அல்ல, எப்போதாவது சூரை மீன் பேசாலை கட‌லில் பட்டதுண்டா? ஆழ்கடலில் இறால்படுமா? நண்டு கணவாய் பிடிபடுமா? எப்படி பேசாலை கடலில் ஆழ்கடல் மீன்பிடியை எதிர்பார்க்கமுடியும்?
                 
                                                              ஆழ்கடல் தொழிலுக்கு பெரிய  படகுகள் அதாவது 11 தொன் எடைக்கு கூடிய பெரிய கப்பல்கள் தேவைப்படும், தற்பொதுள்ள இழுவை படகு  நெடுந்துரம் சென்று மீன்பிடிக்க உகந்தவை அல்ல! ஒவ்வொரு பெரும் படகுகளும் சுமார் 75 இலட்சத்துக்கு மேற்பட் டவை அதாவது ஆறு சிலிண்டர் இயந்திரம் பொருத்திய‌ ( Leyland  Tata) லொறி இயந்திரம் பொருத்தப்படவை. அதனை எத்தனை பேசாலை மக்கள் வாங்க முடியும்? எனவேஇந்த துறைமுகம் பேசாலை மக்களுக் கானது அல்ல! அந்த பெரிய படகுகள் இந்து ஆழ் சமுத்திரத்து போகவே ண்டுமானால் தீடைகள ஊடறுக்கவேண்டும் அல்லது சோழக காலங்க ளில் பாக்கு நீரிணை கடந்து வங்காள விரிகுடாவுக்குள் இறங்க வேண் டும். இது சாத்தியமான ஒரு விடையமா?
                                                   
                                                  பொறியியலாளர் அறிக்கையே,இதனை மறை முகமாக ஒத்துக்கொண்டுள்ளது, அதாவது  சிங்களவர்களின் படகின் வருகையால் கலாச்சாரம்  பாதிக்கப்படும் என்ற‌ பேசாலை மக்களின் கேள்விக்கு பதிலாக, சிங்களவரின் பெரும் படகுகள் தீடைகளை ஊடறுத்து வரமுடியாது எனவும்,  பாக்கு நீரினையால் வருவதென்றால், அவர்கள் பருத்திதுறையில் உள்ள துறை முகம் கடந்து வரவேண்டிய அவசியம் இல்லை என்கிறது. அப்படியானால் பேசாலை கடலில் தரித்து நிற்கும் பெரும் படகு மட்டும் எப்படி ஆழ்கடலுக்கு செல்லமுடியும்? பேசாலை மற்றும் இரணைதீவ் அடங்கலான இந்த சின்ன கடலை ஆழமாக்கப்போகின்றார்களா? புத்திசாலி பொறியியலார்கள் சற்று யோசித்திருக்கவேண்டும்?

                                               இன்னொருவிடையும், துறைமுகத்தில் வ்ரும் கடைகள் வியாபார ஸ்தாபனக்கள் பேசாலை மக்களுக்கு கொடுக்கப்ப டுமாம்? யாரை ஏமாற்றுகின்றார்கள். பேசாலை புகையிரத காணியில், சாவன்னா பெரும் கடை திறந்து இருக்கின்றார் அதனை பேசாலை மக்கள் ஆலைய பங்கு சபை எதிர்த்தும் பயனில்லை அது அரசியல் செல்வாக்கினால் ஊரின் மத்தியில் உள்ள பெரும் கடை முஸ்லிம் வியாபாரிக்கு சென்றது மட்டுமல்ல, எணைய பேசாலை மக்களின் வியாபாரத்துக்கே சவாலாக அமைந்துள்ளது. இது மீண்டும் நடக்கது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

                                        பொறியியலளர் அறிக்கைப்படி 1983 ஆண்டில் 40% இருந்த மீன் உற்பத்தி 2015 இல் 15 விழுக்காடு குறைந்தது என்றும் இதற்கு காரணம் ஆழ்கடல் மின்பிடி இல்லை என காரனம் காட்டப்படுள்ளது. இது அப்பட்டமான பொய்! 1972 பிறகு இலங்கை அரசாங்கமானது மரபு ரீதி யான தெங்கு தேயிலை றப்பர் போன்றவை களுக்கு எதிராக மரபு ரீதியற்ற இறால், கடலட்டை கணவாய் நண்டு இவைகளை ஏற்றுமதி செய்வதினை ஊக்குவித்ததினால், இறாலுக்கு கிராக்கி அதிகம் எகிறி தங்கவிலைக்கு சென்ற பொழுது, பேராசை கொண்ட சில பேசாலை  (கு )பட்டம் கொட்ட சில குடும்பத்தால் (பெயர் சொல்ல விரும்பவில்லை) இழுவைப்படகு பேசாலைக்கு கொண்டுவரப்பட்டது, அதில் வந்த சாபேக்கேடே இன்று நாம் அனுபவிப்பது! ட்றோலர் வந்த புதுசில், புதுப்பணக்கார்களும் (நாங்களும் உட்பட) டொயோட்டா கார்களும் வலம் வந்தன, இறால் குத்தகை அதனால் சிலர் திடீர் பணக்காரர்கள் ஆனார்கள். அன்னை மாதாவுக்கும் நல்ல வருமானம்தான்! சூறையாடும் பொருளாதார கட்டமைப்பு என்று அறியாமல் எமது வளங்களை நாமே அழித்தோம்! பற்றாக்குறைக்கு இந்தியக்கரன் உட்பட் இந்த அழிவுக்கு துணைபோனான்.

