அன்பர்களே பேசாலை கிராமத்தை துறை முக நகரமாக்கல் பற்றிய க்ருத்து பரிமாற்றம் பரவலாக இடம் பெறுகி ன்ற இவ்வேளையில் சில அம்சங்களை நாம் நினைவில் கொள்ளவேண் டும்! தமி ழர் பாரம்பரிய நிலங்களில் பொருளாதர அபிவிருத்தியை முன் னெடுக்கின்றோம், அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடவடி க்கை என்ற பெயரில் அவசர அவசரமாக பல திட்டங்களை அரசு செய்ய முற்படுவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இனவாத அரசுகள் ஒருபோதும் எண்ணி யது கிடையாது, மாறாக சுயசார்பு பொருளாதாரத்தில் இருந்து, தன்னில் முற்றுமுழுவதுமாக தங்கி இருக்க செய்யும் திட்டஙளையே முன்னெடுக் கின்றது, அதற்குள் சிங்கள குடியேற்றம், பெளத்த மத நிலநாட்டல் இடம் பெறுகின்றது. குறிபாக மாகாவலி அபிவிருத்தி நல்லதோர்பாடம், தற்போதும் ம்காவலி எல் திட்டம் வன்னியில் அமுலாகப்பட்டு, வன்னி நிலம் பறிபோகின்றது.
இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்பு பேசாலையில் டின் மீன் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, ஆசியா விலே பிரமாண்டமான தொழில்சாலை அது, அதற்கு என்ன நடந்தது? பேசாலையில் எண்ணெய்வளம் இருப்பதாக தெரிந்து கொண்டும், அதற்கான வேலைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? அதற்கான முழு குத்தகையும் ஆள்புல அதிகாரத்தையும் இந்தியா கோரிநிற்கின்றது. முதலில் புலிகளை அழிக்க உதவுங்கள், பின்னர் எண்ணெய் பற்றி சிந்தி க்கலாம் என்று சொன்ன இலங்கை, இன்று இந்தியாவை ஏமாற்றுகின் றது. தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், அதுவும் முடியாது, இந்தியாவே பாலம் அமைத்து தர முன் வந்த பொழுதும், இலங்கை பின் வாங்குகின்றது, காரனம் அது தமிழர்க ளின் குறிப்பாக மன்னார் தீவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் என்ற நோக்கம்!
பேசாலையில் பாரிய துறைமுகம் அமைக்கும் அவசியம் என்ன? பேசாலை மக்களின் மீது அரசு கண்ட அக் கறையா? சரியாக சிந்தியுங்கள், பேசாலை கிராமம் தீவின் நட்ட நடுவே இருக்கின்றது, பேசாலை கடல்கரையில் ஒரு தளம் அமைத்தால், அதன் உதவியினால், மன்னார் வளைகுடாவை, தன் கண்காணிப்புக்குள் கொண்டுவரமுடியும், இரணை தீவு, பாலைதீவு, கச்சைதீவு நெடுந்தீவு போன்ற பல தீவுகளை கண்காணிக்கமுடியும்.. நமக்கு நன்றாக தெரியும் மன்னார் வளைகுடாவுக்குள் தரித்து நிற்கும், கடற்படைக்களம், வாடை காற்று பருவத்தில், தரித்து நிற்க முடியாது, கடற்படைகளம் யாவும் பாக்கு நீரிணையை ஊடறுத்து, இலங்கையை வலம் வந்துதான், நடுக் குடாவுக்கு செல்லமுடியும். பேசாலையில் பாரிய வீதியுடன், துறைமுகம் அமைத்துவிட்டால் எல்லாமே இலகுவாக இருக்கும், இதனை புலிகளு டனான யுத்தத்தில் இலங்க கடற்படை நன்றக உணர்ந்திருந்தது எனவே பேசாலை துறைமுகம் என்ற போர்வையில், கடற்படைத்தளத்தை விரிவா க்கும் உள்னோக்கம் இருக்கின்றது எனது ஊகம்!
உண்மையில் இதய சுத்தியோடு தமிழர்களின் பொருளாதர மற்றும் நலனில் அக்கறை கொண்டிருக்குமா னால, மன்னார் ஆதார வைத்தியசாலையை தரம் உயர்த்த சொல்லுங் கள், மன்னார் மாவட்டத்தில் பொறியியல், தொழில் நுடப் கல்லூரிகளை நிறுவ சொல்லுங்கள், மன்னார் மாவட்டத்தில், நாலந்த றோயல் கல்லூ ரிகளின் தரத்துக்கு ஒப்ப,ஆங்கிலமொழி போதனையுடன் கூடிய, கல்லூ ரிகளை நிறுவச்சொல்லுங்கள், உள்ளூர் கிராமிய பொருளாதாரத்தை ஊக்குவிக்க, விவசாய கடன்கள் , மாடு ஆடு கோழிவளர்ப்புக்கு உதவி செய்ய சொல்லுங்கள், இவைகள் தான் உண்மையில் ஏழை மக்களின் பொருளாதரம், இலங்கை பொருளாதாரத்தை மேன்மை அடையச் செய்யும். இது எதனையும் இனவாத அரசு செய்யமுன்வராது என்பது உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் துறை முகம் என்ற பொய்முகத்துக்கு இடம் கொடுத்தால் உங்கள் இருப்பை, உங்கள் அழிவை நீங்களே தேடிக்கொள்கின்றீர்கள். அன்புடன் பேசாலைதாஸ்
Ingen kommentarer:
Legg inn en kommentar