torsdag 1. desember 2011
இலுப்பை மரம்
பேசாலைக்கிராமத்தின் ஒரு வரலாற்றுச்சின்னமாக இந்த மரம் பலகாலமாக பலராலூம் கருதப்பட்டு வந்தது இந்த மரம். ஆரம்பகாலத்தில் நன்றாக செழிப்பாக பூக்களோடும் காய்களோடும் வளர்ந்த மரம் பின்னார் அடைமழை, வெள்ளப் பெருக்கு இவைகளினால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடையத் தொடங்கியது. 1980களில் என நினக்கின்றேன் ஒரு மாரிகாலத்தில் அடர்ந்த மழையோடு சரிந்து வீழ்ந்தது அந்த இலுப்பை மரம். தாவிதுப்பீரிசு என்ற ஒரு முதியவரின் இறப்பும் சமகாலத்தில் நடந்திருக்க வேண்டும் என நினைக்கி ன்றேன். இந்த மரத்திற்கு ஏன் இவ்வளவு பீடிகை? அதில் தான் விசயமே இருக்கின்றது. பேசாலை என்றால் வடக்கே கடல், தெற்கே நடுக்குடாக்கடல், மேற்கே புகைரதப்பாதை கிழக்கே இந்த இலுப்பை மரம் எல்லைகளாகக் கொண்டது. பேசாலைக்கு யாராவது வரவேண்டுமானால் இந்த இலுப்பைமரத் தைத்தாண்டித்தான் வரவேண்டும். எமது ஊருக்கு யாரவாது பிரமுகர்கள் வந்தால் இந்த இலுப்பை மரத்தில் இருந்துதான் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார். அந்த அளவுக்கு பேசாலைமக்களின் அன்றாட நினைவுகளில் இந்த மரம் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்துக்கொண்டது இந்த மரம்.
søndag 29. mai 2011
திரு N.S.Croos (சூசையப்பு குருஸ்)
திரு. நீக்கிலாஸ் சூசையப்பு குருஸ்!
என் மனதில் இடம்பிடித்த ஒரு மனிதர் இவர். மென்மையான சுபாவாம், நல்ல பண்பாளன், நல்ல பக்திமான். இவரது தலைமகன் ஒரு குருவாக இருப்பது நமக்கு பெருமையாக இருக்கின்றது.
மென்மையான சுபாவம் கொண்டு இவர் இருப்பதால் பேசாலையில் பழைய நாடககதாநாயகனாக இவர் நடித்ததாக என் தாய் எனக்கு சொன்னதுண்டு. அன்பே வா அழைகின்ற எந்தன் மூச்சே! என்ற ராஜா ஜிக்கி பாடிய பாடலை பாடிக்கொண்டு மேடையிலே தோன்றும் போது பெண் ரசிகரால் பெரிதும் கவரப்பட்டவர். அருளானந்தம் நாடகத்திலே இவர்தான் அருளானாந்தர் இவரை குப்பை லோகு என்ற மாமிசமலை போன்ற என் ஊர்க்காரன் ஒருவர் இவரை அடித்து உதைப்பார். எங்கட சனங்கள் ஓவென்று கதறி அழுவதை நான் சின்னவயதில் பார்த்திருக்கின்றேன். கல்யாணம் என்று என் ஊரிலே நடந்தால் இவர்தான் முதல் ஆளாக வந்து மாப்பிள்ளை அழைப்புவிடுப்பார். செத்தவீடு நடாந்தாலும் இறுதிக் கிரிகைகளை இவரே முன்நின்று நடத்துவார். தற்போது வயதாகி வீட்டிலே முடங்கிப்போயிருக்கும் இவரைப்பற்றி நான் துருவநாட்டு பனிப்படலத்தை
பார்க்கும் போதெல்லாம் நினைவுபடுத்துவதுண்டு.
பனிபடர்ந்த மலைகளுக்கிடையே நினைவு மீட்டுகும் அன்பு
பேசாலைதாஸ்

lørdag 28. mai 2011
ஆசிரியர் ஞானமனி நேசம் பச்சேக்
என்ன வாசகர்களே! அமரர் ஆகிப்போனவர்களை நினைத்துப் பார்த்தால் மட்டும் போதுமா! நமது ஊரை, நம்மை, தன்னலம் கருதாமல் அன்பு செய்து சேவை செய்துகொண்டு யாரும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள் பலர் இப்பவும் எமது ஊரிலே வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைப்பற்றி கட்டாயம் எழுதித்தான் ஆகவேண்டும் அதை நீங்கள் நிட்சயமாக வாசிக்கவேண்டும் என அன்போடு வாஞ்சிக்கின்றேன். அப்படி ஒரு மனிதரைப்பற்றி எழுதவேண்டும் என என் உள்மனம் கட்டளை இட்டது. அவர்தான் நேசம் மாஸ்டர் எல்லோரும் தத்தமது பெயருக்கு ஏற்றாற்போல வாழ்வதில்லை ஆனால் நேசம் மாஸ்டர் ஒரு விதிவிலக்கு!
