torsdag 22. februar 2018
ஆரணங்கே_நாணமோ!
ஆரணங்கே_நாணமோ!
நுனி மேவிய புனலினில் தலை சாய்ந்த
புல் போலே நாணிக் குனிந்த ஆரணங்கே
நாணலின் காரணம் யாரணங்கே
தாய் மாமனோ தனியே வந்தவனோ!
கண்ணிலே மின்னொளி
கழுத்திலே நகையொளி
முகத்திலே காதலொளி
அகத்திலே யாரொலியோ!
மார்புக் கச்சை விலகியதே
கொங்கைகளின் ஏக்கங்களில் ஏகாந்தமோ
உடுக்கை போலே சிறுத்த இடை மாமனையும் மயக்குமே
உன் அடி வருடி வந்தவனையும்
இழுக்குமே
அந்தப்புர அழகை ரசிக்க ஓராயிரம் கண்கள் போதாதே!
றோய் குருஸ் அம்புரோஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
-
நினைவில் வந்துபோகும் ஆரோக்கியசாமி துரம் (தொட்டப்பா) ஆரோக்கியசாமி துரம், இவரை தொட்டப்பா என்று ஸ்நாபக அருளப்பர் இளைஞர் மன்ற உறுப்பிணர்கள்...
-
பணங்கா வாடி கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும், புளிச்ச வாசத்தில் வண்டுருளும், வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, அருவா கத்திய துணைக்கு வச்சு...

Ingen kommentarer:
Legg inn en kommentar