søndag 16. april 2017

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!

பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்!


உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரபு கலைவடிவம். இது பொம்மலாட்ட வைகையை சார்ந்ததாக இருப்பினும் இது பொம்மலாட்டம் அல்ல. மரத்தினாலும் வைக்கோல் உடம்பினாலும் உருவாக்கப்பட்ட உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் திருப்பாடுகளின் காட்சி ஆகும். மனிதர்களின் நடிப்பை வைத்து திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்படும் போது, அங்கு தெய்வீகம், அற்றுப்போய் இயேசுநாதாராக நடித்த அந்த நபரின் நடிப்பு பேசப்படுவதால் அங்கு தெய்வீகம் என்பது இல்லாது போகின்றது. ஆனால் பேசாலை மக்களினால் காட்டப்படும் திருப்பாடுகள். பேசாலை மக்களினால், பய பக்தியாய் ஆரதிக்கும் கர்த்தருடைய உடக்கு இங்கே நடிக்கும் போது, உண்மையில் நாம் வணங்கும் கார்த்தராகி இயேசு நம் கண் முன்னால் பாடுகள் அனுபவிப்பது போன்ற ஒரு பிரமையை மக்கள் மனதில் ஏற்படுத்தி விடுகின்றது. இதுவே பேசாலை உடக்கு பாஸின் மகாத்மியமாகும். உலகிலேயே வேறெங்கும் இல்லாத இந்த உன்னத கலை வடிவத்தினை, கடந்த இரு நூறுவருடங்களாக பேசாலை மக்கள் பாதுகாத்து பேணி வருவதையிட்டு பேசாலைதாஸ் என்ற ஒரு நபராக நான் பெருமை அடைகின்றேன். எமது மரபு சார்ந்த உடக்கு கலை வடிவம் பற்றி பேசாலைதாஸ் ஆகிய நான் என் பேசாலை உறவுகளுடன் பேசுகின்றேன்!                                                            கடந்த புனித வாரத்திற்கு முந்திய வாரத்தில் கான்பிக்கப்பட்ட உடக்கு பாஸ் பல சிறப்புகளை கொண்டிருந்தா லும், பல குறைபாடுகள் காட்சி முழுவதும் தொடர்கின்றது. உடக்கு பாஸின் உச்ச கட்டம் கடவுள் மரிக்கும் காட்சி. கடவுளே மரணிக்கி ன்றார் என்றால் அந்த காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே சற்று கற்பனை பண்ணிப்பாருங்கள்! மகா பயங்கரமாக இருக்கும். மத்தேயூ எழுதிய சுவிசேசத்தின் படி, பூகம்பம் உண்டா கியது. வானம் இருளாகியது. சூரியன் பிரகாசம் குன்றி ஒளி இழ ந்தான். கல்லறைகள் திறக்கப்பட்டு ஆவிகள் அலறின. ஆலய திரைச் சீலை கிழிந்தன. பறைவைகள் சோகம் காத்தான. நிலவு அழுதது அந்தோ! படைப்பின் கர்த்தர் பிதாவே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்று உரக்க கூவி தலை சாய்க்கி ன்றார். ஆனால் நடந்து முடிந்த காட்சியில் திடீரென கறுப்பு கலர் காண்பிக்கப்படுகின்றது. அதற்கு முன்னரே கர்த்தரின் ஆவி எங்கேயோ பறந்து போய்விட்டது. காரனத்தை ஆராய்ந்தால் நூல் அறுந்துவிட்டதாம். நூல் அறுந்து போனதுக்கும், அரசியல் காரனமா கின்றது! முன்பு சலோஸ்தியான் பீரிஸ் அவர்கள் மிக அவதானமாக, நூல் வேலைகளை செய்வார் அது அவரின் வாழ் நாள் வேலையாக இருக்கும்! அந்த வேலையை அவரின் வாரிசுகள் யாராவது செய்திரு ந்தால் நூல் அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போயி ருக்கும். அந்த நூல் வேலையை கூட தமிழ் தேசியவாத உணர்ச்சி தான் இழுக்கவேண்டுமா? என்னே மடமைத்தனம்!