அவர் பெயருக்கு ஏற்றாற்போல எல்லோரிடமும் நேசமாகத்தான் இருக்கின்றார். குறிப்பாக பள்ளிமாணவர்களிடமும் பேசாலை பத்திமா கல்லூரியிலும் அளவில்லா நேசம் கொண்டவர். பேசாலை யூட் வீதி செட்டித்தெரு என அழைக்கப்படுவதுண்டு அந்த செட்டித்தெருவிலே இவர் மட்டும் பெட்டி! இதை அவரே நகைச்சுவையோடு சொல்வதுண்டு. உண்மை தான் இவர் ஒரு ஏழையாகத்தான் வாழ்கின்றார் (மனதில் பெரும் செல்வந்தனாக). ஒரு மார்கழி மாதம்! பேசாலைக்கடலிலே பெரும் இரால் பிடிபாடு! அவரவர்கள் டிசல், ஐஸ், மடி இப்படியாக ஓடித்திரிகின்றார்கள் கிட்டதட்ட பேசாலையில் எல்லோருமோ ஏதோ ஒரு ஓட்டமும் நடையும்.
ஆனால் நேசம் மாஸ்டரோ அமைதியாக மாலை ஆறுமணியாகிப் போனாலும் பள்ளிக்கூடவளவிலே ஏதோ ஒரு வேலையை அமைதியாக செய்துகொண்டிருப்பார். பேசாலை என்பதே விசித்திரமானது அதிலும் பேசாலைப்பெண்கள் சொல்லத்தேவையே இல்லை! தாலி தடிப்பக இருக்கவேண்டும். சேலை சோலையாக காட்சிதரவேண்டும் இப்படியாக ஒவ்வொரு குடும்பத்தலைவியும் தலைவலியாக இருக்கும்போது எப்படி இவரால் மட்டும் ஒரு ஆசிரியத்தொழிலோடு இதர வருமானத்திற்கு ஏங்கித்தவிக்காமல் பள்ளிக்குடம் மாணவர்கள் என்று வாழ முடிகின்றது என்று அப்போதே என் மனம் எனக்குள் கேள்விகேட்டு குடையும்! அவரைப் போல நானும் இருக்கவேண்டும் என்பதே விடையாக அமைந்தது!
நேசம் மாஸ்டர் அன்பாளன் மட்டுமல்ல ஒரு நல்ல பண்பாளன்! அவர் கோபப்படுவது சுனாமி நடக்கிரமாதிரி! எப்போதாவது வரும். வந்தால் வந்ததுபோலத்தான். அவர் நல்ல கலைஞன்! நல்ல நடிகர்! ஒரு நல்ல நாடக இயக்குனரும் கதை ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இப்படி பன்முகம் கொண்ட ஆளுமைகொண்ட ஒரு எளிமையான மனிதர் எம் ஊரில் வாழ்வதையிட்டு நாம் சந்தோசப்படாமல் இருக்கமுடியுமா! நீங்களே சொல்லுங்களேன்!
