5 hrs ·
ஊரைச்சுத்தி ஓடிப்பாருபேசாலை கொடி ஏறுது பாருவெற்றியன்னை துணையிருக்க வாழ்க்கையில சுமை பறக்க ஊரச் சுத்தி ஓடிப் பாருபேசாலை கொடி ஏறுது பாரு!
இலுப்பையடி கடக்கையில வருக வென கரம் குவியும்கனிவுடனே வரவேற்பு மாதா துணையுடனே உளம் குளிரும்!
பத்திமாவின் கலைக் கடலில் கல்வி எனும் பயிர் வளரும்அன்னை மரி துணையுடனே நம் பிள்ளைகள் என்னும் தளிர் அதில் துளிரும்!
கிட்டிபுள்ளு ஆடித்திரிந்த நடுத்தெருவும் தார் ரோடா ஆச்சுதம்மா மெயின் ரோட்டு தார் குழியில் பள்ளாங்குழி பறக்குதம்மா!
ரேசர் வண்டி தள்ளிய இடமெல்லாம்இரும்பு வண்டி புகை தள்ளுதம்மாபட்டம் பறக்க விட்ட இடங்களெல்லாம் கட்டடமா போச்சுதம்மா!
சிலையடியில கேட்டுபாரு சொந்தக் கதை சொல்லுதம்மா சோகக்கதை வடிச்ச இடமென்று பேசாலையில உள்ளதம்மா!
கடலன்னையும் கூட வந்துஎம் கடன் பஞ்சம் தீர்க்கு தம்மாபனைவளங்கள் உடன் இருக்க இங்கு பல வளங்கள் கொழிக்குதம்மா !
Ingen kommentarer:
Legg inn en kommentar