காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை
மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழு வில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த முறைப்பாடு வாய் மொழி மூலம் நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட நபரொருவரின் மனைவியான ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே, தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் காணாமலாக்கப்பட்ட விடயம் தொடர் பான வழக்கு 15ஆம் திகதி மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த சிலர், வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட் டுள்ளாக தெரிவித்து அச்சுறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் உயிர் ஆபத்து காணப்படுவதாகவும் எனவே தங்களுக் குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தறுமாறு கோரி குறித்த முறைப் பாட்டை மேற்கொண்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு பேசாலை பாடசா லைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்னின் கணவன் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.
lørdag 16. februar 2019
søndag 3. februar 2019
சுமந்திரன் சொல்லும், மன்னார் புதைகுழி அதிர்ச்சி, பேசாலை வெற்றிநாயகி ஆலையத்துக்கா?
மன்னார் புதைகுழி எச்சங்கள். அமெரிக்காவில் உள்ள புளோரிடா காபர்ன் ஆய்வு நிலையத்துக்கு, இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் தமிழருக்கு அத்ரிச்சியாக இருக்கலாம் என்ற கருத்தை, சுமந்திரன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார், அது பேசாலை மக்களு க்கா? என்ற ஒரு கோணமும், இப்போது பலரால் பேசப்படுகின்றது, ஏனெ னில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி பகுதிக்கு அண்மையில், பேசாலை வெற்றிமாதா ஆலயத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஒன்றுமுள்ளது.
சில வருடங்களின் முன்னர் அந்த கட்டிடம் அமைக்கப்பட்டது. அதற்காக நிலத்தை தோண்டியபோது, எலும்புக்கூட்
டின் எச்சம் மீட்கப்பட்டது, ஆலய கட்டிட பணியை தாமதிக்க வைக்காமலிருக்க, வேறிடத்தில் அதை புதைத்துவிட்டு, காதும்காதும் வைத்ததைபோல விசயத்தை முடித்துவிட்டு கட்டிடத்தை கட்டியதாக ஊகம் ஒன்றினை தெரிவிக்கின்றனர். இது தவறான பரப்புரை என்று பேசாலை குடிமகன் என்ற வகையில் வாதிடுகின்றேன். 1978 காலப்பகுதியில் அருட்குரு பொன்னையா அமதி, பங்குகுருவாக இருந்த போது, அந்த நிலத்தில், பேக்கரி ஒன்று இருந்தது, அதனை பேசாலை பிரபலம் ஒருவர், ஆட்சி அதிகாரத்தை காட்டி, சொந்தம் கொண்டாடினார், அந்த பேக்கரியில் எனது தகப்பானர் திரு, லோறன்ஸ் பீரிஸ் அவர்களும் சிலகாலம் குத்தகைக்கு வைத்திருந்தார், பின்னர் அவரும், குறித்த பேசாலை பிரமுகருக்கு எதிராக தன்னால் இன்ற அளவு வாதிட்டார், பின்னர் விடயம் பொன்னையா சுவாமியிடம் சென்றபோது, அவர் அதை நீதிமன்றில் வாதிட்டு, பேசாலை வெற்றி நாயகி ஆலையத்துக்கு சொந்தமாக்கினார், அப்பொழுதுதான், துரம் மாஸ்டர் தலைமயில், கட்டிட நிர்மானவேலை தொடங்கியது, அப்போது இனப்பிரச்சனை கூர்மை அடையவில்லை, பின்னர் 2010 பின்னர் அதே வெற்றிமாதா கட்டிடம், இளம் பொறியலாளரும், திரு, லோரன்ஸ் பீரிஸின் பேரனுமான திரு, கிளரன்ஸ் பீரிஸினால் மீல்புனரமைக்கப்பட்டது, இதனையே தவறாக விசமிகள், புதைகுழி விடயமாக தொடர்புபடுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. வரும் ஓரிரு நாட்களில் அந்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்து விடும். எந்தக்காலத்திற்கு உரியவை என்பது தெரிய வந்தால், அந்த காலப்பகுதியில் புதைகுழி அமைந்துள்ள பகுதி யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை ஊகிக்க முடியும்.
அடுத்த ஒருசில நாட்களில் காபன் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த புதைகுழியின் பொறுப்பாளிகள் என்ற ஊகங்களும், தகவல்களும் தீவிரம் பெற்றுள்ளன.