                                திருப்பாடுகளின் காட்சியின் முக்கிய இயக்குணர் கலாபூசணம் மிராண்டா ஆசிரியர் அவர்கள், அவருக்கு பின்னர் இதனை நெறிப்படுத்தும் பக்குவம் அடுத்த இளம் தலைமுறைக்கு கொடுக்கப்படவேண்டும். மேலை நாடுகளின் நவீன நாடகங்களை இயக்கி வெற்றி பெற்றவன் என்ற எனது சிறுமதியை வைத்து சொல்கின்றேன். திருப்பாடுகளின் நெறியாள்கை நிறைய குறைபாடு களைக் கொண்டுள்ளது.                                                              முதலில் ஒலி அமைப்புக்கு வருவோம், நமது உடக்குகளுக்கு வாய் பேசாது எனவே குறைந்த பட்சம் மாதா இயேசு இவர்கள் வசனம் பேசும் போது அந்த உரையாடல் அங்கிருந்து வரவேண்டும். அடுத்ததாக வசனங்கள் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை கொண்டு வசனம் அமைக்கப்பட்டிருந்தது. உரையாடலின் வசனத்திற்கு ஏற்ப உடக்குகளினால் அசைந்து காண்பிக்க முடியாது எனவே வசன உரையாடைலை தெளிவாகவும். உள் ஆழக் குரலாக இருந்திருக்கவேண்டும். வானொலியில் பணியாற்றியவர்களுக்கு நான் சொல்வது புரியும்                                                                          இயேசு வசனம் பேசும் போது அவரின் வசனம் கருக்குள்ள பட்டயம் போல இதயத்தை ஆழ ஊடுருவும் அது அங்கு இல்லை. பூங்காவனத்தில் வந்த தொய்வு, சிலுவையில் தொங்கும் வரை இயேசுவுக்கு இருந்ததா? குதிரை ஒரு பரிட்சார்த்த‌ முயற்ச்சி முதலில் அதனை பாராட்டுவோம் ஆனால் உண்மையான குதிரையின் பொழிவு அதில் இல்லை. குதிரை நிற்கின்றது ஆனால் டொக்கு டொக்கு சத்தம் மட்டும் நிற்கவில்லை! நாலுபேர் குதிரை யை தூக்கிக் கொண்டு அலைவது அப்படியே வெளியே பார்வை யாளர்களுக்கு தெரிகின்றது. ஒளிவடிவம் காட்சிக்கு ஏற்ற விதத்தில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேயில்லை. அடுத்ததாக காட்சிகளை தொடர்பு சாதனத்துக்கு அனுப்பும் போது பக்கத்தில் இருப்பவர்களின் அநாவசிய குரல்கள் கலந்து வெளிப்பட்டது காட்சி க்கு குந்தகம் விளைவித்தது. இப்படி  இலகுவில் திருத்த கூடிய குறை பாடுகள் அதிகம். உடக்குகள் இன்னும் பூரணமான வடிவத்திற்கு வரவில்லை, இரும்பு கம்பிகளினால் கைகள் இயக்கப்படுவது, திமிர்வாதக்காரகள் போல உடக்குகள் இன்னமும் இருக்கின்றது. குறிப்பாக கள்ளவர்கள் உடக்கு, வெருளிகள் போல, நகைப்புக்கு உள்ளாகி இருந்தது. மரணித்த காட்சி மகா மட்டமாக இருந்தது. 
                                                           இன்னும் நாம் இரு நூறு வருடத்திற்கு பின் தள்ளியே இருக்கின்றோம். எந்தவித முன்னேற்றம் இல்லை. கை, கால், தலை, வாய் கண் இவைகள் இயங்கக்கூடிய  உருவங்கள் டென்மார்க் நாட்டில் செய்கின்றார்கள் ஒரு உடலுக்கு 35 ஆயிரம் மட்டில் முடிகின்றது. நாம் நமக்கு வேண்டிய ஒப்பனைகளை செய்ய வேண்டியதுதான் மிச்சம். இனிவ்ரும் காலங்களில் திட்டமிட்டு செயல்படுவோம் வெற்றியும் காண்போம். பாடுபட்டு உழைக்க எம் ஊரவர்கள் முன்வரும் போது, சிறப்பாக காட்டி, எமது பாரம்பரிய உடக்கு பாஸை நவீனப்படுத்துவோம். மற்றப்படி பிரமாண்டமான மேடை, எம் ஊரவர்களை கட்டாயம் பாராட்டவேண்டும். தயவு செய்து ஆலையத்திலும். கடவுளிடமும். கலைவடிவத்திலும் அரசி யலை புகுத்தவேண்டாம். திறமைகளுக்கு முன் உரிமை கொடுத்து, இளம் தலைமுறைகளுக்கு வழிவிட்டு, எமது உடக்கு பாஸ் கலை வடிவத்தை மெருகூட்டுவோம் நன்றி  
 அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

