இந்த செய்யுள் என் சிந்தையில் வரும் பொழுதெல்லாம், எனது பெசாலை மாகாவித்தியாலைய நினைவுகள் கூடவே தொற்றிக்கொள்ளும். அப்பொழுதெல்லாம் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே முத்தமிழ் விழா போட்டி நடை பெறும் . இயல் இசை நாடகம் என்று இந்த போட்டிகள் நடக்கும். எனது மகாவித்தியாலயம் இயல், இசை, நாடகம் எல்லாவற்றிலும் வெற்றிகளை குவிக்கும். அந்த வெற்றிகளைக்குவிக்க அரும்பாடுவார் எங்கள் அறிவுத்தந்தை துரம் மாஸ்டர் அவர்கள். பேச்சு போட்டிகளுக்கு மிரியம், வினி, செல்வா, நான் அதிகமாக கலந்து கொள்வதுண்டு. இசைப்போட்டிக்கு வேலுச்சாமி அதிகமாக கலந்து கொள்வார். இனியது கேட்பின் என்ற அவ்வையாஅரின் பாடலும், நாராய் நாராய் செங்கால் நாராய் என்ற செய்யுளையும் துரம் மாஸ்டர் பண்ணிசைத்து பாடுவது இன்னமும் என் நினைவுச்சுழில் வந்து போகின்றதே! இனி செய்யுளை வாசியுங்கள். நான் பொழிப்பு சொல்லவேண்டிய அவசியம் இல்லை
‘’நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே’’
வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து தன்னுடைய நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் எடுத்துக் கூறியதை, நகர சோதனைக்காக அவ்வழியே சென்ற பாண்டிய அரசன் கேட்டு, இவர் மீது இரக்கம் கொண்டுதான் அணிந்திருந்த சால்வையை அவர் மீது போர்த்திச் சென்றான்.. மறு நாள் காவலாளிகளை அழைத்து, புலவரைத் தேடிக் கண்டு பிடித்து, அவரை வருத்தாது கொண்டுவரும்படி ஆணையிட்டான்.. அவைக்குவந்த புலவரை அரசன் வெகுமதி அளித்துக் கௌரவித்தான் அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:
Legg inn en kommentar