கோயில் பூனை தேவனை மதியாது என்பது ஒரு தமிழ் முதுமொழி ஆனால் அந்த முதுமொழியை தன் அர்ப்பண வாழ்வில் பொய்யாக்கியவர் திரு. அம்புறோஸ் குலாஸ் அவர்கள். அவரது தெய்வபக்தியும் சேவைமனப் பான்மை யும் இதற்கு சான்று. இன்று அவர் தனது நாற்
பது வருட ஆலையப்பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவரது பணியை பற்றிய ஒரு மீளபார்வையை இந்தவேளையில் எழுதுவது சாலப்பொருந்தும் என்று என் சிறுமதி எனக்கு சொல்கின்றது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு கோயில் பீடப்பரிசாரகச் சிறுவனாக இருந்திருக்கின்றேன். நேரம் தப்பினாலும் மூவேளையிலும் எமது ஆலைய திரு ந்தாதி மணி, தவறியதே இல்லை. எமது ஆலைய மணியை தொங்கி தொங்கி இழுத்தடிப்பது சிறுவராகிய எங்களுக்கு அலாதியான ஒரு அனுபவமும் சந்தோசமும் எப்போதும் நிறைந்தே இருக்கும். இதற்காகவே அம்புறோஸ் ஐயாவை என்போன்ற சிறுவர்கள் சதா சுற்றி சுற்றி வருவார்கள்..தவ க்காலம் அதுவும் பெரிய கிழமை, வியாழனில் இருந்து சனி சாமம்பூசையில் வரை, ஆலய மணி ஒலிக்காது அதற்கு பதி லாக கிறில் அடிப்பது வழக்கம். அந்த கிறில் சுழற்றியை ஊருக்குள் கொண்டு சென்று அடிப்பதில் இருக்கும் ஆனந்தம் அப்பப்பா சொல்லவே முடியாது அதை நினைத்தால் கூட இப்போது எதையோ தொலைத்துவிட்ட ஒரு நெருடல் மனதுக்குள்ளே! அந்த கிறில் சுழற்றிகளை அப்புறோஸ் ஐயா நன்றாக எண்ணை தடவிவைத்திருப்பார், விதவிதமான அந்த கிறில்களை கைப்பற்றிக்கொள்வதில் சிறுவர்களாகிய எங்களு க்குள் சண்டைகள் மூளும் அதனை அம்புறோஸ் ஐயா, இலாவ கமாக கையாண்டு தீர்த்துவைப்பார்.
பாலன் குடில் அமைப்பதில் அம்புறோஸ் ஐயா அவர்களின் ரசனை இப்போதும் மனதில் நிழலாடுகின்றது. அம்புறோஸ் ஐயா சிறந்த நாடக இயக்குணர் அவரின் சில நாடகங்களை நான் இப்போது கூட நினைத்துப்பார்ப துண்டு. சுமதி என் சுந்தரி, மனக்கோயில் உனக்காக என்பன இவ ரது சிறந்த சமூக நாடகங்கள்.. இவர் ஒரு நாடக இயக்குணர் மட்டுமல்ல ஒரு சிறந்த விறு
விறுப்பான அறிவிப்பாளரும் கூட அவரது அறிவிப்பு பாணியை இப்போது நான் கூட கையாள்வது ண்டு. சிலவருடங்களுக்கு முன்னர் பேசாலையில் கலைஞர்களை பாராட்ட, வாழும் போது வாழ்த்துவோம் என்ற நிகழ்சியை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த நிகழ்விலே அம்புறோஸ் ஐயா அவர்கள் கெளவுரவப்படுத்தப்பட்டார். இன்றும் அவர் கெளரவிக்கப்படும் போது சந்தோசம் அடைகின்றேன்.
அன்புடன் பேசாலைதாஸ்
Ingen kommentarer:
Legg inn en kommentar