fredag 20. oktober 2017

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

டிக் டிக் டிக் என்று கையும் ,டக் டக் டக் என்று இதயமும்,,,,,,,,,,,

உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்திரு இம்மனுவேல் அடிகளாரின் இலங்கை விஜயம் குறித்து தமிழ் மக்களிடையே கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எனது பதிவை இங்கே எழுதுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் கடுமையன போர் நடந்து கொண்டிருக்கின்றது, மே 18 திகதி பிரபாகன் இறந்துவிட்ட அரசு செய்தியுடன் போர் முடிவுக்கு வருகின்றது அதற்கு முன்னைய நாள் நோர்வேயின் தேசிய நாள் மே 17, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பிரமாண்டமான பேரணி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது, அதற்கு உரையாற்ற அருட்தந்தை அவர்கள் ஓஸ்லோ வந்திருந்தார். அவரோடு அன்று போராட்ட நிகழ்வுகள் குறித்து நீண்ட நேரம் அவரோடு உரையாடினேன். அப்போது அருட்தந்தையின் உணர்வுகளை என்னால் துள்ளியமாக எடைபோட முடிந்தது. தேசியதலைவரின் கணிப்புக்கும், அவரின் மரியாதைக்கும் இன்றும் என்றும் அருட்தந்தை அவர்கள் உரித்தானவர் தான். அருட்தந்தை அவர்களை இலங்கை நாட்டுக்கு விஜயம் செய்வதை இலங்கை அரசு தடை செய்தது, ஏன் இந்தியா கூட அவரின் இந்திய விஜயத்தில் குறுக்கிட்டது.  இப்படிப்பட்ட ஒருவர் இன்று கொழும்பில் இலங்கை அரசு மற்றும் அமெரிக்க தூதுவர்களோடு கைகுலுக்கி  பேசுகின்றார் என்றால் இதன் பிற்புலத்தில் ஏதோ ஒரு நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்பது மட்டும் உறுதியாகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், சிங்கள பெளத்த மத பிரிவேனாக்களின் ஆதரவோடு தான் இலங்கை அரசாங்கம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இலங்கையின் தேசியவாத உணர்வு, மாகாவம்ச போதனையுடன் சிங்கள இனவெறியாக உருமாற்றப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் என்ற தேசிய உணர்வு எவரிடமும் இல்லை அது வளர்த்து எடுக்கப்படவும் இல்லை. பெளத்த மத தலைவர்களை எதிர்த்து, இலங்கையின் தேசிய நலனை முன்னெடுக்க எவரும் துணியவில்லை அதற்கான ஆளுமையும் அருகதையும் சிங்கள அரசியல்வாதிகளிட‌ம் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டுமென்றால் அது சிங்கள பெளத்த மத பீடத்தின் மனமாற்றதிலும், சிங்கள மக்கள் மீது ஏற்படும் ஒற்றுமை விழிப்புணர்விலுமே தங்கியுள்ளது.  ஆயுத போராட்டம் தமிழ் மக்களிடம் சிங்கள அரசினால் திணிக்கப்பட்டது என்ற மாபெரும் உண்மையை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும். அதுமட்டுமல்ல, போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய குற்றச்செயல்கள் இழைக்கப்பட்டுள்ளன அதன் விழைவாக தமிழ் மக்கள் கடுந்துயர் அடைந்த கதை சிங்கள மக்களின் காதுகளுக்கு சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. போர்குற்றம் பற்றிய விழிப்புணர்வு சிங்கள மக்களிடையே விதைக்கப்படவேண்டும் என்று அருட்தந்தை கொழும்பில் கூறியதை இங்கு மீண்டும் கோடிட்டு காட்டவிரும்புகின்றேன். சிங்கள மதபீடத்தின் கடும் போக்கில் இருந்து அது இறங்கிவரவேண்டும் அவ்வாறு வருவதன் ஊடாகவே இனப்பிரச்சினை தீர்வில் காத்திரமான முன் எடுப்புகள் சத்தியமாகும். கடும் போக்கில் இருந்து பெளத்த மதபீடம் இறங்கி வரவேண்டுமானல் அதற்கான சமிஞ்சைகளை தமிழ் தரப்பிலும் முன்னெடுக்கப்படவேண்டும்.அந்த வகையில் தமிழ் இனப்பிரச்சனையில் கத்தோலிக்க கிறிஸ்தவ அருட்குருக்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.அருட்திரு இம்மானுவேல் அடிகளார் முன்னோடியாக இருப்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு இருக்கையில், தமிழ் தரப்பு சாதாகமாக மத தலைவர்கள் சற்று இறங்கிவந்து நல்லெண்ண சமிக்ஞைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது, அதனையே சர்வ தேச‌ சமூகமும் எதிர்பார்க்கின்றது. அதனை கருத்தில் கொண்டு அருட்குருவானவருக்கு  கத்தோலிக்க உயர் பிடமான வத்திக்கான் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழ் ஊடகங்கள் உணர்ந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியாகவுள்ளது. மற்றப்படி தேசியதலைவரின் கடிகாரம் அருட்குரு இம்மானுவேல் அவர்களின் இடது கையில் டிக் டிக் டிக் என்று அடிதுக்கொண்டுதான் இருக்கிறது, கூடவே அவரின் இதயமும் டக் டக் டக் என்று தமிழுக்காகா அடித்துக்கொண்டுதான் இருக்கின்றது அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...