தொடரும் நினவுச்சுழிகளோடு பேசாலைதாஸ்

ஆசிரியர் அமரர் செபஸ்தியான் குருஸ்
பேசாலையில் ஆசிரியராகவும் ஒரு கலைஞனாகவும் வாழ்ந்து மறைந்தவர் தான் அமரர் திரு செபஸ்தியான் குரூஸ் அவர்கள்
மென்மையான சுபாவம் கொண்டவரும் எல்லோரிடமும் அன்பாக பழகும் சுபாவம் கொண்டவர் இவர். இவரிடம் நான் கல்விகற்றது கிடையாது ஆனால் இவரின் இசைப்பாடல்கள் வாசாப்புகள் நாடகங்களினால் நான் பெரிதும் கவரப்பட்டிருக்கின்றேன். நத்தார் விழாவந்தால் அந்த இரவுப்பூசை முடிந்தகையோடு பீடப்பரிசாரகரும் மற்றும் பாடகர் குழாமும் இணைந்து இரவு முழுவதும் வீடு வீடாக சென்று கரோல் பாட்டு இசைத்து பணம் சேகரிப்போம் அது ஒரு சொர்க்கமான கனாக்காலம்! அப்போதெல்லாம் செபஸ்ரியான் குரூஸ் மாஸ்டர் கரோல் பாடல் இசையமைப்பர். ஆடினதெப்படியோ ஆடுகள் நாம் ஆடினதெப்படியோ தகுட தக்கூட என்று அந்தப்பாடல் வரும் இப்பவும் அந்தப்பாடலை என் மனம் என்னை அறியாமலே மனனம்செய்வதுண்டு. இவருடைய பாடலுக்கு எசப்பாட்டக திரு பிரகாசம் லெம்பேட், அமரர் திரு பிளசியஸ் இவர்கள் சினிமாப் பாடல்களை உருவி இசையமைப்பார்கள் முசாகிரி கானா முத்து முத்து மைனா இரவில் வந்த இரட்சகரை அந்த இடையர்களும் இந்த மடையர்களும் என்று கிண்டலடித்து பாடுவதை கேட்கும் போதெல்லாம் மனம் ஆனந்தகூத்தாடும். அமரர் ஆசிரியர் ஒரு கலைஞர் மட்டுமல்ல ஓர் கைதேர்ந்த நுட்பவேலைக்காரர் எளிமையான அந்தமனிதரோடு நமது ஊரில் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் கலைஞர்களை வாழ்த்தி போற்றவேண்டும் என்பதற்காக திரு உதயன் அவர்களோடு இணந்து பிரமாண்டமன வாழும்போதே வாழ்த்துவோம் என்ற ஒரு கலை இரவைப் இலட்சம் ரூபா செலவில் அரங்கேற்றினோம். இறந்த சிங்கத்தைவிட உயிரோடு உள்ள ஆடு மேலானது என்ற வேதவாக்குக்கு ஏற்றாற்போல இது அமைந்தது. தொடரும் நினவுகளோடு
நேசமுடன் பேசாலைதாஸ்

mandag 25. april 2011
அருட் திரு அமரர் Z.N.Croos OMI
எங்கள் கிராமத்து மக்கள் பக்தியிலே தழைத்தோங்கியவர்கள் அதுவும் வெற்றி அன்னைமீது அளவில்லா நேசம் கொண்டவர்கள். இதுவரைகாலமும் பேசாலை மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தது கிடையாது. இயற்கை அழிவோ அல்லது யுத்த அழிவோ பெருமளவு நடந்தது கிடையாது. மிகப்பழைய காலத் திலே பெருவாரி நோய் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போன தாக மக்கள் கூறுவதுண்டு. அந்தக்காலத்தில் இருந்து பேசாலைமக்கள் தமது ஊரை சகல விக்கினங்களில் இருந்து காப்பாற்றவேண்டுமென தாயாரை நோக்கி மன்றாடுவதுண்டு. சம்மனசுகளின் இராக்கினியே! என்ற மன்றாட்டை ஒவ்வொரு நாளும் பூசைமுடிந்தவுடன் மிக உருக்கமாக எங்கள் மக்கள் மன்றாடு வதுண்டு. இவ்வாறு அன்னையால் எங்களுக்கு தரப்பட்ட தவப்புதல்வன்தான் அருட்தந்தை இசட் என் குருஸ் என்று அழைக்கப்படும் குருசுசுவாமி! இவர் எங்கள் ஊர் முதல் தவப்புதல்வ னும் மன்னார் மறைமாவட்டத்தின் முதற்குருவும் இவர்தான் என நினைகின் றேன்.இவர் மட்டுமல்ல இவரது குடும்பத்தில் இருந்து பலர் குருக்களாகவும் கன்னியாஸ்திரிகளாகவும் வந்துள்ளனர் அதனால் தான் இவரது குடும்பத்தை பேசாலைமக்கள் குருகுலம் என்று அழைப்பார்கள். குருசு சுவாமி ஓர் பிரசங்கப் பீரங்கி! நரகம் என்று சொல்லி பிரசங்கிக்கும்போது உண்மயிலேயே நடுக்கம் எடுத்துவிடும்! இவருக்குப்பின் கிட்டதட்ட 40 வருடங்களாக ஒரு குருவும் எங் கள் ஊரில் முளைக்கவில்லை. எங்களுக்கு ஒரு சுவாமி இருந்தாலும் அவர் 100 சுவாமிகளுக்கு சமமானவர் என்று மனதை தேற்றிக்கொண்டிருக்கும் போதுதான் அருட்திரு ஜெரோம் அவர்கள் குருவாக மாறினார் அது பெரும் ஆனந்தமாகவும் அதற்குப்பின் அதிக குருக்களும் உருவாகினார்கள். இன்று ஒரே குடும்பத்தைச்சார்ந்த இருவர் ஒரே நாளில் குருவாக திருநிலைப்படுத்தப் படும் பெரும்பாக்கியத்தை பேசாலைமக்கள் அனுபவிக்க இருக்கின்றார்கள் அதையிட்டு நான் பூரிப்படைகின்றேன். இவர் பிறந்தது அன்னைமரி பிறந்த நாள் 1911 September 08 திகதி இறந்தது 07 Decenber 1992 குருத்துவம் 1938 ஆவணி 13 நேசமுடன் பேசாலைதாஸ்
