தவப்புதல்வனுக்கு அகவை எழுபது
எப்படியோ எழுபதும் எட்டிப்பார்த்தது,
இன்னும் ஒரு எழுபது வரட்டுமே
என்று எண்ணங்கள்
எதிர்பார்த்து ஏங்குகின்றது,
எண்ணிலா வரங்கள் பெற்றாலும்,
என் வெற்றி அன்னைக்கு ,
தவப்புதல்வனாகும் வரம் பெற்றது
நீண்ட வேள்விக்கு கிடைத்த பதில்!
தாய்க்கு தலைமகனே,
எம் பேசாலையம்பதியின்
தவப்புதல்வனே
உம் பணி சிறக்க ஊரார் கூடி,
வாழ்த்துகின்றோம்
வாழி வாழி வாழி என்று,,,,,,,
Ingen kommentarer:
Legg inn en kommentar