வின்சன் சார்ச்சிலுக்கு சுருட்டு, கவிஞர் தாகூருக்கு தாடி, ஹிட்லருக்கு மீசை, காந்திக்கு கைத்தடி எங்கள் துரம் மாஸ்டருக்கு பிரம்பு! ஆம் பிரம்பை கையாள்ளாதவன் தன் பிள்ளையை பகைக்கின்றன் என்று வேதம் சொல்கின்றது. (உபஆகமம்) எங்களையெல்லாம் தன்பிள்ளை என்று நேசித்த காரனத்தால் துரம் மாஸ்டர் கையில் பிரம்பேந்தினார். ஊரெல்லாம் தன்பிள்ளை என்றவருக்கு அவரோடு கூட வாழ ஒரு பிள்ளை இல்லை. இருந்த ஒன்றயும் கடவுள் எடுத்துக்கொண்டார். சாதாரன ஒரு பாடசாலையாக இருந்த பத்திமா படசாலை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் அது துரம் மாஸ்டரின் அயராத சேவை என்றே சொல்லமுடியும் இதில் துணையாக இருந்த ஆசிரியர்களில் திரு நேசம் மாஸ்டர், திரு முகுத்தார் மாஸ்டரும் கனிசமான பங்களிப்பு செலுத்தியுள்ளனர். சவேரியார் கல்லூரி எருக்கலம்பிட்டி என்று உயர்தர கல்விக்காக பேசாலை மாணவர்கள் படை எடுத்தபோது உத்தியோக பற்றற்ற முறையில் உயர்வகுப்பை நிறுவி அதன் மூலம் ஆசிரியை அஸம்ரா பிரீஸ் அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது பெரும் சாதனை! துள்ளித்திரியும் வயதிலே எம் துடுக்கடக்கி பள்ளியிலே பயிலவைத்த பண்பான ஆசான் அவர்! அவர் அதிபராக இருந்த காலத்திலே தமிழ்தின விழாக்கள் அனைத்திலும் எம் பாடசாலையே முதலிடம் வகிக்கும்! நாராய் நாராய் செங்கால் நாராய் நீயும் நின்,, என்ற சத்திமுற்றுப்புலவன் பாடலை இசையோடு பழக்கிய அந்த நினைவுகள் இன்னும் மனதில் அசைபோடுகின்றது. சுடுமணல் நிரம்பிய மத்திய மைதானத்தை ஊராரின் சிரமதானப்பணி மூலம் களிமண் நிரப்பிய அந்த குதுகல நாள் இப்ப கூட மனசுக்குள் மத்தாப்புபோல இருக்கின்றது. கணக்கிலே புலி! ஏன் தமிழ் இலக்கியத்திலும் இசையிலும் அவர் வல்லவர். ஒருமுறை மணிமாஸ்டர் என்ற விடத்தல்தீவு மாஸ்டர் மாற்றலாகிப்போன சமயம் அவருக்கு பிரியவிடைவைபத்திற்காக மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா என்ற சினிமாபாடாலை மணிவண்ணன் மாஸ்டருக்கு மாற்றி அமைத்த சம்பவம் மறக்கமுடியுமா?
அன்னாரின் பெயர் சொல்லாத பிள்ளைகள் இல்லை ஆனாலும் அவருடைய பெயர் கொள்ள ஒரு பிள்ளை இல்லை! இருந்தபோதும் அவர் எங்கள் அன்பு அறிவுலக அப்பாவாக என்றுமே எங்கள் மனதில் இருக்கின்றார்.
Ingen kommentarer:
Legg inn en kommentar