சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு பகன்றார். சிறுவர்கள் மட்டில், அவர்களது வாழ்வு பற்றி, சமூகத்தில் அவர்களுக்கான அக்கறை குறித்து, இயேசு தமது போதனைகளில் அழுத் தமாக கூறியுள்ளதை, வேதத்தில் பலஇடங்களில், நாம் காணக்கூடியதாக உள்ளது. இயேசு காட்டிய அக்கறையை போல, நமது பங்கிலும், திருப்பாலக சபை ஊடாக சிறுவர்களின் ஆன்மீக வாழ்வில் அக்கறை காட்டுவது குறித்து
நாம் சந்தோசப்படவேண்டும். இதற்காக அயராது பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்! அன்பின் பேசாலைதாஸ்
Our Pesalai
torsdag 16. februar 2023
søndag 2. februar 2020
பேசாலை வெற்றி அன்னையின், தவப்புதல்வனுக்கு அகவை எழுபது
பேசாலை வெற்றி அன்னையின்,
தவப்புதல்வனுக்கு அகவை எழுபது
எப்படியோ எழுபதும் எட்டிப்பார்த்தது,
இன்னும் ஒரு எழுபது வரட்டுமே
என்று எண்ணங்கள்
எதிர்பார்த்து ஏங்குகின்றது,
எண்ணிலா வரங்கள் பெற்றாலும்,
என் வெற்றி அன்னைக்கு ,
தவப்புதல்வனாகும் வரம் பெற்றது
நீண்ட வேள்விக்கு கிடைத்த பதில்!
தாய்க்கு தலைமகனே,
எம் பேசாலையம்பதியின்
தவப்புதல்வனே
உம் பணி சிறக்க ஊரார் கூடி,
வாழ்த்துகின்றோம்
வாழி வாழி வாழி என்று,,,,,,,
அன்புடன்
தவப்புதல்வனுக்கு அகவை எழுபது
எப்படியோ எழுபதும் எட்டிப்பார்த்தது,
இன்னும் ஒரு எழுபது வரட்டுமே
என்று எண்ணங்கள்
எதிர்பார்த்து ஏங்குகின்றது,
எண்ணிலா வரங்கள் பெற்றாலும்,
என் வெற்றி அன்னைக்கு ,
தவப்புதல்வனாகும் வரம் பெற்றது
நீண்ட வேள்விக்கு கிடைத்த பதில்!
தாய்க்கு தலைமகனே,
எம் பேசாலையம்பதியின்
தவப்புதல்வனே
உம் பணி சிறக்க ஊரார் கூடி,
வாழ்த்துகின்றோம்
வாழி வாழி வாழி என்று,,,,,,,
அன்புடன்
பேசாலைதாஸ்
பேசாலை பாத்திமா மகா வித்தியாலய வருடாந்த இல்லப்போட்டி நிகழ்வுகள் 2020
பேசாலை பாத்திமா மகா வித்தியாலய வருடாந்த இல்லப்போட்டி நிகழ்வுகள் 2020
mandag 6. januar 2020
torsdag 26. desember 2019
திருக்குடும்ப கன்னியர் சபையின் மூன்று அருட்சகோதரிகளின் நித்திய அர்ப்பணம்
திருக்குடும்ப கன்னியர் சபையின் மூன்று அருட்சகோதரிகளின் நித்திய அர்ப்பணம்
(செய்தியாளர்) 21.12.2019
கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த திருக்குடும்ப கன்னியர் சபையினரின் மூன்று அருட்சகோதரிகள் தங்கள் நித்திய அர்ப்பணத்தை வழங்கினர்
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் மன்னார் மறைமாவட்டகுரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியின்போது திருக்குடும்ப கன்னியர் சபையின் மாகாண தலைவி அருட்சகோதரி தியோபின் குரூஸ் முன்னிலையில்
அருட்சகோதரிகளான வலைப்பாட்டைச் சார்ந்த அருட்சகோதரி மேரி கிறிஸ்ரின் நிகோலன், பேசாலை சிறுத்தோப்பைச் சார்ந்த அருட்சகோதரி டிவானா மரியதாஸ், பேசாலையைச் சேர்ந்த அருட்சகோதரி லபோரா மேரி சேவியர் குரூஸ் ஆகியோரே தங்கள் நித்திய அர்ப்பண வாக்குத்தத்தத்தை வழங்கினர்
இவ் நிகழ்வில் ஓரிரு பரிசுத்த சடங்கு முறைகளும் கெளரவ நிகழ்வும்.
