பங்குனி எட்டில் பதிவிடத் தவறிய பா இது.....!
இது வள்ளுவனையும் வீழ்த்திவிடும் பெண்ணதிகாரத்தின் அறக்குறள், பெண்மையை ஏற்றும் என்னதிகாரத்தின் தனிக்குறள்,
கள்ளிப்பாலின் பசிக்கெனப் பிரசவிக்கபடும் தாரகைகளே தவிக்கவேண்டாம் உமக்காக வழக்காடவே இந்தப் பேனா காகிதம் நனைக்கும்..!
கண்ணீர் வேண்டாம் உமக்காகவே இந்தச் சுதந்திரதினம் பங்குனித் திங்களில்.....!
விரட்டிவிடுங்கள் இனியும் வேண்டாம்
இவர்நியாயங்கள்.
துரத்தியடியுங்கள்
போதும் போதும் பாரதிகள்
எத்தனை முண்டாசுகள் குரல் நீட்டினும் கட்டிளமைத் தாண்டி மாதமொருமுறை இறந்து பிறக்கும் புதுமைப்பெண்களின் சுமைமாற்றி சுமக்க யார்தயார்??
வயிற்றோட்டத்திற்கே வாடிப்போகும் ஆண்வர்க்கமே, கர்வம் கொள்வாயோ!!
சகதிகள் பூசப்பட்டு நாறிக்கிடக்கும் சமுதாயத்தின் நறுமணப்பூக்களுக்கு மாலை வேண்டும், கழுத்துக்கல்ல கற்புக்கு,
துணைதர வேண்டும் தோளுக்கல்ல தொப்புள் கொடிக்கு
இந்த மஞ்சள் விலங்கினை விரும்பி ஏற்கிறாள் அல்லாடும் போது
அது விழுந்துவிடாது வருந்திக்காக்கிறாள் தள்ளாடும் போதும்
தன்னை மறக்கிறாள் ஊரான் பிள்ளை தன்கருவில் ஊரத்தொடங்க,
தூக்கம் துறக்கிறாள்
தன்மகவின் பசியோடு தாகமடங்க.....!!!
தாங்கிப் பிடிக்கிறாள் தன்னைப்பெற்றோரை,
ஏங்கித் தவிக்கிறாள் தான்பெற்றோர்க்காய். ஆறடி அறையில் தூங்கித் தொலையுமுன் தூக்கிநிறுத்தவே வீழ்ந்து எழுந்து வாழ்ந்து மாண்டும் தன்மக்கள் மார்பில் நிலைக்கிறாள் பெண்பேதை...!
உலகமன்றத்தில் ஊர்நியாயம் பேசியது போதும் வழக்காடும் எங்களுக்கு வாய்க்கரிசி இடுங்கள் தாங்கலாம்ஆனால் அவர் கற்பைக் களங்கப்படுத்த வேண்டாம்
கல்வி சுமக்கவிடுங்கள் சிறுவயதில் கலவி திணிக்க வேண்டாம் அடுத்தவன் செடியில் பூப்பறிக்கவேண்டாம்
கண்களுக்கு கருணைப்பாடமெடுங்கள் காமப் பார்வை வேண்டாம்
இந்நாளல்ல எந்நாளும்
என்னாலும் உன்னாலும் பெண்மை தாய்மை பாரினில் சிறக்க பங்குனி எட்டில் பல்லாயிரம் வாழ்த்துகள்.
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...
Ingen kommentarer:
Legg inn en kommentar