தற்போதைய நிலையில், நான்கு சாத்தியங்கள் குறித்தே அதிகம் பேசப்படுகின்றன. அதற்கு முன்னதாக ஒரு தகவல். மன்னாரில் பெரிய இராணுவ தளம் தள்ளாடி. தள்ளாடிக்கு சற்று அப்பால்- மன்னார் நகரின் நுழைவாயிலை அண்டிய பகுதியில் இந்த மனித புதைகுழி உள்ளது. யுத்த காலத்தில் மன்னார் நகர நுழைவாயில் எப்பொழுதும் பாதுகாப்பு தரப்பிற்கு மிக முக்கியமான மையம். தள்ளாடி இராணுவ முகாமிலிருந்தபடி, மன்னார் நகர நுழைவாயிலை கட்டுப்படுத்த முடியாது. அதனால் மன்னார் நகர நுழைவாயிலில் இலங்கை படைகள் முகாம் அமைத்திருந்தார்கள். ஆனால், அது 1990களின் பின்னரே. 1990களிலேயே இலங்கை இராணுவம் மன்னார் தீவை கைப்பற்றியது. தற்போது மனித புதைகுழி இருக்கும் இடத்திற்கு எதிர்ப்புறமாக உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்திலேயே இலங்கை இராணுவம் முகாம் அமைத்திருந்ததாக மூத்த மன்னார்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, 1990இல் புதைகுழி பகுதியில் வங்கி அமைக்கப்பட்டு விட்டது. ஆகவே, 1990 இன் ஆரம்பத்திற்கு முன்னரேயே இந்த மனித புதைகுழி உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு.
இந்த புதைகுழிக்கு அண்மையாக இந்திய இராணுவத்தின் முகாமும் இருந்தது. ஆனால், எந்த காலத்திலும், புதைகுழி பகுதிக்கு மேல் இராணுவ முகாம் எதுவும் அமைந்திருக்கவில்லையென்கிறார்கள் மன்னார் வாசிகள்.ஆக, முகாம் ஒன்றிற்குள் இந்த மனித புதைகுழி உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை, முகாமின் வெளிப்பகுதி ஒன்றிலேயே மனித புதைகுழி உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதேவேளை, அங்கு வங்கி அமைக்கப்பட்ட சரியான திகதி தெரிந்தால், அந்த புதைகுழியுடன் இந்திய இராணுவம் தொடர்புபட்டதா என்பதை ஊகிக்க முடியும். எனினும், மன்னாரின் மூத்த குடிகள் பலருடன் பேசியபோதும், அதை அவர்களால் துல்லியமாக பேச முடியவில்லை.
புதைகுழி தொடர்பாக, நிலவும் ஊகங்களை இப்பொழுது அவதானிப்போம். 1.தமிழ் இயக்கம் ஒன்று செய்திருக்கலாம். 2.இந்திய இராணுவம் செய்திருக்கலாம்.3.இலங்கை இராணுவம் செய்திருக்கலாம்.
4.சுடுகாடு. இதில் 4வது ஊகமான சுடுகாட்டிற்கு வாய்ப்பில்லையென்றுதான் தோன்றுகிறது. ஒன்றின்மேல் ஒன்றாக உடல்கள் அடுக்கப்பட்டுள்ளது, விலங்கிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புகூடுகள், சுடுகாடாக கருத வாய்பில்லையெ்றுதான் தோன்றுகிறது.
இந்திய இராணுவத்தின் முகாம் அதில் அமைந்திருக்கவில்லை. சற்று தள்ளி- சிறு நூறு மீற்றர்களின் அப்பால் இருந்தது. இலங்கை படைகளும், புதைகுழிக்கு எதிர்ப்புறமாகவே இருந்தார்கள். 1990இல் இலங்கை படைகள் மன்னார் தீவிற்குள் நுழைந்தபோது, புதைகுழியிடத்திலிருந்த வங்கி கட்டப்பட்டிருந்ததா என்பதை உறுதிசெய்தால், இலங்கை படைகள் இதில் தொடர்புபட்டார்களா என்பது தெரியும். மன்னாரில் அந்த காலப்பகுதியில் பலமாக இருந்த இயக்கங்கள் இரண்டு. ஒன்று- ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றது- புளொட்.
