என்ன வாசகர்களே! அமரர் ஆகிப்போனவர்களை நினைத்துப் பார்த்தால் மட்டும் போதுமா! நமது ஊரை, நம்மை, தன்னலம் கருதாமல் அன்பு செய்து சேவை செய்துகொண்டு யாரும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள் பலர் இப்பவும் எமது ஊரிலே வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைப்பற்றி கட்டாயம் எழுதித்தான் ஆகவேண்டும் அதை நீங்கள் நிட்சயமாக வாசிக்கவேண்டும் என அன்போடு வாஞ்சிக்கின்றேன். அப்படி ஒரு மனிதரைப்பற்றி எழுதவேண்டும் என என் உள்மனம் கட்டளை இட்டது. அவர்தான் நேசம் மாஸ்டர் எல்லோரும் தத்தமது பெயருக்கு ஏற்றாற்போல வாழ்வதில்லை ஆனால் நேசம் மாஸ்டர் ஒரு விதிவிலக்கு!
அவர் பெயருக்கு ஏற்றாற்போல எல்லோரிடமும் நேசமாகத்தான் இருக்கின்றார். குறிப்பாக பள்ளிமாணவர்களிடமும் பேசாலை பத்திமா கல்லூரியிலும் அளவில்லா நேசம் கொண்டவர். பேசாலை யூட் வீதி செட்டித்தெரு என அழைக்கப்படுவதுண்டு அந்த செட்டித்தெருவிலே இவர் மட்டும் பெட்டி! இதை அவரே நகைச்சுவையோடு சொல்வதுண்டு. உண்மை தான் இவர் ஒரு ஏழையாகத்தான் வாழ்கின்றார் (மனதில் பெரும் செல்வந்தனாக). ஒரு மார்கழி மாதம்! பேசாலைக்கடலிலே பெரும் இரால் பிடிபாடு! அவரவர்கள் டிசல், ஐஸ், மடி இப்படியாக ஓடித்திரிகின்றார்கள் கிட்டதட்ட பேசாலையில் எல்லோருமோ ஏதோ ஒரு ஓட்டமும் நடையும்.
ஆனால் நேசம் மாஸ்டரோ அமைதியாக மாலை ஆறுமணியாகிப் போனாலும் பள்ளிக்கூடவளவிலே ஏதோ ஒரு வேலையை அமைதியாக செய்துகொண்டிருப்பார். பேசாலை என்பதே விசித்திரமானது அதிலும் பேசாலைப்பெண்கள் சொல்லத்தேவையே இல்லை! தாலி தடிப்பக இருக்கவேண்டும். சேலை சோலையாக காட்சிதரவேண்டும் இப்படியாக ஒவ்வொரு குடும்பத்தலைவியும் தலைவலியாக இருக்கும்போது எப்படி இவரால் மட்டும் ஒரு ஆசிரியத்தொழிலோடு இதர வருமானத்திற்கு ஏங்கித்தவிக்காமல் பள்ளிக்குடம் மாணவர்கள் என்று வாழ முடிகின்றது என்று அப்போதே என் மனம் எனக்குள் கேள்விகேட்டு குடையும்! அவரைப் போல நானும் இருக்கவேண்டும் என்பதே விடையாக அமைந்தது!
நேசம் மாஸ்டர் அன்பாளன் மட்டுமல்ல ஒரு நல்ல பண்பாளன்! அவர் கோபப்படுவது சுனாமி நடக்கிரமாதிரி! எப்போதாவது வரும். வந்தால் வந்ததுபோலத்தான். அவர் நல்ல கலைஞன்! நல்ல நடிகர்! ஒரு நல்ல நாடக இயக்குனரும் கதை ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இப்படி பன்முகம் கொண்ட ஆளுமைகொண்ட ஒரு எளிமையான மனிதர் எம் ஊரில் வாழ்வதையிட்டு நாம் சந்தோசப்படாமல் இருக்கமுடியுமா! நீங்களே சொல்லுங்களேன்!
தொடரும் நினவுச்சுழிகளோடு பேசாலைதாஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...
Ingen kommentarer:
Legg inn en kommentar