சருவேசுரனின் குமாரத்தியே! ஸ்பிரித்து சாந்துவானவருக்கு பிரியமுள்ள நேசமே! சுதனா
கிய சருவேசுரனுக்கு பரிசுத்த தாயாரே! சம்மனசுகளின் இராக்கி
னியே! மனிதர்களின் சகாயமே! இப்படி இரக்கதோடு கோவிலே
அதிரும்படியாக, திருப்பலி முடிந்து, இறுதி ப்பாடல் முடிந்தும்
முடியாத கையோடு, இந்த சிம்மக்குரல் ஆலயத்தின் பின் பக்கத்
தில் இருந்து அதிரும். வழமையாக குருமார்கள் ஒலி பெருக்கி
யின் உதவியோடுதான் செபங்கள் சொல்லுவார்கள் ஆனால்
இவ்ரோ எந்த உதவியுமின்றி ஆலயத்தில் ஓங்கி ஒலிப்பார்.
இவருக்குப்பின் குண்டு சட்டியார் அதனைச்சொல்வார் இருந்தா
லும் அந்த NAD தாத்தா மதிரி இருக்காது. எம்மை விட்டு மறைந்து
போன ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் தம் ஆளுமை
களை எம்மிடம் பதித்து சென்றுள்ளனர். படத்தில் NAD தாத்தா,
அவரின் மனைவி விக்டோரியா பாட்டி, எனது அபிமான டயஸ்
மாஸ்டார் இன்னும் அடையாளம் தெரியா என் உறவுகள்