tirsdag 23. januar 2018

கருணை இல்லம்

கருணை இல்லம் 
கண்டதும் கொண்டதே காதல்
சதை பிண்டங்களின் மோகம்//
முகத்திரை இட்டு மோசமாய்
திரையின் பின்னே வேசமாய் //
கணப்பொழுதுக்கு இன்பமாய்
நாம் எங்கனமும் துன்பமாய்//
கருணை இன்றி பரிதவிப்பாய்
கைவிடப்பட்ட எங்களுக்காய்//
இயற்கை அன்னையவள்
இரக்கம் கொண்டவளாய்//
ஏற்ற இறக்கம் அற்றவளாய்
கருணையாய்க் கொடுத்தாளே//
கருணை இல்லம் அதை
முன் பின் முகமறியாமல்//
அன்பும் பண்பும் பாசமுமாய்
அதிகாரமற்ற அழைப்பினால்
ஆதரவளித்த அன்னையர்கள்//
குல கோத்திரம் பாராமல்
முகம் முறியா இன்முகமாய்//
எல்லோரிடனும் பண்புடனும்
பாராமுகமற்றும் பாசமாயும்//
பழகும் என்னைப்போலவே
பெற்றோரால் மறுக்கப்பட்ட//
குப்பையில் வீசியெறியப்பட்ட
அனாதையில்ல வாயிலில்//
ஆளரவம் அற்ற வேளையில்
யார் யாரென தெரியாதவராய்//
கைவிடப்பட்ட எங்களை
அன்றும் இன்றும் என்றும்//
அன்போடு அனைத்திடும்
கருணையில்லம் கண்ணால்
காணும் தெய்வமே எமக்கு.
இவண்.
CROOS.A.H
Amburose Croos Roy

கண் சிமிட்டுதே! குறுங்கவிதை!


செய் நன்றி குறுங்கவிதை!


mandag 8. januar 2018

ஊரச்சுத்தி ஓடிப்பாரு எங்க பேசாலை பெயர் சொல்லும் பாரு //

ஊரச்சுத்தி ஓடிப்பாரு எங்க
பேசாலை பெயர் சொல்லும் பாரு //
வெற்றியன்னை துணை கொண்டு
எங்க வாழ்க்க நல்லா ஓடுது பாரு //
ஊருக்குள்ள வரும்போதே
ஆசிவழங்கும் இலுப்பையடி
வரவேற்பு மாதாவே சரணமம்மா //
ஊரார் பிள்ளைகள் கல்விக்கடலில்
நீந்த துணையுற்ற பத்திமா
அன்னையே சரணமம்மா //
ஊரசுத்தி.........
கிட்டிபுள்ளு அடிச்சு விளையாடுன 
தெருவெலாம் தாரோட்டா ஆச்சுதம்மா //
தாரோடா இருந்த மெயின்ரோட்ல
பள்ளாங்குழி ஆடத்தோணுதம்மா //
ரேசர் வண்டி தள்ளி விளையாடின
இடத்துல இப்போ இரும்பு வண்டி
புகை கக்குதம்மா //
ஊரச்சுத்தி......
சிலையடில கேட்டுபாருங்க
சொந்தகதையும் சொலுமம்மா
சோகக்கதையும் கூடவே வருகுதம்மா //
கடலன்னை போல எம்மவர்
பஞ்சம் தீர்ப்பவர் யாரம்மா //
பனைவளம் கொழிக்கும்
அழகிய வன ஊரம்மா //
வெற்றி மேல் வெற்றியீட்டி தரும் வெற்றிமாமரியே வாழ்கவே //
ஊரச்சுத்தி.....
இவண்.
CROOS.A.H

mandag 25. desember 2017

மார்கழி நிலாக்காலமும் நத்தார் பண்டிகையும்!

மார்கழி நிலாக்காலமும் நத்தார் பண்டிகையும்!