(வாஸ் கூஞ்ஞ)
torsdag 19. desember 2019
கடல்கடந்து வாழும் எம் பேசாலை உறவுகளே
கடல்கடந்து வாழும் எம் பேசாலை உறவுகளே சென்ற எடடாம் திகதி எமது பேசாலை பங்கின் திருவிழாவை பிரான்ஸ் மூழ்கவுஸ் நகரில் ஒன்றாக கூடி, அருட் குரு Jude Kulas அவர்களின் தலைமையில் திருப்பலி நிறைவேற்றி, பின்னர் மண்டபம் ஒன்றிலே எல்லோரும் கூடி விருந்துண்டு மகிழ்ந்தனர், ஜெர்மன் நோர்வே பாரிஸ் இப்படி பல நாடுகளில் பலர் கலந்து கொண்டனர், அந்த விழாவிலே கடல் கடந்து ஐரோப்பிய கண்டத்தில் வாழும் எம் உறவுகள் வருடம் தோறும் ஒன்று கூடி அன்னைக்கு விழா எடுத்து மகிழவும் ஒரு அமைப்பாக உருவாக்கி எம் ஊரின் வளர்ச்சிக்கு பங்களிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து,
அந்த தீர்மானத்திற்கு அமைவாக திரு மரியதாஸ் பீரிஸ் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டது அவருக்கு உதவியாக திருமதி மெற்றில் விமல் குருஸ் அவர்களும் திரு அன்ரன் சிறி சேனா அவர்களும் நியமிக்கப்பட்டார்கள் இங்கிலாந்து ஒருங்கிணைப்பாளராக திரு, கில்மன் அவர்களும், ஜெர்மன் ஒருங்கிணைப்பாளராக திரு தியோபிளாஸ் குலாஸ் அவர்களும், நோர்வே மற்றும் இதர நாடுகளின் ஒருங்கிணைப்பாளராக திரு பேசாலைதாஸ் அவர்களும், பாரிஸ் ஒருங்கிணைப்பாளராக திரு Boco Frenando அவர்கள் தெரிவு நியமிக்கப்பட்டார் அவர் அப்பொறுப்பினை திரு Nevil Fernado வசம் ஒப்படைத்தார்
இந்த அமைப்பின் ஊடாக எமது பேசாலை நகரில் வரவேற்பு வளைவு கட்டிடவேண்டும் என திரு தியோபிளாஸ் அவர்கள் ஒரு திடடத்தை முன்வைத்தார் அது ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது , குடும்பங்கள் வருட சந்தாவாக 1௦௦ யூரோ செலுத்துவதாகவும் முடிவானது மேற்படி வரவேற்பு வளவு கட்டுவதற்காக எமது பங்கு குருவை அணுகியவேளை அந்த திடடம் நிறைவேற்றுவது கடினம் என்றும், திருக்கேதீஸ்வர வளவு சம்பந்தமாக வழக்கு நடைபெறுவதால் அந்த திடத்தை நிறைவேற்ற முடியாது என தெரிவித்ததோடு , பேசாலை ஆலைய வளவில் அமையும் செபமாலை கடை கட்டிடத்தை வின்சன் டிபோல் சபை பொறுப்பெடுத்து அதை கட்டி அதனால் வரும் வருமானத்தை ஏழை மக்களுக்கு கொடுக்கும் முயற்சசியில் இறங்கியுள்ளனர் எனவே அந்த கட்டிடத்தை கடல்கடந்து வாழும் உறவுகளில் பெயரில் காட்டிக்கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார் கட்டிடத்திற்கு கடல்கடந்து வாழும் உறவுகளின் கட்டிடம் என்று பெயரிடப்படுவதுடன், கட்டிட வளர்சசிக்கு உதவியவர்கள் பெயரும் பொறிக்கப்படும் எனவும் பங்கு குரு அவர்கள் எடுத்துரைத்தார்.
இது சம்பந்தமாக உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளோம் எமது முயற்சிக்கு ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்। எமது அமைப்பில் நீங்களும் இணைந்து செயல்பட விரும்பினால் விரைந்து செயல்பட அழைக்கின்றோம் இங்கிலாந்து நாட்டில் வாழும் உறவுகள் திரு கில்மன் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம் பாரிஸில் உள்ள உறவுகள் திரு நெவில் பருனந்து அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் நோர்வே மற்றும் இதர நாடுகளில் உள்ளவர்கள் திரு பேசாலைதாஸ் ( தேவதாஸ் பீரிஸ்) அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் , நன்றி
lørdag 16. februar 2019
காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் –
காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை
மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழு வில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய் மொழி மூலம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர் பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த சிலர், வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட் டுள்ளாக தெரிவித்து அச்சுறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உயிர் ஆபத்து காணப்படுவதாகவும் எனவே தங்களுக் குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தறுமாறு கோரி குறித்த முறைப் பாட்டை மேற்கொண்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு பேசாலை பாடசா லைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்னின் கணவன் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.

Abonner på:
Innlegg (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...