søndag 22. oktober 2017

கோச்சு வண்டியும் அப்புகாமியும்!

கோச்சு வண்டியும் அப்புகாமியும்!

அப்புகாமி பெயர்தான் சிங்களம் ஆனால் சிங்களம் தெரியாத தமிழ் மட்டும் பேசும் கரையோரச்சிங்கள சமூகம் சார்ந்தவர், எனது ஊருக்கு பருவகால இடம்பெயர்ந்து மீன்பிடி க்கும், சிலாபம் புத்தளம் நீர்கொ ழும்பு, வென்னப்புவா இப்படிப்ப ட்ட இடங்களில் இருந்து மீன்பிடிப்ப தற்காக வருவார்கள், பின்னர் பருவ காலம் முடிந்ததும் வள்ளம் வலைகளோடு சார சாரையாக அவரவர் இடங்களுக்கு சென்றுவிடு வார்கள், ஒரு சிலர் தொடர்ந்தும் என் கிராமத்தில் தங்கி எங்களில் ஒருவராக மாறிப்போவார்கள், அப்படி மனம் மாறி இதயத்தால்  என் ஊரோடு சங்கமமானது அப்புகாமியின் குடும்பம், 1964 ஆண்டு வீசிய புயலில் அப்புகாமியின் அப்பா காணாமல் கடலில் தொலைந்தவர்தான்! அதன் பின் அப்புகாமியின் அம்மா இடிய ப்பம் விற்றுத்தான் வறுமையோடு போராடினார்கள். அப்புகம்மையின் அம்மா, அக்கா, அவரது பெரியதாய் இவர்கள் எல்லோரையும் நாங்கள், நோனா அக்கா என்றுதான் செல்லமாக அழைப்போம், நோனாக்களின் இடியப்பம் அதைவிட நோனாக்கா செய்யும் சம்பல் தனிச்சுவை,  அப்பு காமியும் நானும் பள்ளித்தோழர்கள், இன்றும் இணைபியா நணபர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை அன்பைத்தவிர, ஒரு முறை துரம் மாஸ்டர் நிராவியால் புகையிரத இஞ்ஜின் இயங்குகிறது, அந்த நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஸ்டீவன்சன் என்று எங்களுக்கு சொன்னார், அந்த நாள் சொல்லிவைத்தது போல என் கிராம த்துக்கு கரிக்கோச்சு வந்தது, நானும் அப்புகாமியும் அந்த கரிக்கோச்சை ஆவலோடு பார்க்கின்றோம் ஏதோ ஒரு மெக்கனிக் போல கீழே குனிந்தெ ல்லாம் அப்புகாமி ஆரச்சிபண்ணுகின்றான். கரிக்கோச்சியும் போய்வி ட்டது, அப்புகாமிக்கு ஒரு ஐடியா வந்தது அடே மச்சான் நாமும் சின்ன தாய் ஒரு கரிக்கோச்சி செய்துதால் என்ன என்றான். நானும் ஆமோதி த்தேன். திட்டம் தயாரானது. முதலில்பெரிய லக்ஸ்பிரே டின்னில் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக ஈயத்தால் ஒட்டி அடத்தோம், சிறிய வண்டியும் தயாரானது. இப்போது அதனை இயக்கவேண்டும்,  அப்பொ ழுது எனது வீட்டுக்கு முன்பாக  வி ஜீ டயஸ் அவர்களின் மீன்வாடியும் அதற்கு பின்னால் ஒரு கிணறும் இருந்தது. (இப்போது தேவராஜ் வீடுக ட்டும் இடம்) அந்த கிணற்றடியில் தான் நாங்கள் கோச்சுவிட தயாரா னோம். குளிக்கவந்தவர்கள், தண்ணிற் மெண்டுகொண்டு போக வந்த வர்கள் எல்லோரும் கூட்டமாக கூடிவிட்டார்கள். நான் பெருமையாக சொன்னேன் இடோ பாருங்கள் இந்த வண்டி மெதுவாக நகரும் என்று சொல்லி, வண்டியில் உள்ள நெருப்பை ஊதுகின்றேன். உடனே அப்பு காமியின் அக்கா சின்ன நோனா, நான் ஊதுகின்றேன் என்று சொல்லி ஒரு ஊது குழலோடு வந்து நெருப்பை ஊதுகின்றாள், அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என்பதில் எல்லோருக்கும் ஆவல், சனம் கூட்டமாக் நெருங்கிவிட்டார்கள், நோனா நன்றாக‌ ஆர்வமாக் ஊதுகின்றாள், நானும் இன்னும் நல்ல என்று  ஊக்குவிக்கின்றேன். திடீரென்று பாரிய சத்த த்தோடு லக்ஸ்பிறே டின் வெடிக்க, சுடுதண்ணி எல்லோர்மீதும் பட, சனம் செய்வதறியாது விழுந்தடித்து ஓடினார்கள். கடைசியில் நோனா அக்கா ஆஸ்பத்திரியில், நானும் அப்புகாமியும் காட்டுக்குள் தலைமறவு.
எங்களின் விசித்திரமான ஆராய்ச்சி இப்படி சோகத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்த நாளை இன்னமும் சிந்தித்துப்பா ர்க்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...