søndag 30. april 2017

நிலாவுக்கு ஒரு கடிதம்.

நிலாவுக்கு ஒரு கடிதம்.

நிலவே! நீ ஏன் முதுகை காட்ட மறுக்கின்றாய்?
காரணம் நான் அறியேன். இவ்வுலக மானிடர்கள் உன்னை வஞ்சித்ததாலா?
பிள்ளைக்கு சோறூட்டும் தாய் உன்னை ஏமாற்றி தன் பிள்ளைக்கு சோறூட்டியதாலா? அல்லது இரவானதும் மட்டும் உன்னை நினைப்பதினாலா? 
நீ ஏன் இன்னும்,இன்னும் இவர்களுக்கு வளர்ந்து தேய்ந்து வளர்ந்து தேய்ந்து நாட்கணிப்பை உணர்த்திக்கொண்டு இருக்கின்றாய்.
உன்னில் இருக்கும் கருமையை இற்றை வரைக்கும் யாரும் நீக்க முன்வரவில்லை. மாறாக இன்னும் இன்னுமாக உன்னை கருமையடையச்செய்கின்றார்கள். இங்குள்ள ஆயுதபலம் கொண்ட சிலர் சிறுபிள்ளைத்தனமான விளையாடப்போகின்றார்களாம். இதனால் நான் முன்னெச்சரிக்கை விடுக்கின்றேன். உன்னை படைத்தவன் பின்சென்று ஒழிந்து கொள்.
அப்புகைமண்டலம் ஓய்ந்த பின் உன்னை வானில் கண்டால் மீண்டும் கடிதம் எழுதுகின்றேன்.
இப்படிக்கு
நிலா ரசிகன்

Croos.

Ingen kommentarer:

Legg inn en kommentar

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள்

எமது பாடசாலையில் அன்னையர் தினத்தை நினைவு கூர்ந்து அதிபர்,ஆசிரியர் மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதைகள் அம்மா இன்னுமொரு பிறவி இ...