என் அன்பு சின்ன மாணவர்களே!
பெற்றோர்களே! இன்று கல்வி பொது தராதர சாதாரண பரீட்டை பெறுபேறுகள் வெளியாகி யுள்ளன. ஒரு சில மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் குது கலிக்கக் கூடும். முதலில் அவர்களை வாழ்த்துவோம், அவர்க ளின் சந்தோசத்தில் பங்குகொள்வோம். அதேவேளை எங்களு டைய பிள்ளைகள் அதி திறமையாக சித்தியடையவில்லையே என்ற கவலையை விட்டுத்தள்ளுங்கள்: உண்மையில் மாணவர்க ளின் ஆய்ந்து அறியும் அறிவுத்திறன். அவர்களின் ஆளுமை, படைப்பாற்றலை இவைகளை வெளிப்படுத்துவது, இந்த பரீ ட்சைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் மாணவர்களின் அறிவு, உளவளம் இவைகளை எடை போட பரீட்சை ஒன்றைத்தவிர, வேறு ஒரு உத்தியும், செய்முறையும், இலங்கை கல்வி திணைக்களம் இன்னும் அறியாது உள்ளது. அப்படி அறிந்திருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்தும் பொருளாதார வசதிகள் இலங்கைக்கு இல்லை. பின்லாந்து நாட்டில் ஏன் நோர்வே நாட்டிலும் கூட, பிள்ளைகளின் திறமை களை அறிந்து கொள்ள, அந்த நாட்டின் கல்வித்திணைக்களம் பரீட்சைகளை நாடுவதில்லை. West Minister Education System பிரித்தா னிய கல்வி முறையை இன்றும் ஸ்ரீ லங்கா கடைப்பிடித்து வருகி ன்றது. அந்த பரீட்சை முறை,பல குறைபாடுகளை கொண்டு ள்ளது. மூன்று மணித்தியாலயத்தில் திணிக்கப்பட்ட விடய ங்களை மீண்டும் கிரகித்து அப்படியே ஒப்புவிக்கும் செயல் முறையில் பரீட்சைகள் நடத்தப்படுவதால், மாணவனின் புலமை, அறிவு சார் ஆற்றல்,படைப்பு திறன், மதியூகம் எல்லாம் பரீட்சையில் வெளிப்படும் என்பது மடமைத்தனம்!
அது ஒரு புறம் இருக்க, எல்லா மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் கொடுக்கப்படு கின்றனவா என்று நோக்கும் போது அதிலும் குறைபாடுகளே தென்படுகின்றன. உண்மையில் இப்படிப்பட்ட பரீட்சைகளில்,
பாடசாலையின் தரம், ஆசிரியரின் பங்களிப்பு, அதிலும் மேலாக பெற்றோர்களின் கல்வித்தகமைகள், அவர்களின் விடாப்பிடி வாத திணித்தல் என்பன பின்புல காரணியாகின்றது. என்னை பொறுத்தவரை, கல்வி அறிவற்ற, ஏழை குடும்பத்தை பின்னணி யாக கொண்ட ஒரு மாணவன் குறைந்த பட்சம் இரண்டு ஏ பெறு பேறு எடுத்தால் அதுவே மாபெரும் வெற்றியாக கணிக்கப்படும். ஏனெனில் அந்த மாணவன் தன் சுய சொந்த ஆற்றலை கொண்டு மிளிர்கின்றான். இதற்கு என் சொந்த கல்வி அனுப வமே எனக்கு சாட்சியாக விளங்குகின்றது.
நானும் எனது அண்ணனும், விஞ்ஞான பாடம் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டோம்.
வறுமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. சராசரி பெறுபேறுக ளுடன் யாழ் பல்கலைக்கழகம் சென்றோம். அப்பொழுது புக ழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து அதி திறமையான பெறுபேறு களில் யாழ் மாணவர்கள் எங்களோடு படித்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் பின் தள்ளி, நானும் எனது அண்ணன் எட்வேட் பீரிஸ் அவர்களும் சிறப்பு நிலை ( Special B.A. Hones in Economics) and ( Special B.A. Hones in Political Science) பட்டம் பெற்றோம், அதிலும் எனது அண்ணன் என்னைவிட ஒருபடி மேலே சென்று Upper Class எடுத்தார். மூன்று ஏ க்களோடு வந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. எனவே மாணவர்களே பெற்றோர்களே பரீட்சை பெறுபேறுகளையிட்டு கவலை ப்படாமல் சுய ஆற்றலில் விருத்தி கண்டு உலகை வெல்லுங்கள் நன்றி. அன்புடன் பேசாலைதாஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...
Ingen kommentarer:
Legg inn en kommentar