திருக்குடும்ப கன்னியர் சபையின் மூன்று அருட்சகோதரிகளின் நித்திய அர்ப்பணம்
(செய்தியாளர்) 21.12.2019
கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த திருக்குடும்ப கன்னியர் சபையினரின் மூன்று அருட்சகோதரிகள் தங்கள் நித்திய அர்ப்பணத்தை வழங்கினர்
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் மன்னார் மறைமாவட்டகுரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியின்போது திருக்குடும்ப கன்னியர் சபையின் மாகாண தலைவி அருட்சகோதரி தியோபின் குரூஸ் முன்னிலையில்
அருட்சகோதரிகளான வலைப்பாட்டைச் சார்ந்த அருட்சகோதரி மேரி கிறிஸ்ரின் நிகோலன், பேசாலை சிறுத்தோப்பைச் சார்ந்த அருட்சகோதரி டிவானா மரியதாஸ், பேசாலையைச் சேர்ந்த அருட்சகோதரி லபோரா மேரி சேவியர் குரூஸ் ஆகியோரே தங்கள் நித்திய அர்ப்பண வாக்குத்தத்தத்தை வழங்கினர்
இவ் நிகழ்வில் ஓரிரு பரிசுத்த சடங்கு முறைகளும் கெளரவ நிகழ்வும்.
(வாஸ் கூஞ்ஞ)