                                    என் உறவுகளே! எண்ணிப்பாருங்கள்! பேசாலை என்பது பணத்தோட்டம் என அழைக்கப்பட்டது! கரைவலைகாரன், விடுவலை காரன், பாச்சுவலைகாரன் இவர்களின் மனைவிமார்களின் கழுத்தில் குறைந்தது பத்து பவுன் தாலியாவது தொங்கும் இப்போது எமது குமர் களின் கழுத்தில் ஒரு பட்டு நூல் போல் சின்ன ஒரு சங்கிலி! அவ்வளவுக்கு நாம் தேய்ந்து போனோம்! சூரை பட்டு அது தாளாமல் மடிகிழியும்! கத்தாளை பேச்சாலை மடி மடியாய் படுமே! கெழுறுபட்டால், எமது ஊரை நோக்கி படை எடுத்த உம்மாக்காள் எங்கே? வருடம் தோறும் மீன்பிடி, எங்கள் பெத்தாச்சி மால் முடித்தே தாலி செய்தாளாம், மாதாவுக்கு எங்கள் அம்மாக்கள் மால் பொத்தித்தான் அவ்வளவு நகையும் தேடினார்களாம், கம்பாங்கயிறு முறுக்குதல், வலைதெரிதல் அப்பப்பா எத்தனை சிறு தொழில்கள், அத்தனையும் அற்று போய்விட்டதே! என இரத்தகண்ணீர் ராதா மாதிரி நம்மை புலம்ப வைத்தது இந்த நாசாமாய்ப்போன ட்றோலர்தானே! அதை பாதுகாக்க ஒரு துறை முகமா?

                                அறிக்கை மேலும் சொல்கின்றது  200 மேற்பட்ட ட்றோலர் இருப்பதினால் துறைமுகம் தேவை என்கின்றது, தெப்பம்  விடுவலை போன்ற பாதிக்கப்பட்ட சிறு தொழில்களுக்கு நஸ்ட ஈடாம்! முதலில் ஒவ்வொரு மீனவனுக்கும் காப்புறுதி திட்டம், ஓய்வு ஊதிய திட்டம் இவைகளை அமுல்படுத்த சொல்லுங்கள், புத்திசாலியான எலிப்பொறி யியலாளர்களே! நண்டு வளர்ப்பு கண்வாய் வளர்ப்பு இத்ற்கெல்லாம் பயிற்சி நிலையம் துறைமுகத்துக்குள் வருமாம்! ஏன் இப்ப அதனை ந்டைமுறைபடுத்தலாமே?

                              என் உறவுகளே சிங்கள ஆட்சியாளர்களின்  இந்திய சதிவலைகளுக்குள் சிக்கிவிடாதீர்கள், முடிந்தவரை மீன்வளங்களை சூறையாடும் அழித்தொழிக்கும் இழுவை சுருக்கு பட்டாசு இவைகலி மற்ந்து மீண்டும் எமது பாரம்பரிய மரபு சார்ந்த கரைவலை பாய் ச்சுவலை தொழிலுக்கு மாறுவோம், நமது கடல் எல்லைகளூகூ அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய கஇழுவைகளை மடக்கி பிடிப்போம்  முன்பும் பிடித்தோம் இப்பவும் அதை செய்வோம், ட்ரோலர் உரிமையாளர்களே பாய்ச்சுவலை ஏற்றி, புத்திசாலி எலிப்பொறியியலார்கள் சொல்லும் ஆழ் கலுக்குத்தான் சென்று மீன்பிடிக்க முயற்ச்சிசெய்யுங்கள், கண்ணை விற்று சித்திரம் வாங்காதீர்கள்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்




1 kommentar:

  1. அருமையான பதிவு இது அந்த எலிப்பொறியியலாளர்களுக்கு விளங்குமா ?..

    SvarSlett

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...