வெலிச்சோர் ஞானப்பிரகாஸம் டயஸ் V.G.Dias
வெலிச்சோர் ஞானப்பிரகாஸம் டயஸ் V.G.Dias என்றால் தான் உங்களுக்கு இலகுவாகப்புரியும் என்று நினைகின்றேன். அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஓர் ஆணழகன் இந்த VGDias. சிவந்தமேனி அதற்கேற்றாற்போல சிகை அலங்காரம் உயர்ந்த கம்பீரமான தோற்றம். ஒரு இந்தி நடிகரைப்பார்ப்பது போல ஓர் பிரமை! பள்ளிச்சிறுவனாய் (பயல்) நான் இருந்தபோது எனக்குள் நான் போட்டுக்கொண்ட கற்பனை எடைகள் இவை. இளமைக்காலதிலேயே ஒரு தொழில் அதிபராக உயர்ந்தவர். மீன்பிடித்துறை மட்டுமல்ல ஞானமலர் என்ற பெயரில் ஒரு Transport Company, விவசாயம், தரவையில் நிலத்திற்கு பொலிட்தீன் விரித்து நெல் சாகுபடிசெய்து சாதனைகண்டவர். பேசாலையில் யப்பான் உதவியுடன் மீன் டின் தொழிற்சாலை அமைக்கும் பூர்வாங்க முயற்ச்சி வில் இறங்கியபோதுதான் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. சமூக ஆர்வலர் 1964 இல் ஏற்பட்ட சூறாவளி தாக்கத்தால் சேதமாக்கப்பட்ட பள்ளிக்குடத்தை சீர்செய்து ஒரு பெரிய மண்டபத்தையும் அவர் கட்டிக்கொடுத்தார். அவருக்கு ஆயுள் அதிகமாக இருந்திருந்தால் இன்னமும் அதிகமாக செய்திருப்பார் ஆனால் காலான் அதற்கு இணங்க்வில்லை அது பேசாலைமக்களின் துர் அதிஸ்டம்! இதனைவாசிக்கும் உறவுகள் அவரது படத்தை அனுப்பினால் இதிலே இணைத்துவிடலாம்!
நேசமுடன் பேசாலைதாஸ்
தொம்மை எலியாஸ் பீரிஸ்
பேசாலைக்கிராமத்தில் புகழ்பூத்த பெரும்மக்களில் உயர்திரு எலியாஸ் பீரிஸ் அவர்களும் ஒருவராவார். இவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் கமலஹாசனின் நாயகன் திரைப்படம் என் நினைவில் தொத்திக்கொள்ளும். காதிலே கடுக்கன் தொங்கும் குடும்மி கட்டியிருப்பார் வெற்றிலை சிலவேளை புகையிலை மென்றுகொண்டிருப்பார். நூறுவயது எட்டியபோதும் கூட அவர் மூக்கு கண்ணாடி பாவித்ததாக நான் அறியேன். வெள்ளை ஜிப்பாய் வெள்ளை வேட்டி எப்போதும் அணிந்திருப்பார். அதிகம் படித்திராத ஒருமனிதர் ஆனாலும் மன்னார் அரசாங்க அதிபர் தொடக்கம் பொலிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் இவரைக்காண்டால் எழுந்து நின்றுமரியாதை செய்ததை நான் பார்த்திருக்கி ன்றேன். பேசாலைமக்களினால் தந்தை என்று அன்புசெய்யப்பட்டவர் இவரது இறுதி ஊர்வலத்தில் தாயகத்தந்தைக்கு அன்பு அஞ்சலி என்று ஊர்மக்களினால்
எழுதப்பட்டிருந்தது. தன் மூத்தமகனை ஒரு டாக்டராக படிக்கவைத்தார். இரண்டாவது மகன் சமாதானநீதவானாகவும் மூன்றாவது மகனை தபால் மாஸ்டராகவும் இன்னொருமகனை டாக்டராகவும் உருவாக்கி சாதனை படை த்தார். என்னதான் பிள்ளைகள் படித்திருந்தாலும் தந்தையைப்போல ஊர்மக்கள் மனதில் யாருமே இடம் பிடிக்கவில்லை. நூறுவயதுக்குமேல் வாழும் பாக்கியத்தை கடவுள் இவருக்கு வழங்கினார். ஐம்பதாவது கல்யாண வைரவிழாக்கண்டவர். இப்படிப்பட்ட சகல செளபாக்கியத்தையும் வெற்றி அன்னை அவருக்கு கொடுத்தாள் அதன் காரணம் அவர் வெற்றி அன்னை மீது வைத்திருந்த அளவில்லா நேசம் ஆகும்.
