பேசாலைக்கிராமத்தில் புகழ்பூத்த பெரும்மக்களில் உயர்திரு எலியாஸ் பீரிஸ் அவர்களும் ஒருவராவார். இவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் கமலஹாசனின் நாயகன் திரைப்படம் என் நினைவில் தொத்திக்கொள்ளும். காதிலே கடுக்கன் தொங்கும் குடும்மி கட்டியிருப்பார் வெற்றிலை சிலவேளை புகையிலை மென்றுகொண்டிருப்பார். நூறுவயது எட்டியபோதும் கூட அவர் மூக்கு கண்ணாடி பாவித்ததாக நான் அறியேன். வெள்ளை ஜிப்பாய் வெள்ளை வேட்டி எப்போதும் அணிந்திருப்பார். அதிகம் படித்திராத ஒருமனிதர் ஆனாலும் மன்னார் அரசாங்க அதிபர் தொடக்கம் பொலிஸ் இராணுவ உயர் அதிகாரிகள் இவரைக்காண்டால் எழுந்து நின்றுமரியாதை செய்ததை நான் பார்த்திருக்கி ன்றேன். பேசாலைமக்களினால் தந்தை என்று அன்புசெய்யப்பட்டவர் இவரது இறுதி ஊர்வலத்தில் தாயகத்தந்தைக்கு அன்பு அஞ்சலி என்று ஊர்மக்களினால்
எழுதப்பட்டிருந்தது. தன் மூத்தமகனை ஒரு டாக்டராக படிக்கவைத்தார். இரண்டாவது மகன் சமாதானநீதவானாகவும் மூன்றாவது மகனை தபால் மாஸ்டராகவும் இன்னொருமகனை டாக்டராகவும் உருவாக்கி சாதனை படை த்தார். என்னதான் பிள்ளைகள் படித்திருந்தாலும் தந்தையைப்போல ஊர்மக்கள் மனதில் யாருமே இடம் பிடிக்கவில்லை. நூறுவயதுக்குமேல் வாழும் பாக்கியத்தை கடவுள் இவருக்கு வழங்கினார். ஐம்பதாவது கல்யாண வைரவிழாக்கண்டவர். இப்படிப்பட்ட சகல செளபாக்கியத்தையும் வெற்றி அன்னை அவருக்கு கொடுத்தாள் அதன் காரணம் அவர் வெற்றி அன்னை மீது வைத்திருந்த அளவில்லா நேசம் ஆகும்.
நேசமுடன் பேசாலைதாஸ்
Ingen kommentarer:
Legg inn en kommentar