சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு பகன்றார். சிறுவர்கள் மட்டில், அவர்களது வாழ்வு பற்றி, சமூகத்தில் அவர்களுக்கான அக்கறை குறித்து, இயேசு தமது போதனைகளில் அழுத் தமாக கூறியுள்ளதை, வேதத்தில் பலஇடங்களில், நாம் காணக்கூடியதாக உள்ளது. இயேசு காட்டிய அக்கறையை போல, நமது பங்கிலும், திருப்பாலக சபை ஊடாக சிறுவர்களின் ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்டுவது குறித்து
நாம் சந்தோசப்படவேண்டும். இதற்காக அயராது பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்! அன்பின் பேசாலைதாஸ்