நேசமுடன் பேசாலைதாஸ்
torsdag 7. april 2011
நினைவில் நிலைத்தவர்கள் டயஸ் மாஸ்டர்!
வெள்ளை நிற மல்லிகையோ வேரெந்த மாமலரோ! வள்ளல் அடியினுக்கு வாய்த்த மலர் எதுவோ? வெள்ளைநிற மல்லிகையுமில்லை வேரெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது. இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் டயஸ் மாஸ்டரின் நினைவுகள் சுழன்றுவரும். காரனம் அவர் அணியும் ஆடை. ஆள்பாதி ஆடைபாதி என்பார்களே அது அவருக்கு நன்றாகப் பொருந்தும். அவர் ஆடைமட்டுமல்ல அவர் உள்ளம் கூட கள்ளம் கபடமற்ற வெள்ளைக்கமலம் போன்றது. ஆசிரியராக தோன்றுகின்ற ஓர் குழந்தை! அவர் வாயில் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் தாராளமா கப்புரளும். சரித்திர பாடம் படிப்பிக்கும் போது சுவாரஸ்யமாகப் படிப்பிப்பார். இலங்கையின் முதல் பிரதமர் டி எஸ் சேனநாயக்காவும் அவர் மகன் டட்லியும் இவரது கதாநாயகர்கள்! கிரிக்கட் விளையாடுவார் பொதுவாகச்சொன்னால் கிராமத்தில் வாழும் ஓர் பிரிட்டிஸ்காரன்!
நேர்மை இவரது சிறந்த பண்பு அதற்கு ஒரு சான்று இங்கே! சிரிமா அரசாங்கம் காணி உச்சவரம்புச்சட்டம் அமுலாகிய போது தனக்கு அளவுக்கு மிஞ்சிய காணி இருப்பதாக அரசுக்கு அறிவித்து அதை அரசுக்கு வழங்கியவர் ஒருவேளை இது மடத்தனமாகத்தோன்றலாம் ஆனால் உண்மை நேர்மை இதற்குப்பின்னால் இருப்பதை நாம் கவனிக்கலாம். எங்கள் பேசாலையில் வாழ்ந்த வித்தியாசமான நல்ல மனிதர்களிள் இவரும் ஒருவர்!
நினைவுகளில் நீங்காதவர்கள் அமரர் ஜெகநாதன் பீரிஸ்!