torsdag 6. april 2017

இயேசுவின் இரட்சனியம் உடக்கு பாஸ் பேசாலை 2017

இயேசுவின் இரட்சனியம் 
உடக்கு பாஸ் பேசாலை 2017





                                         
உடக்கு பாஸ் பேசாலை 2017 Part 1

உடக்கு பாஸ் பேசாலை 2017 Part 2

உடக்கு பாஸ் பகுதி 3 
















                               





























                                                   

எமது ஊரின் சில முக்கிய காண்னொளிக்காட்சிகள்

எமது ஊரின் சில முக்கிய காண்னொளிக்காட்சிகள்



         முன்னாள் பேசாலை பங்கு தந்தை அவிதப்பரின் 
                                                     மரண திருப்பலி

ஆத்துமாக்கள் திருநாள்
                           
                           பாடசாலை விளையாட்டு போட்டி

                                   கரைவலை பேசாலை

                   கிறிஸ்மஸ் விழா பேசாலை இளையோர்

                             ஆலைய நிதிக்காக கரவலை

                       எமது ஊர் முதியோர் விழா காட்சி    


அன்னை மரியின் திருச்சுருப பவனி

பெரிய வெள்ளி  ஆண்டவரின் திருவுடல் ஊர்வலம்  ஆசந்தி





                 
                        மூவிராசாக்கள் வாசாப்பு ஏடு திறப்பு!

onsdag 5. april 2017

உடக்கு பாஸ் காண வாரீர் கவிதையழைப்பு

உடக்கு பாஸ் காண வாரீர் 
                          கவிதையழைப்பு


மன்னாருக்கும்,தலைமன்னாருக்கும்
இடையில் உண்டி போல ஓருராம் 
இழுவைப்படகும்,இரும்புவலையும் கரைவலையும்,கண்ணாடியிலைப்படகும் 
இங்கே இல்லையென்பது இல்லையாம்.
பற்றிமாவும்,சென்மேறிஸ்ஸும்
எம் ஊர்ப்பிள்ளைகள் பேர்சொல்லும்
கல்விக்கூடங்களாம்,அதுவேயெங்கள்
மூத்தோரும் கல்விபயின்ற கற்கூடங்களாம்.
எவ்விடம் சென்றும் வெற்றியீட்டும் விக்டரீஸ்
கழகம் உருப்பெற்றெழுந்ததும் இவ்வூராம்.                            வந்தோரை வாழவைத்ததும் இவ்வூராம்.
அவர்கள் நயவஞ்சகர்களாக மாறினாலும்,
அரவணைத்ததும் எம்மூராம்.
புகழழியாப்புலவர்கள் பலரும்                                                                 கவிப்புகழ் பாடியே
எம்மூர் பாதுகாவலியாம் வெற்றியன்னையின்
நல்லாசீர் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்ததும்                                         எம்மூரே அதுவே எங்கள் பேசாலையாம்.
சிலுவையில் இரட்ணியம் கொண்டு                                             நூற்றைம்பது வருட பாரம்பரியம் கண்டு 
இற்றைவரைக்கும் அழியாப்புகழ் கொண்டு
உடக்கு பாஸ் ஆறாம்,ஏழாம் திகதிகளில்                              காண்பிக்கப்பட இருப்பதும் எம்மூராம்                                                  அதுவும் எங்கள் பேசாலையாம்.
                                                                 யாத்தவர் ஹிலரி குரூஸ்
                                                                            தொகுப்பு பேசாலைதாஸ்

