விதவிதமான வேடிக்கை மனிதர் வாழும் இந்த உலகத்தில் என் அழகிய கிராமத்தி லும் சில வேடிக்கையான வினோதமான மனிதர்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் திரு. பிரகாசம் லெம்பேட் அவர்கள். அவர் பெயரைச்சொன்னாலே சிரிப்பு சிலருக்கு தானாகவே தொத்திக்கொள்ளும். கிண்டலும் சிரிப்பும் நகைச்சுவையுமாக இவர் வாழ்க்கை தானாகவே நகர்ந்துகொண்டிருக்கும். இவருக்கு எந்தவித கவலையோ ஆதங்கம் எதுவுமே இல்லை. அப்போது அவர் வாழ்ந்தது இப்போது இருகின்ற இடத்தில் ஒரு சின்ன குடிசை! குடிசையில் வாழ்ந்தாலும் மனத்தளவில் குபேரனாக ஒரு எண்ணம்! புத்தர் சொல்லுவாரே ஆசைகள் தான் சகல துன்பங்களுக்கும் தோற்றுவாய் , ஆசைகளை அறுத்தெறி அமைதி கிட்டும். ஆற்றில் இழுபட்டுச் செல்லும் ஒரு கட்டையாய் உன்னை நீ நினைத்துக்கொள் என்றெல்லாம் புத்தர் சொல்லுவார். புத்தனின் போதனை களை நான் இவரில் கண்டு வியந்திருக்கின்றேன். கெட்டித்தனம் மிக்க மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றுவிட்டு எப்படி இவரால் கவலை இல்லாமல் இவரால் அதுவும் பேசாலையில் வாழமுடிகின்றது என்பதே ஒரு வேள்விதான்!
ஒரு முறை ஊரவன் ஒருவன் நூறு ரூபாய்த்தாளை தொலைத்துவிட்டு கவலையோடு தேடிக்கொண்டிருக்கின்ற ஒருவனிடம் இவர் போய் ஆறுதல் சொன்னார். ஏன் உழைப்பான் ஏன் தொலைப்பான்? என்று. இதில் பெரும் தத்துவமே அடங்கிக்கிடக்கின்றது. தேடும்போது சிரமத்தையும், காக்கும் போது பயத்தையும், போகும் போது கவலையையும் தருவது பணம் ஒன்றே! இதனை வாழ்வின் அனுபவாமாக பலர் கண்டிருக்கின்றார்கள். வயல் வெளி மலர்களை பாருங்கள் என்று இயேசு சொன்னதைப்போல நான் நியாயம் சொல்ல இங்கே நான் வரவில்லை அதற்காக பாடுபட்டு உழைப்பது மடமை என்றும் வாதிட வரவில்லை. உழைத்தால் மட்டும் போதுமா? அதை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டுமே? உழைப்பது வேறு அதை அனுபவிப்பது வேறு. யாரோ உழைப்பதை யாரோ அனுபவிப்பதை நாம் பலமுறை கண்டிருகின்றோ மல்லவா? கடவுள் பக்திகொண்ட பிரகாசம் லெம்பேட் அவர்கள் இப்படியும் சிந்தித்திருந்தால் அதில் தப்பு இல்லையே! இப்போது பாருங்கள் மூத்தமகள் ஒரு ஆசிரியை சின்ன மகள் மருத்துவதாய் கடைசி மகள் ஒரு பொறியியல் வல்லுனர்! நம்மைச்சுற்றி நம்மோடும் வாழும் வினோதமான வேடிக்கை மனிதர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஒரு உள்ளக்கிடக்கையின் ஒரு சிறு உத்துதலினாலே இரவு மூன்று மணிவரை கணனியில் காத்திருந்து இதை எழுதுகின்றேன். துருவ நாட்டின் தைமகள் குளிரோடு என் உறவுகளுக்கு வாழ்து சொல்லி தூங்கச்செல்லும் உங்கள் அன்பு பேசாலைதாசன்.
Abonner på:
Innlegg (Atom)
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,
சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...
-
உடக்கு பாஸ் காட்சிகள் மன்னார் பேசாலையில் மாபெரும் உடக்கு பாஸ் எதிர்வரும் வியாழன் வெள்ளி (06 /07 திகதிகள்) ஆகிய நாட்க ளில் பேசாலையில் உடக...
-
பேசாலை உடக்கு பாஸ் நிகழ்வு ஒரு விமர்சன கண்ணோட்டம்! உடக்கு பாஸ் என்பது கிறிஸ்தவ திருப்பாடுகளை உடக்குகள் கொண்டு காண்பிக்கப்படும் ஒரு மரப...