சமூக ஆர்வலன், ஏழைப்பாங்காளன், பண்பா ளன், உத்தியோகப்ப ற்றற்ற பிரிகேடியர், ஊருக்கு ஒரு அண்ணன் ஜெகநாதன் அண்ணன் இப்படி யாக பேசாலை மக்களால் நேசிக்கப்பட்டவர் தான் அமரர் லோறன்ஸ் ஜெகநாதன் பீரிஸ் அவர் கள். அண்ணன் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் பதாதைகளில் எழுதப்பட்ட வாசகங்கள் தான் மேலே தரப்பட்ட பட்டங்கள். ஒருவனுக்கு இத் தனை பட்டங்களா? அப்படி அவர் என்னதான் செய்தார்? இதை நான் எழுதுவது பொருத்தமா கது என்றுதான் நினைத்தேன். அப்படி நான் எழு தாவிட்டால் மின் எழுத்துக்களில் ஊர் போற்றிய ஒரு அண்ணனின் நினைவுக்குறிப்புகள் இடம் பெறாமல் போய்விடுமோ என்ற ஓர் ஆதங்கத் தில் ஒரு பேசாலை குடிமகனாக நினைத்துக் கொண்டு எழுதுகின்றேன். ஒருவனின் வாழ்வு எப்படியோ அப்படி அவன் மரணமும் அமையும்! உண்மைதான், பணம் பட்டம் பதவி அதிகாரம் படி ப்பு இவைகளைக்கொண்டு மனிதன் மதிக்கப்படு கின்ற தற்கால உலகிலே இவை எதுவுமில்லா மால் ஒரு மனிதன் அவன் இறப்பிலே மதிக்கப்பட் டான் என்பது அண்ணனின் இறப்பு உறுதிசெய் தது. மக்கள் ஒரு மனிதனின் உண்மையான இதய அன்பை மிக சரியாக எடைபோடுகின்றார்கள் என்பதற்கு பேசாலை மக்கள் ஓர் உதாரணம்! என் ஊரைப்பற்றி நான் பெருமைப்படுகின்றேன். அண்ணன் ஜெகநாதன் பீரிஸ் தன் சகோதரங்களைப்போல பட்டதாரி அல்ல, தன் பெற்ற பிள்ளைகளைப்போல பொறி யியலாளர் அல்ல. பணமில்லாதவர் பள்ளிக்குச் சென்று சரியாக படித்ததும் கிடையாது! அவருக்கு த்தெரிந்த தெல்லாம் பாசமும் அன்பும் பண்பும் மட்டும்தான். அவருக்குள் இருக்கும் பாச உணர்வு அவரோடு பிறந்த உடன்பிறப்புகளில் யாருக்கும் கிடையாது! அவரைப் பற்றி நிறைய எழுதலாம். அவர் இறந்தபின் அவருக்கு கிடைத்த மரியாதை யே தனிரகம்! இராணுவம் பொலிஸ் ஏன் புலிகள் கூட மரியாதை செலுத்தினார்கள். இவருக்கு இருக்கும் சிறப்பான அம்சம் எது வென் றால் யார் எந்த நேரத்திலும் என்ன உதவிகேட்டாலும் தயங்காமல் செய்வார் அதன் கடினம் சிக்கல் இவைகளை ஆராயமல் செய்வார் இதுதான் பேசாலை மக்களுக்கு அவர் மீது பிடித்த காரியம்! இராயப்பரைப்போல யோசி க்காமல் கடலில் இறங்கி நடக்க நினைப்பார்! தூய்மையான அன்பு அப்படித்தான் செய்யும். ஒரு முறை ஒரு ஏழைத்தாய் அண்ணனிடம் வந்து இராணுவத்தால் பிடிக்கப்பட்ட தன் பிள்ளையை மீட்டுத்தரும்படி அழுது கொட்டியிருக்கின்றாள் பொறுக்கமுடியாத அண்ணன் இராணுவத்திடம் சென்று பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொல் லியுள்ளார் உண்மையி லேயே பிடிபட்டவன் ஒரு நிஜமான சிறந்த புலிப்போராளி. பிடித்ததோ அனு ராதபுர இராணுவம். இவர் பிடிபட்டவன் தன் சொந்தம் என்று சொன் னதும் இராணுவம் அண் ணனைப் பிடித்து அடித்து உடைத்துள்ளார்கள் நல்லகாலம் தள்ளாடி பிரிகேடியார் வந்தபடியால் உயிர்தப்பினார். இப்படி இன்னொரு சம்பவம்! கடலுக்கு செல்லக் கூடாது என இராணுவ உத்த ரவு, ஊர்மக்கள் தொழில் இல்லாமல் சரியாக கஸ்டப்பட்டார்கள். தள்ளாடி பிரிகேடியர் தென்ன க்கோன் அவர்கள் ஜெகநாதன் அண்ணனுக்கு நன்கு பழக்கம் எனவே தள்ளாடி முகாம் சென்று பிரிகேடியரை சந்தித்து நிலமைகளை சொல்லி தொழிலுக்கு போக உத்தரவு கேட்டிருக்கின் றார் அந்தநேரம் பார்த்து சிலாவத்துறையில் தாக்கு தல் நடத்தப்பட்டது உடனே பிரிகேடியர் தொழில் விடயமாக