பேசாலை பங்கின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள் கார்திகை மாதம் இறுதி நாள் கொடியேஏற்றத்துடன் களைகட்ட ஆரம்பித்துவிடும். பண்டிகை கால சாறிக்கனவுகள், இளங்குமரிகளின் வண்ண சட்டைக்கனவுகள் சிறகடிக்க, இந்திய சாறி வாங்கும் பயணங்கள் ஆரம்பமாகும்! கார்த்திகை மாத தொடக்கத்திலேயே அம்மாக்கள் கோழி முட்டைகள் சேர்க்க ஆரம்பிப்பார்கள். கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அரிசி மாவிலே செய்யப்படும் ஊர்கேக்கு இப்பவும் வாயில் எச்சில் ஊறுகின்றது. அமெரிக்கா McDonald  KFC இதெல்லாம் எங்கட பெத்தாச்சிமார்கள் செய்யும் ஊர் கேக்கு இணையாகுமா?  கார்த்திகை மாத இறுதியில் கொடியேற்றம் பட்டாசு வெடி ஓசையோடு ஆரம்பமாகும். ஒன்பது நாள்( நவ நாள்) கொண்டாட்டம் ஒவ்வொரு நவநாளையும் ஒவ்வொரு பட்டம் தரித்தவர்கள் கொண்டாடுவார்கள்.லெம்பேட் குருஸ் பெர்ணன்டோ பிரீஸ் இப்படியாக ஒவ்வொரு பட்டக்காரனும் உனது நவநாள் சிறப்பா? எனது நவநாள் சிறப்பா? என்ற போட்டி! பட்டாசு வெடி ஓசைக்ளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். அதற்கு ஏற்றாற்போல வாடை காற்றின் அமோக இறால் பாடும் கைகொடுக்கும்: சிறுவர்களாகிய எங்களை சொல்லவா வேண்டும்? நவநாள் கொடி மணியுடனே ஊருக்குள் வலம் வருவதுடன் பீடத்தில் உதவுவதில் பெரிய போட்டி! ஒவ்வொரு நவநாளிலும் மாதா சிரூபத்தை கோவில் பின் பக்கத்தில் இருந்து மணி ஓசையுடன் சுவாமி பீடத்திற்கு ஏந்தி வருவார் அப்போது மாசில்லாமல் உற்பவித்த எங்கள் மாதாவே என்ற பஜனையை N.A.Dias சங்கீர்தம்பிள்ளை மூச்சுவிடாமல் பாடுவார் ஆலயமணிகள் ஒலிக்கும்,  பட்டம் தரித்தவர்களின் பட்டாசு வெடிகள் கதைப்பிளக்கும்! குறும்புக்கார இளைஞர் சிலர் மாவில்லாமல் அப்பம் சுட்ட எங்கள் பெதாச்சியே! என்று கிண்டலாக பாடுவது இன்னமும் துருவ‌ நாடு வரை கேட்கின்றது. இறுதி நாள் வேஸ்பர் முன்பு இரவிலே சருகை தேர்க்கூட்டிலே வண்ண விளக்குகளுடன் அன்னையை தேரில் ஏற்றி கோவில் வலம் வருவார்கள் அற்புதமான இரவுக்காட்சி! இப்போது வெறும் கனவாகவே வந்து போகின்றது! அடுத்த நாள் ஆடம்பர பூசையுடன் கோவில் விழா நிறைவு பெற, கிறிஸ்மஸ் பண்டிக்கைகான ஆயத்தவேலைகள் ஆரம்பமாகும். பாட்டுக்கர குமரிகள் இரவு வேலையில் பாட்டு பாடுவதும், அதை நோட்டம் விட்டு காதல் அம்பு தொடுக்கும் காளையர் கூட்டமும் களிப்பான காலம் அது! அம்புறோஸ் ஐயா குடில் அமைப்பதில் தனது எண்ணத்தை காட்ட, கரோல் இசையில் புதுமை புகுத்தும் செபஸ்டியான் குருஸ் மாஸ்டர்! ஆடினதெப்படியோ ஆஞ்சுகள் என்ற அந்த கரோல் பாட்டும், பிளசிடஸ், பிராகாசம் லெம்பேட் இணைந்து வெளியிட்ட முசாகிரீ நானா என்ற பாணியில் இரவில் வந்த இரட்சகரை என்ற அந்த கரோல் பாடல் இன்னும் இன்னும்,,,,, காதில்!இனிவருமா அந்த பொற்காலங்கள்  அன்புடன் பேசாலைதாஸ்

torsdag 30. november 2017

இந்த பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது?

இந்த  பேசாலைவெற்றி நாயகி ஆலையம் யாருக்கு சொந்தமானது? 

