என் வாழ்த்துக்களும் மரியாதையும் எப்போதும் உண்டு.
lørdag 31. mars 2012
கலாபூஷணம் ஆசிரியர் எஸ் ஏ மிராண்டா
கள்ளுக்கடை பற்றி எங்கள் ஊரில் எல்லோருக்கும் தெரியும். அது என்ன கலாபூஷணம்? எங்கள் ஊர் ஆசிரியர் மிராண்டா மாஸ்டருக்கு இலங்கை அதிபரின் அனுமதியுடன் கலாச்சார திணக்களம் வழங்கிய பரிசே கலாபூஷணம் என்ற விருது.இது எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. உண்மையில் இனி ஆசிரியர் மிராண்டா அவர்களை கலாபூஷணம் மிராண்டா மாஸ்டர் என்றுதான் விழித்துக்கூறவேண்டும். இந்தப்பரிசால் பேசாலைக்கிராமத்தைப்பற்றி இலங்கையில் உள்ள அத்தனை தமிழ் கிராமங்களும் தமிழ் கலை ஆர்வலர்களும் புருவம் உயர்த்திப்பார்த்தனர்! அந்தப்பெருமையை தந்த கலாபூஷணம் மிராண்டா மாஸ்டருக்கு எங்கள் ஊர் மிகவும் கடமைப்பட்டு இருக்கின்றது. கலாபூஷணம் மிராண்டா மாஸ்டர் ஆங்கிலப்புலமை பெற்றவர் அத்தோடு கூட லத்தின் மொழியிலும் பரிட்ச்சயம் உள்ளவர். இசையில் ஆர்வம் மிக்க இவர் பல நாட்டுக்கூத்துக்களை நவீனமயப்படுத்தி அரங்கேற்றியுள்ளார். பாஞ்சாலி சபதம் என்ற நவீன நாட்டுக்கூத்து இன்னும் என் மனதைவிட்டு அகலவேயில்லை. அதில் சகுனியாக டெனிஸ் லெம்பேட் அற்புதமாக நடித்தார். லீயோ குருஸ் துரியோதனாக, பத்தி துரம் அர்ச்சுனனாக, சிலுவை பீரிஸ் தருமனாக நடித்து அசரவைத்தது இன்னும் நினைவில் உண்டு. கலாபூஷணம் மிராண்டா மாஸ்டர் அவர்கள் ஒரு ஓவியக்கலைஞரும் ஆவார். எங்கள் ஊர் வெற்றி அன்னையின் ஆலையத்தில் அழகுமிக்க சிம்மாசன உப்பரிகையைப்பார்த்து மிரளாதவர் எவரும் இல்லை. அந்த அழகுமிக்க சிம்மாசனத்திற்கு வர்ணத்தால் உயிர்கொடுத்தவர் கலாபூஷணம் மிராண்டா மாஸ்டர் அவர்களே! அதுமட்டுமல்ல என் நினைவில் சாதா சஞ்சரிக்கும் என் அன்னை வெற்றி அன்னையின் திருச்சுரூபத்திற்கு வர்ணக்கலவையால் வடிவூட்டியவரும் இவரே! இவர் தனது நாடகங்களுக்கு ஏன் எங்கள் ஊர் வாசாப்புக்களுக்கெல்லாம் ஒப்பனை செய்பவரும் இவரே! கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் எங்கள் ஊர் பாடசாலையில் அதிபராக இருந்தபோது பாடசாலை மிக முன்னேற்றப்பாதையில் சென்றதை மறுதலிக்க முடியாது. அற்புதமான கலை ஆசானுக்கு
என் வாழ்த்துக்களும் மரியாதையும் எப்போதும் உண்டு.
என் வாழ்த்துக்களும் மரியாதையும் எப்போதும் உண்டு.
Abonner på:
Legg inn kommentarer (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...
Ingen kommentarer:
Legg inn en kommentar