இன்னொரு நாள் ஆறுதலாக முடிவெ டுப்போம் எனச்சொல்லி பிரிகேடியர் அவசரமாக கிளம்பி விட்டார். அண்ணன் பேசாலைக்கு திரும் பிவந்தார் கொஞ்சம் போதையில், வந்ததும் நீங் கள் தொழிலுக்குப் போங்கள் நான் பார்த்துக் கொள்கின்றேன் எனச் சொல்ல அவர் வார்த்தை யை கேட்டு எல்லோரும் கடலுக்கு கிளம்பிவிட் டனர் கடலில் நேவிக்காரன் எல்லோரையும் பிடிக்க மீனவர்களோ பிரிகேடி யர் உத்தரவு எனச்சொல்ல கடலில் நேவிக்கும் தரையில் ஆமிக்கும் இடையே தகராறு! அடுத்த நாள் காலையில் கோவில் முன்றலில் இராணு வம் ஊர்மக்களை விசாரிக்க ஊர்மக்களோ ஜெகநாதன் அண்ணன் சொன்னார் நாங்கள் போனோம் என்றார்கள் விசாரிக்க வந்த பிர்கே டியர் தென்னக்கோன் ஜெகநாதன் அண்ணனை ப்பார்த்து நீ பிரிகேடியரா? அல்லது நான் பிரிகே டியரா? என வினாவ அண்ணன் தலையைச் சொரிய மக்களும் இராணுவமும் சிரிக்கத்தொட ங்கினார்கள். மனம் இளகிய பிரிகேடியர் தென்ன க்கோன் நிபந்தனைப்படி மீன் பிடிக்க உத்தரவு வழங்கினார் அன்றில் இருந்து அண்ணன் ஜெகநாதன் அவர்கள் பேசாலைமக்களின் இதய த்தில் பிரிகேடியராக தரமுயர்ந்து நின்றார்
tirsdag 5. april 2011
உயர்திரு சி.அ.துரம் மாஸ்டர் அவர்கள்
வின்சன் சார்ச்சிலுக்கு சுருட்டு, கவிஞர் தாகூருக்கு தாடி, ஹிட்லருக்கு மீசை, காந்திக்கு கைத்தடி எங்கள் துரம் மாஸ்டருக்கு பிரம்பு! ஆம் பிரம்பை கையாள்ளாதவன் தன் பிள்ளையை பகைக்கின்றன் என்று வேதம் சொல்கின்றது. (உபஆகமம்) எங்களையெல்லாம் தன்பிள்ளை என்று நேசித்த காரனத்தால் துரம் மாஸ்டர் கையில் பிரம்பேந்தினார். ஊரெல்லாம் தன்பிள்ளை என்றவருக்கு அவரோடு கூட வாழ ஒரு பிள்ளை இல்லை. இருந்த ஒன்றயும் கடவுள் எடுத்துக்கொண்டார். சாதாரன ஒரு பாடசாலையாக இருந்த பத்திமா படசாலை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் அது துரம் மாஸ்டரின் அயராத சேவை என்றே சொல்லமுடியும் இதில் துணையாக இருந்த ஆசிரியர்களில் திரு நேசம் மாஸ்டர், திரு முகுத்தார் மாஸ்டரும் கனிசமான பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சவேரியார் கல்லூரி எருக்கலம்பிட்டி என்று உயர்தர கல்விக்காக பேசாலை மாணவர்கள் படை எடுத்தபோது உத்தியோக பற்றற்ற முறையில் உயர்வகுப்பை நிறுவி அதன் மூலம் ஆசிரியை அஸம்ரா பிரீஸ் அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது பெரும் சாதனை! துள்ளித்திரியும் வயதிலே எம் துடுக்கடக்கி பள்ளியிலே பயிலவைத்த பண்பான ஆசான் அவர்! அவர் அதிபராக இருந்த காலத்திலே தமிழ்தின விழாக்கள் அனைத்திலும் எம் பாடசாலையே முதலிடம் வகிக்கும்! நாராய் நாராய் செங்கால் நாராய் நீயும் நின்,, என்ற சத்திமுற்றுப்புலவன் பாடலை இசையோடு பழக்கிய அந்த நினைவுகள் இன்னும் மனதில் அசைபோடுகின்றது. சுடுமணல் நிரம்பிய மத்திய மைதானத்தை ஊராரின் சிரமதானப்பணி மூலம் களிமண் நிரப்பிய அந்த குதுகல நாள் இப்ப கூட மனசுக்குள் மத்தாப்புபோல இருக்கின்றது. கணக்கிலே புலி! ஏன் தமிழ் இலக்கியத்திலும் இசையிலும் அவர் வல்லவர். ஒருமுறை மணிமாஸ்டர் என்ற விடத்தல்தீவு மாஸ்டர் மாற்றலாகிப்போன சமயம் அவருக்கு பிரியவிடைவைபத்திற்காக மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா என்ற சினிமாபாடாலை மணிவண்ணன் மாஸ்டருக்கு மாற்றி அமைத்த சம்பவம் மறக்கமுடியுமா?