புளொட் மன்னார் மாவட்டத்தில் பெரிய முகாம் அமைத்திருந்தாலும், அந்த முகாம் மன்னார் நகரத்திலிருந்து 40 கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த குஞ்சுக்குளத்திலேயே அமைந்திருந்தது. புதைகுழிக்கு அண்மையாக இருந்த இந்திய இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் முகாம் இருந்தது. இந்திய இராணுவம் அல்லது இராணுவத்துடன் இணைந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்த புதைகுழியை உருவா க்கியதா என்ற ஊகம் மன்னார்வாசிகளிடம் இருந்தது. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் மூத்த பிரமுகர்கள், அப்படியொரு சம்பவம் நடக்கவில்லையென அடித்து சொல்கின்றார்கள். தமிழ் இயக்கங்களில் விடுதலைப்புலிகளை பற்றிய ஊகமும் உள்ளது. இலங்கை இராணுவம் செய்திருக்கலாமென்ற ஊகமும் மக்களிடம் உள்ளது.
இந்திய இராணுவம் வெளியேறிய சமயத்தில், கைவிடப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் தேசிய இராணுவத்தின் பிரமுகர்கள் கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பி செல்வதற்காக, மன்னாரிற்கு சென்றபோது- அல்லது வேறிடத்தில் கைது செய்யப்பட்டு மன்னாரிற்கு கொண்டு வரப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்ற ஊகமும் உள்ளது. இந்த ஊகத்தினை நான் ஓரளவு ஒத்துக்கொள்கின்றென், ஏனெனில் 1985 காலப்பகுதியில் மன்னார் தீவு முழுமையும் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றனர் அப்பொழுது மன்னார் தீவே மிக சொற்பமான மக்களுடன் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது, அப்பொழுது மீண்டும் மன்னாருக்கு இந்தியாவில் இருந்து வந்த சில பேசாலைவாசிகள் என்ன நடந்தது என்பது மர்மமாக உள்ளது, இந்த எலும்புக்கூடுகளுக்குள், மரியதாசன் இம்மனுவேல் துரம் என்ற எனக்கு தெரிந்த எனது உறவினரின் எலும்பாகவும் இருக்கலாம்,
இவை எல்லாவற்றையும் விட, இன்னொரு யதார்த்தம் உள்ளது. புதைகுழி ஆய்வுப்பணி மற்றும் புலனாய்வு தகவல்களின் மூலம், புதைகுழியின் காலப்பகுதியை ஓரளவு நெருக்கமாகவும், யாரால் உருவாக்கப்பட்ட புதைகுழியென்பதையும் அரசு ஓரளவு துல்லியமாக அறிந்து கொண்டிருக்கும். தேர்தல்கள் நெருக்கும் சமயத்தில், புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கைவிட்ட ஐ.தே.க அரசாங்கம், பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய புதைகுழி பற்றிய விடயமொன்றில் கைவைக்க விரும்பாது. அகழ்வு பணிகளில் பெரியளவான இழுத்தடிப்புக்கள் செய்யாமல், அதை காபன் பரிசோதனைக்கு அனுமதித்தது- சில உள்ளக தகவல்களின் மூலம் புதைகுழி விவகாரத்தை உறுதிசெய்ததன் பின்னராகவும் இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதைப்பற்றி கூறியிருந்தார். காபன் பரிசோதனை முடிவுகள் தமிழர்களிற்கு அதிர்ச்சியளிப்பதாகவும் இருக்க லாமென்றார். ஏதோ ஒரு உள்ளக தகவலின் அடிப்படையிலேயே அவர் அதை சொல்லியிருக்கலாம்.
இப்படியான தகவல்களும், ஊகங்களும்- விஞ்ஞானபூர்வமானவை அல்ல. முறையான ஆய்வு முடிவுகளே, நம்பத்தகுந்தவை. அதனால், காபன் பரிசோதனை முடிவுகள் வரும்வரை காத்திருக்கலாம்.
அந்த முடிவு, அனேகமாக தமிழர்களிற்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அமையலாம்! ஆனால் அதற்கும் பேசாலை வெற்றி நாயகி ஆலைஅத்துக்கும், பேசாலை மக்களுக்கும் தொடர்பு இல்லை என ஆணித்தரமாக சொல்கின்றென். நன்றி, அன்புடன் பேசாலைதாஸ்
Abonner på:
Innlegg (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...