என்  இனிய உறவு களே! எனது கேள்வி உங்களுக்கு ஆச்சரி யமாக இருக்கின்ற தா?  இது தெரியாதா? வேறு யாருக்கு, பேசாலை மக்களின் உழைப்பிலே கட்டப் பட்டதால் இது பேசாலை மக்களுக்கு சொந்தமானது என்று நீங்கள் சொல்லக்கூ டும்! அதுதான் தவறு என்று நான் சொல்கின்றேன். திருச்சபைக்கு என்று ஒரு சட்டம் உள்ளது அதாவது The canon law of the Catholic Church (Latin: jus canonicum) என்று சொல்வார்கள். அந்த சட்டத்தின் பிரகாரம் எமது பேசாலை வெற்றிநாயகி ஆலையம் திருச்சபைக்கு சொந்தமானது. அதாவது மன்னார் மறை மாவட்ட பரிபா லகராக இருக்கும் ஆயருக்கும், அவரது நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட பேசாலை பங்கு குருவே பேசாலை வெற்றிநாயகி ஆலையத்தின் நேரடி உரிமையாளர் ஆவார் ஆயினும் இர ண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பின் இந்த உரிமைகளும் அதிகாரங்களும், பங்கு மக்கள் ஊடாக, பங்கு குரு செயல்ப டுத்தும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதால் ஆலைய‌ அதிகாரங்கள், பங்கு சபையால் குருவோடு சேர்ந்து பரிபாலி க்கப்படுகின்றது. இதை இங்கு நான் ஏன் பதிவு செய்ய முய ற்ச்சிக்கின்றேன் என்றால் நோர்வே நாட்டில் ஓஸ்லோ மற்றும் பேர்கன் பங்கு சபைகளில் நான் செயலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இங்கே பங்கு சபையானது பொது சபையின் உத்தரவாத்துடன் ஒரு நிறைவேற்று சபையாக செயல்படுகின்றது. பொதுக்கூட்டத்தில் தமது செயல்பாடு களுக்கான கேள்விகள் விமர்சனங்களுக்கு அது தார்மீக பொறுப்போடு விளக்கம் அளிக்கின்றது.
                                                                                      பங்கு சபைக்கு என்று ஒரு யாப்பு இருத்தல் அவசியம், அந்த யாப்பின் ஒவ்வொரு சரத்தும் பொதுமக்களின் அனுமதியுடன், அவர்களது அபிப்பி ராயங்களை உள்வாங்கி உருவாக்கப்படல் வேண்டும். இந்த யாப்பை உருவாக்க ஒரு யாப்பு நிர்ணய சபை இருக்கவே ண்டும். அந்த நிர்ணய சபையில் கல்விமான்கள், எமது பங்கை சார்ந்த குருக்கள், கன்னியாஸ்திரிகள், பொது நிலையினர் இப்படி பலதர்ப்பட்டவர்கள் அங்கத்துவம் பெற்று அவர்கள்து ஆலோசனை பெறப்படவேண்டும். ஆக மொத்தத்தில் பங்கு சபையின் நிர்வாகத்தில் என்ன நடக்கின்றது என்பதை ஜனநா யக அடிப்படையில், அறிக்கைகள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும். பங்கு சபையின் நிர்வாகம் மற்றும் பங்கு குரு மீது அண்மையில் பல விமர்சனங்கள் முக நூலிலே பதி வானதினாலே இதை நான் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்ட து. நல்ல விமர்சனங்கள் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதுதான் ஆனால் அதுவே வீண் குழுப்பங்களை தோற்றுவிக்கக்கூடாது. எனவே நமது ஆலையம், நாம் என்ற உணர்வுடன்( We feeling) செயல்படுவோம், இந்த‌ நாம் என்ற உணர்வுத்தத்துவம் We feeling philosophy பற்றி லண்டன் புறுனல் பல்கலைக்கழ்கத்தில் நான் எழுதிய ஒரு ஆய்வு கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்ப த்தில் பதிய விடுகின்றேன். 
அதுவரை அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

mandag 20. november 2017

நமது ஞான மேய்ப்பர்கள்!

நமது ஞான மேய்ப்பர்கள்!

என் அன்பிற்கினிய பேசாலை உறவுகளே! நாம் வெற்றி அன்னையின் பிள்ளைகள், எமது ஆலையத்தில் நாம் மிகப்பெ ரிய பற்றுதல் கொண்டுள்ளோம். எமது பங்குச் சபை மன்னார் மறைமாவட்டத்தில் நிதிவளம் பெருகிய  ஓர் பங்குச்சபை, இந்த பங்கு சபையிலே நிதி நிர்வாகம் என்பது பெரும் பிரச்ச னைக்குரிய விடயம் தான்.  பங்கு நிதியிலே ஒரு தவறு நட க்கும் போது வெறுமனே பங்கு குருவை குறை சொல்வதும், அவரிடம் காரனம் கேட்பதும் உண்மையில் ஜதார்த்தம் இல்லை. 