tirsdag 4. april 2017

உடக்கு பாஸ் காட்சிகள்

உடக்கு பாஸ் காட்சிகள்
மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக்கு பாஸ் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. உடக்குகுகளினால் (மரப்பாவை)  காண்பிக்கப்படும் இக்காட்சிகள் தற்போது போர்த்துக்கல் நாட்டில்  மட்டுமே காண்பிக்கப்ப டுகின்றது. அதுவும் தெருக்காட்சி  போல விழா சமயங்களில் காண்பிக்கின்றனர். பாஸ்கா காலத்தையொட்டி இயேசுவின் பாடுகள் காட்சியானது மேலை நாடு களில் ஒரு தவக்கால பக்தி முயற்ச்சி யாக காண்பிக்கப்பட்டது இதனை  Passion play என்றும் Passo லத்தின் சொற்களினாலும் குறிக்கப்படுகின்றது. இலங்கை அரங்கியல் பல்கலைக்கழகதின் மேற்கத்திய இசை துறையில் பணியாற்றும் கே.சமரக்கோன் அவர்களின் கட்டுரை யின்  படி உலகத்திலேயே இன்று வழக்கில் இருக்கும் உடக்கு            பாஸ் பேசாலையில் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.    இந்த காட்சியினெழுத்து வடிவம் Script யாக்கோல்மே கொன்ச ல்வேர்ஸ் எனும் குருவானவர் எழுதிய வியாகுல பிரசங்கத்தை அடிப்படையாக கொண்டது, சிங்களத்தில்  දුක දේශනය පසන් පොතේ dukkapraptha natya saha deshana navaye pasan potha’ இந்த உடக்கு பாஸ் கிட்டதட்ட இரு நூற்றாண்டு வரலாறு கொண்டதாகும். 

                                         போர்த்துக்கல் நாட்டு கலைப்பாரம்பரியத்து   க்கு ஏற்ற விதத்தில் பாஸ் காட்டுவதற்கான கலை அரங்கம்        1907 ஆண்டளவில் நிறுவப்பட்டுஅந்த மண்டபத்தில் பாஸ் காண்பி க்கப்பட்டது. இலங்கையில் வேறு எங்கும் காணப்ப   டாத புதுமையான அரங்க அமைப்பைக் கொண்டது இந்த மண்டபம். ஒரே நேரத்தில் நான்கு காட்சிகளை காண்பி க்கக்கூடிய விதமாக, படிப்படியாக அரங்கம் அமைக்கப்பட்டு ள்ளது. ஒரே நேரத்தில் இந்த நான்கு தளங்களிலும் உடக்குகள் நடித்துக்கொண்டிருக்கும். அதை இயக்கும் நுட்பவியலாளர்கள் மேலிருந்தும், கீழ் இருந்தும் செயல் படுவார்கள். நரகத்தின் காட்சிகள் உண்மையான நெருப்பு புகை மற்றும் தீச்சுவாலை கள் கீழ் இருந்து இயக்கப்படும் அதேவேளை மேலே வான தூதர்கள் இறங்கி வரும் காட்சி மனதுக்கு ரம்பியமாக இருக்கும். சில காலங்களில் இயேசுவின் பிறப்பு உள்ளடங்கலாகவும் காட்சிகள் காண்பிக்கப்படுவதுண்டு. இதனை லெம்பவம்   என்று அழைப்பார்கள். இயேசு மரணிக்கும் காட்சி பயங்கர மாகவும் சோகமும் திகிலும் நிறைந்ததாக காண்பிக்கப்படும். இந்த காட்சி அமரர் சலோஸ்தியான் பிரீஸ் அவர்களின் நூல் வேலைப்பாடுகளினால் நிறைந்திருக்கும். கலாபூஷணம் அந்தோனி மிராண்டா அவர்களின் ஒப்பனை மற்றும் காட்சி அமைப்புகளின் அபரா திறமை பாஸ் முழுவதும் பரவலாக அடைத்துக்கொள்ளும். இளையோர்களின் வருகையால் பாஸ் காட்சிகளில் பல புது உத்திகள் உள் புகுத்தப்பட்டன. நவீன  இசை எட்வேர்ட் பீரிஸ், சந்திப் குருஸ் இன்னும் பலர் தம் தாக்க த்தினை செலுத்தினார்கள். ஒப்பாரி பாடல்கள் கிராமத்து மண்மணக்கும் விதத்தில் திருமதி ரதி பீரிஸ், திருமதி பிரஞ்சாட்ட இவர்களினால் உள் வாங்கப்பட்டது. இன்னும் கொஞ்சம் மருவி, வசன‌ங்கள் உரை நடைகள் உள்ளே புகுத்த ப்பட்டன இதில் திரு,உதயா அவர்களின் பங்களிப்பு செல்வாக்கு செலுத்தின, இதைவிட கபித்தான் வரும் குதிரை ரிச்சா அவர்க ளினால் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு பாராட்டு பெற்றது. தற்போது காண்பிக்கப்பட இருக்கும் பாஸ் இன்னும் பல நவீன அம்சங்களை உள் வாங்கி காண்பிக்கப்பட இருக்கின்றது. கட்டுரையின் ஒரு பகுதியை ஆங்கிலத்தில் தருகின்றேன்


