torsdag 19. oktober 2017

அந்த நாள்!

அன்பர்களே! நம் ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பருவ வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம் மனதுக்குள் குடி கொள்ளும் அந்தக்காலம் திரும்பவராதா! என்ற அந்த ஏக்கம் தான் அது! நான் என் கிராமத்தை விட்டு 1978 ஆண்டில் இருந்தே பிரிந்துவிட்டேன், குருமடவாழ்வு, பல்லகலைக்கழக வாழ்வு, பின்னர் இந்தியாவில் சில வருடங்கள் அஞ்ஞாத வாசம் ( ஒரு போராளியாக) பின்னர் ஐரோப்பிய புலம் பெயர்வு, இப்படியே வாழ்க்கை அலைக்கழிந்துவிட்டது! இருந்தாலும் என் கிராமத்தின் நினைவுகள் இப்பவும் பசுமரத்தாணி போல மனதில்,,,,, இப்போது இருக்கும் கிராமம் என் மனப்பதிவில் இல்லை, இருப்பதெல்லாம் 1978 ஆண்டுகளுக்கு முன்பிருந்த என் கிராமத்து பதிவுகளைகளைத்தான் இப்பவும் நான் மீட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆலமரங்கள் இருக்கும், ஊஞ்சலாடிக்கழிக்க நீள விழுதுகள் தொங்கும், அருகிலே குட்டைக்குளம் இருக்கும், அதிலே பனைமரக்குற்றிகளை கப்பல் என நினைத்து அதில் ஏறிக்குதிக்கும் சின்னஞ்சிறார்கள், ட்ரெக்டர் வண்டியாய், கத்தாளை, அயலை என ஏரளமாய் மீன் பாயும் என் அழகான ஊர் இப்போது இல்லை. அப்போது உறவுக்காய் வாழ்ந்த உள்ளங்கள் இப்போது இல்லை, இப்போது இருப்பதெல்லாம் வரட்டு கெளரவமும் ஏளனம் கலந்த உள்ளங்கள் நிறையவே என் ஊரில் உண்டு, அந்த ஓலங்கள் இப்போது எதற்கு? விசயத்துக்கு வருகின்றேன். என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு ஓணான் பல்லி கிளிக்குஞ்சு அணில் குஞ்சு இவைகளில் அலாதி ஆசை, மற்ற நண்பர்கள் இந்திய சாரம் சரசரக்க தெருவெல்லாம் பருவங்களை சுற்றிய காலத்தில், இப்படி நான்!
அப்போ நான் ஒரு லூசுதானே! இருக்கட்டும், அணில் குஞ்சு பிடிக்க பள்ளிக்குட ஆலமரதின் கீழ் முட்டி வைத்து தேங்காய் சொட்டு, மிளகாய் வாட்டி அத்ற்குள் வைத்திருந்தேன். அதனை காக்கா கஸ்பார் பார்த்துவிட்டான்! மணி அடித்ததுதான் தாமதம் கஸபர் ஓடினான் என்முட்டியை எடுப்பதற்கு, முட்டியும் கவிழ்ந்து இருந்தது, நான் காக்கா கஸபாரை துரத்துகின்றேன். களைப்பாய் ஓடிய கஸ்பார் ஒரே மூச்சில் முட்டிக்குள் கைவிட்டு இழுத்தான் ஒரு பெரிய பாம்பு அவன் கையில்! நல்ல காலம் பாம்பு அவனை தீன்டவில்லை, அப்படி நடந்திரிந்தால் காக்க கஸப்பார் அமரர் கஸ்பாராகி 45 வருடங்கள் கழிந்திருக்கும், நினைக்க இப்பவும் அலாதி ஆனந்தம் தான் அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...