மறக்குமோ நெஞ்சம்....
ஆனதம்மா ஆண்டு பனிரெண்டு
மறையவில்லை காட்சி எம் விழியிரண்டு
கோரத் தாண்டவத்தின் பிடியில் நின்று
பாதுகாத்ததம்மா உன் கரம் அன்று.
இன வெறியர்களின் அழித்தொழிப்பு
எம்மவர் கொண்ட பரிதவிப்பு
துப்பாக்கிச் சன்னங்களின்
சலசலப்பு
இவற்றை மறக்குமோ எம் நினைப்பு.
எம்மவர் வாழ்வாதாரத்தை
எரித்தான்
அதைக் கடல் நீரோடு கரைத்தான்
அக்கினியால் எம்மை அழித்தான்
சொல்லொண்ணா துயரத்தைக் கொடுத்தான்.
கொலை வெறிப் படையினை மறித்தாய்
வீசிய குண்டின் வீரியம் குறைத்தாய்
சீறிய சன்னங்களை காலில் மிதித்தாய்
உன் பிள்ளைகள் முழுவதையும் நீ காத்தாய்.
ஊர் கூடி முழுவதும் ஓலமிட்டோம்
எம் கண்ணீர் வெள்ளத்தால் உன் பாதம் தொட்டோம்
அகலட்டும் இன்நிலை என
அபாயமிட்டோம்
உன் அன்பின் கருணையை அன்று கண்டோம்.
சில நூறு துப்பாக்கிகள் எம்மை நோக்கியது
பல நூறு தோட்டாக்கள் எம்மைத் தாக்கியது
அத்தனை வாதைகளும் பனி போலாகியது
வெற்றி அன்னையின் அருட்கரம் எம்மைத் தாங்கியது.
வாதை உன் கூடாரத்தை அண்டவில்லை
பல இரவைக் கழித்தோம் இங்கு வீடு சென்று விடவில்லை
அட்டூழியத்தின் சுவடுகள் இன்னும் மறையவில்லை
கொடிய காட்சிகளை நெஞ்சம் மறக்கவில்லை..
இவற்றை மறக்குமோ எம் நெஞ்சு?
Emart Croos