சமரசம் உலாவும் இடமே!
மரணம்! மனித வாழ்வில் மிக வும் உண்மையான ஒன்று. ஆனால், எவராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று! இறந்தவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இற ந்தவர் நல்ல நிலையை அடை ந்தார் என்பதுதான். “மரணத்தி ற்குப் பின் இறந்தவர் எங்கு செல்கிறார்? மரணத்திற்குப் பின் என்ன நிகழும்?” என்கிற கேள்வி பலருக்குள்ளும் இரு க்கிறது. ஆனால், மரணம் என்பது அனைத்திற்கும் ஒரு முடிவல்ல என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இறந்தவ ர்கள் இன்னமும் இருக்கின்றார்கள், அவருடன் நமக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களை நாம் சில செயல்முறைகள் மூலம் தொட முடியும். அந்த உயிருக்கு தேவையான நன்மையை செய்ய முடியும். அன்பர்களே நோர்வே நாட்டில் சேமக்காளை அதாவது சவக்காலைகளை பார்த்தால் வியப்பாக இருக்கும். . பச்சைப் பசேலென ஒரு பூங்காவைப் போல அந்த இடம் .செழி ப்பான மரங்கள், பசுமையான சூழல், சுத்தமான நடைப்பாதை என அந்த சூழல் அங்கே ஒரு அமைதியை உருவாக்குகிறது. குறைந்தது கால்வாசி கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றப்ப ட்டிருக்கும், குறிப்பாக கார்த்திகை மாதம் முழுவதும், கிறிஸ்மஸ் தினங்களில், இறந்தவர்களோடு இன்னமும் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றோம் என்பதை நினைவுறுத்த சகல கல்லறை களிலும், உறவினர்களால் பூக்களும் மெழுகுவர்த்தியுமாக கல்ல றைகள் காட்சி தரும். ஒவ்வொரு கல்லறைகளும் நேர்த்தியாக வரிசைகிரகமாக நிறுவப்பட்டிருக்கும். அந்த கல்லறைகள சுற்றி, அழகிய மலர்ச்செடிகள் பூத்துக்குழுங்கும்! கல்லறையில் சிரித்த முகத்தோடு இருக்கும் படங்கள், ஜீவியத்தி என்னை நேசித்த இதயங்களே! மரணத்திலும் என்னை மறவாதீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சேமக்காளைக ளுக்கு செல்லும் போது மனதில் ஒரு அமைதி, இறை உணர்வுகள் பெருகுகின்றன. இந்த சேமக்காளைகள் ஆலய நிர்வாகிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன். ஆனால் எமது ஊரில் உள்ள சவக்காளையை பாருங்கள்! இடிந்து போன, மதில்கள், பாசி பட ர்ந்த கல்லறைகள், ஏழை எளிய மக்கள் என்றால் அவர்களை புதைத்த இடம் தெரியாமல் மறைந்து போகும்! பல வருடங்கள் கழித்து, ஒரு பணக்காரனுக்காக அந்த இடம் தோண்டப்படும் அதிலே அந்த பணக்காரனின் கல்லறை கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். ஒருவேளை அந்த பணக்காரன் அநியாய வட்டியில், குறு க்கு பாதையில் செலவம் சேர்த்திருக்கலாம், ஆனால் அவனு க்காக தோண்டப்பட்ட அந்த ஏழை உத்தமராய் வாழ்ந்திருக்க லாம். சமரசம் உலாவும் இடம் மாயானம் என்பார்கள். எங்கே இருக்கின்றது சமரசம்? எங்கே இருக்கின்றது இறை நீதி? அது போகட்டும் அன்பர்களே! சற்று சிந்தியுங்கள், அங்கே புதை க்கப்படிருப்பது யார்? உன் அப்பா, அம்மா உன்னை நேசித்தவ ர்கள். நீ நேசித்தவர்கள் அங்கே துயிலுகின்றார்கள். ஒரு நாள் நீயும் நானும் அங்கே போகப்போகின்றோம். அந்த அறுவறு ப்பான, அலங்கோலமான இடத்திலா நீயும் போய் நிரந்தரமாக படுக்கப்போகின்றாய்? சிந்தித்துப்பாருங்கள்! ஊரின் பெரு மையை பறை சாற்ற, பல இலட்சம் செலவழித்து பாஸ் காட்டு வதில், முனைப்பாக இருக்கும், ஆலைய நிவாகிகள், ஊர்மக்கள் எமது இறுதி வீடான, நிறந்தர தூங்கும் இடமான சவக்காலையை புணரமைத்து, அழகுபடுத்தி, வாழ்வின் மறுவாழ்வின் அர்த்த ங்களை புரிந்து கொள்வோமா? அன்புடன் பேசாலைதாஸ்
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...
Ingen kommentarer:
Legg inn en kommentar