                                          ஒருவேளை பங்கு சபை நிதியை ஒருவர் முறைகேடாக பாவித்திருந்தால் அதனை வெளிப்படுத்து தல் ஒரு குருவானவரின் கடமை இல்லை. அவருக்கென்று சில தார்மீக பொறுப்புகள் இருக்கின்றது, அதைவிட பாவங்கள், தவறுகள் இது தொடர்பாக கத்தோலிக்க குருவானவருக்கெ ன்று சில நடமுறைகள் உள்ளன. அதனை நாம் ம‌திக்கவே ண்டும். உதாரணத்திற்கு பங்கு பணத்தை முறைகேடாக பாவி த்த ஒருவர், தனது தவறை தனிப்பட்ட ரீதியில் குருவானவரு க்கு தெரிவித்தால் அது தொடர்பாக குருவானவர் மெளனம் காக்கவேண்டியவராக உள்ளார் என்பதனை மறக்கவே ண்டாம். அதனை அவர் மீறுவாராக இருந்தால் அவர் பாவங்க ளை மன்னிக்கும் ஒரு குருவின்  அதிகாரத்ததை கேள்விக்குறி யாக்குகின்றார். 

                                    எனவே ஒரு பங்கு குருவை மன நோகடிப்பது நல்ல செயல் அல்ல, அப்படியானல் பங்கு நிதி நிர்வாகத்தை எப்படி பரிசீலிப்பது என்ற நடமுறை பிரச்சனை எழுகின்றது அல்லவா? அதற்கு எனது ஆலோசனை,  எமது பங்கிற்கு என்று தனியான ஒரு இணையத்தளம் இருக்கவேண்டும் அதில், நிதி துறைக்கென்று தனியான ஒரு பகுதி அமைக்கப்படவேண்டும், அந்த நிதி துறையை பேசாலை பங்கு மக்கள் மட்டும் பார்வை யிடுவதற்கான ஒரு முறையை அமுல்படுத்தவேண்டும்,  அவ ர்கள் ஏற்கனவே இணைத்தளத்தில் தங்களை பதிவு செய்து அதற்கான இரகசிய குறியீடை பெற்றுக்கொள்ளவேண்டும், நான் இங்கு ஒரு சர்வதேச அமைப்பின்  ஊடகத்துறைக்கு பொறுப்பாக இருந்தவேளை, எமது பங்கு மகன் அமலி வேலா யுதத்தின் மகன் அந்த தொழில் நுட்ப முறையை நோர்வேயில் இயங்கும் ஒரு நிறுவணத்திற்காக செய்திருந்தார் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன், கணனியில் பல வல்லுணர்கள் எமது ஊரிலே இப்போது இருக்கின்றார்கள் அவர்களின் உதவியை நாடலாம்.
                                                                          இணையத்தளத்தின் நிதி துறையில், பங்கு சபைக்கு வரும் அத்தனை வருவாய், செல வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும்,   அதற்கான கேள்விகள் கேட்பதற்கான Feed back முறை அங்கு இருக்க வேண்டும். இதனைவிட்டு பொதுச்சபை கூடி, ஒரு குருவா னவரை நடுவே நிறுத்தி கேள்வி கேட்டு அவமானப்படுத்தல் முறையான செயல் அல்ல, தகவல் அறியும் சட்டப்படி பங்கு மக்களுக்கு பங்கு நிதியில் என்ன நடக்கின்றது என்பதை பங்கு சபை அறிவிக்க க‌டமைப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு தகவல் பரிவர்த்தணை சிறப்பக இருக்குமேயானல், ஊழல், மோசடிகள் என்பன நடக்கவாய்ப்பே இல்லை. மேலும் இணை யத்தளம் ஊடாக கத்தோலிக்க இணைய வானொலி, வத்தி க்கான் வானொலி இவைகளை இணைத்து ஆன்மீகத்தில் முன்னேற முடியும் அதற்கான உதவிகளை நான் எப்பொழும் செய்ய தயாராக உள்ளேன்.
அன்புடன் பேசாலைதாஸ்