                              The passion play in Pesalai is unique to Sri Lanka as  it is     probably the only passion play in the world that is entirely acted  using life sized puppets. The play is based on the script ‘Viyakula  Pirisangam’ which is the Tamil version of Father Jacolme Gonsalves   Sinhala script of ‘dukkapraptha natya saha deshana navaye pasan  potha’. The Pesalai passion play has a history of performance oover 200 years. The year 1983 was when all nine acts were performed  before the ethnic unrest in the country. Since the Pesalai church and the Fatima Madya Maha Vidyalaya provided shelter to hundre of refugees till almost 2008 they had no provision to stage the passionplay again till 2000. At this point the cast had to            build a replica of the original stage its original been erected in 1907 at the Pesalai church,  at the playground of the Fatima Madya Maha Vidyalaya to perfor a few             of the acts. Since then the passion play has been performedin 2003 and then in its original ‘stage’ at the church in 2008, 2010 and 2012.   

                              The passion play of the pre-war era was performed on stage by      the actors while the readings and chants were narrated off stage.  Since 2000, under  the direction of Kalabhushana S.A. Miranda there are    hymns and pasams been sung to accompaniment on keyboard music.  Also a notable change is that there is now dialogue between the characters   and not a narration. The costumes too have undergone changes in the post   war performances. The aim of this article is to trace the roots of the music   of the Pesalai passion play and its influences on the other passion plays within Sri Lanka as this was the root and first passion play acted in  Sri Lanka from over 400 years ago. 

                                                    Another point of interest that would be investigated   is the changes made for the performance in troubled years of the past years. Video   and Audio recordings will be made with a main focus  to determine the roots of       the music of the play. This is important to my  article as the music of the Pesalai passion play is authentic and remains  without a considerable change to date. Moreover, structured and unstruc- tured interviews will be used to gather in-depth information from a variety of persons knowledgeable and involved in the Pesalai passion play.    

                                                   This esay will explore two main questions with regard to the evolution of passion play music in Sri  Lanka. The questions posed are                      (i) the relation to the cultures and music traditions that have influenced  the music of Pesalai passion play and                                                                           

 (ii) what are the music traditions that are imbibed in the Pesalai Passion Play music? The hypothesis of this view is that the Pesalai passion play has  not undergone a metamotphosis of change at many levels: Concentrating on  the music, this study states that the music is authentic and directly influenced  by the Karnatic idiom. One of its main influences is also being Konkani   Music from Goa

அன்புடன் பேசாலைதாஸ்

                                         











சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...