அன்னாரின் பெயர் சொல்லாத பிள்ளைகள் இல்லை ஆனாலும் அவருடைய பெயர் கொள்ள ஒரு பிள்ளை இல்லை! இருந்தபோதும் அவர் எங்கள் அன்பு அறிவுலக அப்பாவாக என்றுமே எங்கள் மனதில் இருக்கின்றார்.
நம்ம ஊர் படைப்பாளன் உதயன்
பேசாலை
S.A. உதயனின் "வாசாப்பு" நூல் அறிமுக விழா 16 தை 2011 அன்று பேசாலை ஆலய மண்டபத்தில் அருட் தந்தை ஜெரோம் OMI அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டத்தரணி பிரிமுஸ் சிராய்வா பிரதம அதிதியாகவும், ஊரைச் சேர்ந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.
அறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்
அறிவொளி அளித்துலகாளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம்
இதுதான் பேசாலை மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிராதான மண்ட பத்தின் நுழை வாயில்! இதன் வலது பக்கத்தில் அமைந்துள்ள கட்டிடம் பின்னாளிலே தொழிலதிபராக இருந்து மறைந்த திரு, வெலிச்சோர் ஞானப்பிரகசம் டயஸ் அவர்க ளினால் நிர்மானிக்கப்பட்டது. பேசாலை மகாவித்தியாலய மனது தற்போது பல பெரிய கட்டிடங்களையும் பிரமாண்ட மான விளையாட்டுத்திடலையும் அரங்க மேடைகளோடு கம்பீரமாகத்திகழ்கின்றது! அறிவொளி அளித்துலகளுமே எங்கள் ஆருயிராம் கலைக்கூடம் என்று காலைவெயில் முகத்தில் சுழிரென்று சுட, கூசும் கண்களோடு பாட சாலைக்கீதத்தை பாடும் போது இனம்புரியா சந்தோசம் மனதில் குடிகொள்ளும். அதிபர் அல்லது ஆசிரியர் ஒருவர் அன்றைய நாளுக்குரிய புத்திமதிகளையும் ஆலோசனை களயும் வழங்குவார். ஒவ்வொரு ஆசானும் தெய்வங்களகஎமக்குத்தெரி வா ர்கள் உண்மையும் அதுதான்! அப்படி தெய்வமாக் எனக்குத்தென்பட்ட ஒரு சிலர் ஆசிரியை திருமதி ஜெகநாதன், தலைமை ஆசிரியர் திரு சாமிநாதன், திரு, முகுத்தார் இப்படிப்பலர். ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளி வாழ்க்கை அற்புதமான காலங்களாகும். அதனைச் சொல்லும் பாணியானது சேரனின்அல்பம், பாலுமகேந்திராவின் அழியாதகோலங்கள் போன்ற திரைப்படங்களாக மனதில் விரியும். உங்களுக்கும் உங்கள் பாடசாலை பற்றிய நினைவுகள் மலருகின்றதா? அப்படியானால் அதனை பகிர்ந்து கொள்ளலாமே!
இரட்டையர்கள்
உலகத்திலேயே நாமறிந்தளவில் இரண்டாவது தடவையாக ஒரே குடும்ப த்தைச்ச் சேர்ந்த இரு சகோதரர்கள் ஒரே நாளில் திருநிலை ப்படுத்தப்பட உள்ளனர். இந்த பெருமையை எமக்கு தேடிதந்தவர்கள் எமது பேசாலை யைச் சேர்ந்த அருட் சகோதரர்கள் ஜெகன் (அமதி) அவர்களும் அவரது இளைய சகோதரர் டேவின் (IVD) ஆகியோராவர். இதற்கு முதல், தற்போ தைய பாப்பரசர் Benedikt XVI (Joseph Aloisius Ratzinger ) அவர்களும், அவரது சகோதரர் Georg Ratzinger இருவருமே முதன்முதலில் ஒருமித்து குருப்பட் டம் பெற்ற சகோதரர்களாவர் (They were both ordained in Freising on 29 June 1951 by Cardinal Michael von Faulhaber of Munich). அருட் சகோதரர்கள் ஜெகன் (அமதி) அவர்களும் அவரது இளைய சகோதரர் டேவின் (IVD) இவர்கள் இருவரது குருப்பட்டமும் சித்திரை மாதம் 28ம் திகதி, மன்னார் ஆயர் அவர்களின் தலைமையில் மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
Abonner på:
Innlegg (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...